காவல் செய்திகள்


திருமணம் ஆகாத இளைஞர்களை குறி வைத்து கோவையில் கேரளா ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் நூதன
மோசடி செய்த கும்பல் வலை வீசி தேடி வரும் கோவை சைபர் கிரைம் போலீஸ்!

கோவை
படித்த வசதி படைத்த
இளைஞர்களை குறி வைத்து ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் நூதன
மோசடி செய்த கும்பல்!

கோவையில் ஓழுக்கத்தை கற்றுத்தரும் உதவி
பேராசிரியர்
சபலத்தால் லட்சங்களை இழந்த பரிதாபம்
மசாஜ்
சிகிச்சை செய்வதாக கூறி மயக்கிய நபர்களால் ஏமாற்றம்
கோவை தொழில் வளம் மிக்க பகுதி, இங்கே கடை நிலை ஊழியர் முதல் முதலாளிகள் வரை, உழைப்பு ஒன்றே உயர்வு தரும் என்ற சொல்லுக்கு ஏற்ப, சுழன்று திரிந்து பணம் ஈட்டும் மனிதர்களே இங்கே அதிகம்,
இதில் இங்கே கோவையில் தொழில் செய்யவும், வேலை பார்க்கவும், பிற மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள் தோறும் ஆயிரக்கணக்கில் கோவை பகுதிகளில் வேலை தேடி வந்த வணணம் உள்ளனர்,
அதே பொழுது போக்கு அம்சங்களும், மால்,தியேட்டர், பூங்காக்களும் குறைவில்லை,
கோவை சுற்றி மலை சார்ந்த பகுதி என மனதுக்கு இதம் அளிக்கும் இடங்களும் அதிகமாக உள்ளன,

இதை எல்லாம் விட ஆண்கள், பெண்கள் தங்களை அழகு படுத்தவும், உடலை மெறுகு ஏற்றவும், தங்களை இளமை போல காட்டிக்கொள்ளுபவர்களை குறி வைத்து,
கோவை பகுதிகளில்
மசாஜ்
சென்டர்கள் என்ற பெயரில் எங்கு பார்த்தாலும் உள்ளன, (இதனை ஒழுங்கு படுத்தினால் நல்லது) இவைகளில் ஆயுர்வேத மஜாஜ், ஐஸ் மஜாஜ், ஆயில் மஜாஜ் என பல பெயரில் கவர்ச்சி விளம்பரம் செய்து பணம் பறிக்கும் நோக்கில், குறிப்பாக இளைஞர்களையும், திருமணமாகாத முதிர் கன்னிகள், வயோதிகளை குறி வைக்கும், கில்லாடிகள் திரிகின்றனர்,
அப்படி இவர்கள் வலைவீசி பிடிக்கும் நபர்களிடம் முதலில் அவர்களை பற்றியை முழு விபரங்களை தெரிந்து கொண்டு பின் அவர்களது சபலத்தை (சல்பபுத்தியை) தூண்டி விட்டு, தங்களது வலையில் விழ வைக்கின்றனர், இதில் பணத்தை லட்சங்களிலும் ,ஏன் கோடிகளில் பணத்தை இழந்து தெரு கோடியில் நின்றவர்களும் உண்டு ,

அப்படி ஒரு சம்பவம் தான் கோவை நகரில் அரங்கேறி உள்ளது,
கோவை தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்ப்பவர் (அவரது உண்மை பெயர் ராதாகிருஷ்ணன், தந்தை பெயர் கண்ணன்) 43வயது ராஜேந்திரன் பெயர் மாற்றம் செய்துள்ளேன் இவர் கோவையில் பிரபலமான தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக 10 ஆண்டாக பணி செய்து வருகிறார்,
பேராசிரியர் பணியில்
வெள்ளக்காரனாக மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தரும் பணியில் சிறந்தவராக இருந்தாக சொல்லபடுகிறது,
ஒரளவுக்கு வசதி வாய்ப்புகள் இருந்தும், இவருக்கு திருமண வயது கடந்தும் பொறுப்பாக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தாய் தந்தை இல்லாததால் கல்யாணமும் தள்ளி போய் கொண்டே உள்ளது என தெரிகிறது,இப்படி இருக்க சித்த மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளை புத்தகங்களிலும், யூடிப் சானலிலும் பார்த்தும் நண்பர்கள், உறவினர்களுக்கு உடலை ஆரோக்கியமாக வைக்க பல டிப்ஸ்களை சொல்லியுள்ளார் அதில் இவருக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன்
இப்படி நாளும் நேரமும் போக கடந்த செப்டம்பர் மாதம் இவரது செல் போனில் ஒரு விளம்பரம் வந்துள்ளன ,அதில் உடலை ஆயுர்வேத சிகிச்சை முறையில் இளமையாக வைத்துக்கொள்ளுவது எப்படி, இளமையாக வசிகரமாக இருக்க புதிய ஆயுர்வேத சிகிச்சை முறை எனவும், இதை நாங்கள் தான் இந்த சிகிச்சை முறையை அறிமுகம் செய்வதாகவும் ,மேலும் விபரம் அறிய இந்த நம்பரில் பேசுங்கள் என்ற விளம்பரத்தை பாரத்துள்ளார் உதவி பேராசிரியர்,

இதனை கண்ட உதவி பேராசிரியர் அந்த நம்பரில் பேசி உள்ளார், எதிரில் பேசிய பெண் முதலில் உங்கள் விபரங்களை சொல்லுங்கள் என்ன வேலை ??, திருமணம் ஆனவர???,வருமானம் என்ன???,சொந்த வீடா?? எதில் உங்களுக்கு ஆர்வம் ஒரு பெரிய விபரத்தை கேட்டு தெரிந்து கொள்ளுகிறார்கள், அனைத்தையும் சொல்லி உள்ளார் உதவி பேராசிரியர் ராஜேந்திரன்,
உடனே எதிர் முனையில் நீங்கள் உண்மையில் லக்கி மேன் சார், ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிகிச்சையை உங்களுக்கு குறைந்த விலையில் செய்ய உங்களை தேர்வு செய்து இருக்கோம்,மேலும் எங்களுடன் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்று ஆசைகள் வார்த்தைகள் விட மயங்கி போன உதவி பேராசிரியர் ,


அதன் பின் உதவி பேராசிரியரை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்க முதலில் முன் பணம் செலுத்த வேண்டும் என கூற ,உதவி பேராசிரியர் தனது வங்கி கணக்கில் இருந்து முதலில் பத்தாயிரம், ஐம்பதாயிரம், லட்சம் என மூன்று லட்சம் ரூபாய் வரை மஜாஜ் சென்டர் கார்களுக்கு அனுப்பி உள்ளார், இனி எப்போது சிகிச்சை தொடங்க போறேங்க என்று உதவி பேராசிரியர் போனில் கேட்க, உங்கள் வீட்டு நாளைக்கு வந்து சிகிச்சை அளிக்க வருகிறோம், என்று மஜாஜ் சென்டர் பார்ட்டி கூற ,இல்லை இல்லை நான் உங்கள் சென்டருக்கு வருகிறேன் என்கிறார்,

இதை புரிந்து கொண்ட மஜாஜ் பார்ட்டி,
சார் இங்கே நிறைய பேர் வர்றாங்க, உங்களுக்கு சிகிச்சை அளிக்க புது சிகிச்சை மிஷின் வர வழைக்க போறோம்,மேலும் கேரளாவில் இருந்து புதுசா மஜாஜ் ஆட்கள் கொண்டு வர போறோம் ,அதற்கு நீங்க உங்கள் சிகிச்சை பணத்தை இப்ப முழுமையாக கட்டுங்க, அப்புறம் உங்களுக்கு நாள் நேரம் ஒதுக்கி தருகிறோம் அப்ப வந்து நீங்கள் மஜாஜ் சிகிச்சை முறைகளையும், உங்களுக்கு மஜாஜ்ம் செய்து கொள்ளலாம் என்று ஆசை காட்டி பேச , சரி என்று உதவி பேராசிரியர் ராஜேந்திரன் ரூபாய் நான்கு லட்சத்தை தனது வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் மொத்தம் ஏழு லட்சத்தி இருபது ஆயிரம் வரை அனுப்பி வைத்து உள்ளார்,
பணம் அனுப்பி ஒரு வாரம் ஆகியும் தன்னை அழைக்காமல் இருப்பதை அறிந்து போனில் தொடர்பு கொண்டு உள்ளார், அழைப்பு கிடைக்காதால், சரி என்று அவர்கள் சொன்ன முகவரி இடத்தை தேடி, கோவை அவினாசி சாலை, ஹோப் கல்லூரி பஸ் ஸ்டாப் பகுதியில் சென்று பார்த்து விசாரிக்க அப்படி ஒரு மஜாஜ் சிகிச்சை சென்டர் இல்லை என்று அருகே உள்ளவர்கள் கூற தான் ஏமாந்து போனது குறித்து அதிர்ச்சி அடைந்து போய் உள்ளார், உதவி பேராசிரியர்,
நண்பர்கள் உதவியுடன் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார், உதவி பேராசிரியர் தான் ஏமாற்றம் அடைந்ததை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்,
எங்கே தன் மானம் போய் விடுமோ என பயந்து போனார் என காவல்துறையினர் நம்மிடம் தெரிவித்தனர்,


தொடர்ந்து கோவை சைபர் கிரைம் போலீஸார் கூறுகையில், பாதிக்க பட்ட உதவி பேராசிரியர் புகார் மனு கொடுத்துள்ளார், அவர் கூறும் இடத்தில் அப்படி ஒரு கேரளா மஜாஜ் சென்டர் இல்லை, இவரை போனில் பேசி ஏமாற்றி உள்ளனர், அந்த குற்றவாளிகளை விரைந்து பிடித்து விடுவோம், பொதுமக்கள் கவர்ச்சியான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டும், இப்போது இணைய வழியில் குற்றம் செய்பவர்கள் எணணிக்கை அதிகரித்துள்ளது, தமிழக காவல்துறையும் பல்வேறு வகைகளில் சைபர் கிரைம் குற்றங்களை தடுத்தும் வருகிறது, இருப்பினும்
பொதுமக்கள் தாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button