திடீரென நிறுத்தப்பட்ட உசிலம்பட்டி அரசுப் பேருந்து! 3கிலோமீட்டர் நடந்து செல்லும்
பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அவல நிலை!
நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டம்
உசிலம்பட்டி பேரையூர் நடுவே பழையூர் கிராமம் இருக்கிறது.

இந்த கிராமத்தில் சுமார் 900 வீடுகள் உள்ளன .3000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக சுமார் 1800 வாக்காளர்கள் இருப்பதாகவும் இந்த கிராமத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் பேரையூர் சாப்டூர் உசிலம்பட்டி ஆகிய ஊர்களுக்கு சென்று பயின்று வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இந்த கிராமத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உசிலம்பட்டி பேரையூர் சாப்டூர் மதுரை என தின கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். பழையூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் வெளியூருக்கு செல்வதற்கு ஒரே ஒரு அரசு பேருந்தை மட்டுமே நம்பி அதில் பயணம் செய்து வருகின்றனர். அந்தப் பேருந்து


உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து சாப்டூர் செல்லும் அரசு பேருந்து பழையூர் கிராமம் வழியாக சென்று வந்தது.
ஆனால் திடீரென சில நாட்களுக்கு முன்பு அரசு பேருந்து பழையூர் கிராமத்திற்குள் வராமல் நேராக சாப்டூர் க்கும் உசிலம்பட்டிக்கும் சென்று விடுகிறது.
இதனால் பழையூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் விவசாயிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்துக்காக பழையூர் பிரிவு 3 கிலோ மீட்டர் வரை நெடுந்தூரம் நடந்து சென்று உசிலம்பட்டி மற்றும் சாப்டூர் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதால்
பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அது மட்டும் இல்லாமல் பழையூர் பிரிவுக்கு பேருந்துக்காக மூன்று கிலோமீட்டர் நடந்து செல்வதால் குறிப்பிட்ட நேரத்திற்கு கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் மற்றும் பெரியவர்கள் முதியவர்கள் சிறுவர்கள் என அனைவரும் பேருந்துக்காக மூன்று கிலோமீட்டர் நடந்த செல்வதால் நேரம் விரயம் ஆவது உடன் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தற்போது சுட்டரிக்கும் வெயில் ஆரம்பித்துள்ளதால் 3 கிலோமீட்டர் நடந்து செல்ல முடியாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பள்ளி கல்லூரி மாணவர்களும் வரை உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும்
அதுமட்டுமில்லாமல் மாலை 6 மணிக்கு மேல் பழையூர் பிரிவில் கஞ்சா போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்
பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள் அச்சத்துடன் சென்று வருவதாகவும் ஆகவே
பள்ளி கல்லூரி மற்றும் கர்ப்பிணி பெண்கள் சிறுவர்கள் பெரியவர்கள் அனைவரின் நலன் கருதி
உசிலம்பட்டியில் இருந்து சாப்டூர் செல்லும் அரசு பேருந்து பழையூர் கிராமத்திற்கு எப்போதும் போல் வந்து செல்ல வேண்டும் என

தமிழக வெற்றிக்கழக கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். ஓ. பி .விஜய் மகாலிங்கம் ஆனையின்படி சேடப்பட்டி ஒன்றிய நிர்வாகி பெரியசாமி. ஏற்பாட்டில் பழையூர் கிளைச் செயலாளர் ஜெயக்குமார். தலைமையில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மதன். பழையூர் கிளை துணைச் செயலாளர் வெங்கடேசன். கிளை பொறுப்பாளர் துணைவன். ராஜேஷ். ரஞ்சித் குமார். முத்துராஜ். ராஜேஷ் முன்னிலையில்
பழையூர் பொது மக்களின் சார்பாகவும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் சார்பாகவும் உசிலம்பட்டி பேருந்து பணிமனை மேலாளர் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
எது எப்படியோ தற்போது வெயில் காலம் தொடங்கி இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பெரியவர்கள் முதியவர்கள் நலன் கருதி

உசிலம்பட்டியில் இருந்து செல்லும் அரசு பேருந்து பழையூர் கிராமத்திற்கு தினந்தோறும் சென்று வர மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் உசிலம்பட்டி போக்குவரத்து அரசுபேருந்து பணிமனை மேலாளர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.




