கன்டெய்னர் லாரியில் கார் மற்றும் கட்டு கட்டாக பணத்தை கடத்திச் சென்ற வட மாநில ஏடிஎம் கொள்ளை கும்பலை சுற்றி வளைத்து துப்பாக்கியால் திருச்செங்கோடு காவல் துறையின் சுட்டுப் பிடித்த பரபரப்பு சம்பவத்தின் வீடியோ!
திருடா திருடி திரைப்படத்தில் கன்டெய்னர் லாரிகள் பணத்தை கடத்திச் செல்வது போல் கேரளா மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை அடித்த பல லட்சம் ரூபாய் பணத்துடன் கொள்ளையடிக்க பயன்படுத்திய காரை கன்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு நாமக்கல் மாவட்டம் வெப்படை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வந்தபோது திருச்செங்கோடு டிஎஸ்பி தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் வெப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் கன்டெய்னர் லாரியை சுற்றி வளைத்து பிடித்து நிறுத்திய போது லாரியில் இருந்தவர்கள் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது
தற்காப்புக்காக காவல்துறையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இதில் கடத்தல் கும்பலால் ஆயுதங்களால் தாக்கியதில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரும் படுக்காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரையும் மேற்கு மண்டல டிஐஜி நேரில் சென்று ஆறுதல் கூறி நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார்.. காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் கொள்ளையன் ஒருவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் .மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்து கண்டெய்னர் லாரி மற்றும் கண்டெய்னர் லாரியில் இருந்த கார் மற்றும் பல லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து மேற்கொண்டு இந்தக் கடத்தல் கும்பல் இதுபோன்ற சம்பவங்களில் வேறு எங்காவது செய்து உள்ளார்களா என விசாரணையை வெப்படை காவல் நிலையத்தில் நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொடர் ஏடிஎம் கொல்லையில் ஈடுபட்டு வந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.