திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் கொடி கட்டு பறக்கும் லஞ்சம் ஊழல் முறைகேடு!
திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வாக பொது மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா!?

திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் உள்ள ஆவின் நிறுவனத்தில் புதிய அலுவலக கட்டிடம் செயல்பட்டு வருகிறது .


ஆவின் பொது மேலாளராக சுஜாதா இருக்கிறார் .

துணைப்பதிவாளர் ஆவின் இரா. கணேசன் இருக்கிறார்.
திருப்பூர் ஆவின் நிர்வாகத்திலும் மற்றும் நிறுவனத்தின் பால், தயிர், மோர் விநியோகம் செய்வதில் முறை கேடுகள் மற்றும் குளறுபடிகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஆவின் பொருட்கள் விற்பனை செய்யும் டீலர்களுக்கு லாபம் குறைவாக இருப்பதால், அவர்கள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திப்பதாக சில கருத்துக்கள் உள்ளன.
திருப்பூர் ஆவின் நிர்வாகத்தை பொறுத்தவரை கடந்த 6 மாதங்களாக லஞ்ச ஊழல் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளுடன் இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் ஆவின் நிர்வாகத்தில் நடக்கும் லஞ்சம் ஊழல் முறைகேட்டை நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா என தெரியாமல் ஆவின் பாலகம் வைத்திருப்பவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதற்கு உதாரணமாக
கடந்த 2025 ஏப்ரல் மே ஆகிய இரண்டு மாதங்கள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசு பொதுமக்கள் அதிகக்கூடும் இடங்களில் நீர் நீர்மோர் மற்றும் ஓ ஆர் எஸ் பொடிகளை வழங்க உத்தரவிட்டது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு சேவைகளை பெற வரும் பொது மக்களுக்கு

மாவட்ட நிர்வாகம் சார்பாக இலவச நீர் மோர் வழங்கும் பணி 2025 ஏப்ரல் 29ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். இதற்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகத்தில் இருந்து தினந்தோறும் 50 லிட்டர் தயிர் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இதற்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 3500 வீதம் மாதம் இரண்டு மாதத்திற்கு சுமார் ஒன்றரை லட்சம் வரை தயிர் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதில் என்ன வேதனை என்றால் இதுவரைக்கும் அதற்கான பணத்தை ஆவின் நிறுவனத்திற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் இருந்து செலுத்தவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இது சம்பந்தமாக விசாரித்த போது திடுக்கிடும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
அது என்னவென்றால் முன்னாள் மாவட்ட ஆட்சியராக இருந்த கிறிஸ்தவராஜ் திருப்பூர் மாவட்ட ஆவின் மேலாளர் சுஜாதா அவர்களிடம் தினந்தோறும் 50 லிட்டர் தயிர் மற்றும் ஆயிரம் பாக்கெட் மில்க் ஷேக் அனுப்புமாறு கூறியுள்ளார். அதற்கு திருப்பூர் மாவட்ட ஆவின் மேலாளர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகத்தில் இருந்து

தினந்தோறும் 50 லிட்டர் தயிர் மற்றும் ஆயிரம் பாக்கெட் மில்க் ஷேக் வழங்குமாறு கூறியுள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகத்தில் இருந்து வழங்கியுள்ளனர்.அதற்கு சுமார் 2 லட்சம் வரை செலவாகி உள்ளது.
ஆனால் அதற்கான பணத்தை முன்னாள் இருந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் ஆவின் பாலகத்திற்கு வழங்கவில்லை என்றும் தற்போது வரை அந்த பணம் ஆவின் நிர்வாகத்திற்கு செல்லவில்லை என்றும் இந்த முறைகேட்டை திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வாகம் மூடி மறைத்து வந்த நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற பின்பு அந்தப் பணத்தை கேட்க முடியாத திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வாக மேலாளர் சுஜாதா சில தினங்களுக்கு முன்பு
திருப்பூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிக்கு பணம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது. சம்பந்தமே இல்லாமல் மாவட்ட குடிமை பொருள் அதிகாரியிடம் பணம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது வினோதமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை, பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்வதற்காகவும், அரசு நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும், பல மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் செயல்படுத்தப்படுகிறது .இந்த முறையானது அரசு ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், ஊழலைக் குறைக்கவும் உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வாகத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் வருகை பதிவேடு பயோ மெட்ரிக் முறையில் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த பயோமெட்ரிக் வருகை பதிவேடு செயலிழந்து இருப்பதாகவும் அதற்கு பதிலாக வருகை பதிவேட்டில் கையால் எழுதப்பட்டு வருவதாகவும் .
இதில் பல முறைகேடுகள் நடந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வாகத்தில் பணியில் இருக்கும் ஒரு சில அதிகாரிகள் மாதக்கணக்கில் விடுமுறை எடுத்து வருவதாகவும் ஆனால் வருகை பதிவேட்டில் வேலைக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதில் பாகுபாடு பார்க்கப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக திருப்பூர் ஆவின் நிர்வாகத்தில் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு (பி எல்) (எம் எல் )(சி எல்) என விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி விடுமுறையில் செல்லும் ஒரு சில ஊழியர்களுக்கு திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வாக மேலாளர் பணிக்கு வரவில்லை என பதிவேட்டில் திருத்தம் செய்து வைத்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எது எப்படியோ திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வாகத்தில் நடக்கும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் நடப்பதாக வந்துள்ள குற்றச்சாட்டின் மீது உண்மைத்தன்மை அறிய

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும்

திருப்பூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மணீஷ் எஸ். நர்னாவேர் மற்றும்

பால்வளத்துறைச் செயலாளர் சுப்பைய்யன் ஐஏஎஸ், ஆவின் மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை ஐஏஎஸ்., ஆகியோர் நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்தி திருப்பூர் மாவட்ட ஆவின் நிர்வாகத்தில் லஞ்ச ஊழல் முறைகேடு நடந்திருந்தால் அவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.