திருமணம் செய்ய சொல்லி இன்ஸ்டாவில் தொடர்ந்து மிரட்டி வந்த கஞ்சா போதை வாலிபர்!
தற்கொலை செய்து கொண்ட ஐடி நிறுவனத்தில் வேலை செய்த பெண்ணின் சோக சம்பவம்!

மதுரை T.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கமலி என்ற (காஞ்சனா தேவி) இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகர் வ உ சி தெருவில் வாடகைக்கு ஒரு அரை எடுத்து தங்கி அருகில் உள்ள சுசி சிஸ்டம் என்ற தனியார் ஐடி நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 21/06/25 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு மேல் தான் தங்கி இருந்த விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பின்பு கண்ணகி நகர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்பு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அவரது உடன் பிறந்த சகோதரிக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் உறவினர்கள்

கண்ணகி நகர் .15காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்துள்ளனர் அந்தப் புகாரில் தற்கொலை செய்வதற்கு கார்த்திக் என்ற நபர் மீதுதான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரைப்பெற்றுக் கொண்ட கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின் பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் சொந்த ஊரான மதுரை வாடிப்பட்டிக்கு உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
தற்போது
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மன உளைச்சலால் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என உறவினர்கள்
மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்தனர்.

கோவை அரசு பொறியியல் கல்லூரி G C T COLLEGE ல் மெக்கானிக்கல் இன்ஜினியராக மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு Dynamo chemicals என்ற நிறுவனத்தில் பகுதிநேர வேலை பார்த்து வருகிறான் கார்த்தி என்ற நபரின் சொந்த ஊர் மதுரை வாடிப்பட்டி. இவருடைய தாத்தா கறிக்கடை அழகர் . இவருடைய அப்பா பெயர் துரை தற்போது சூலூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார்.. கார்த்திக் என்ற நபரின் தந்தையுடன் பிறந்த சகோதரி அம்சா என்ற அன்னலட்சுமி (கணவர் பெயர் நிலா மோகன்)
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் பிரிவில் தற்போது வேலை செய்து வருகிறார்.

கார்த்தி சூலூர் அருகே அவரது வீட்டில் தனியாக இருக்கிறார்.

10 வருடங்களுக்கு முன்பு வாடிப்பட்டியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது (அப்போது வயது 14)
கார்த்தி என்ற (தற்போது வயது 24) இந்தப் பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
அந்த நட்பை வைத்து கோயமுத்தூரில் ராமகிருஷ்ணா கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த காஞ்சனா தேவிக்கு தொடர்ந்து போன் செய்து காதலிக்கப்பதாக கூறிவந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் நட்பாக மட்டுமே பழகுகிறேன் எனக் கூறி வந்த நிலையில் கார்த்தியும் சூலூர் பேருந்து நிலையம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வரும் அவரது நண்பருமான பொன்னரசு (வயது 24) ஆகிய இருவரும் தொடர்ந்து இந்த பெண்ணிடம் காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளனர்.
ஆனால் கார்த்தி மற்றும் அவரது நண்பர் பொன்னரசு மற்றும் அவனது நண்பர்கள் அனைவரின் நடத்தை சரியில்லை என போகப் போக தெரிந்துள்ளது .

கார்த்தி கஞ்சா போதைக்கு அடிமையானவன் என்றும் தகவல் தெரிந்துள்ளது.
அதன் பின்னர் கார்த்தியின் நண்பன் பொன்னரசு (வயது 24 ) பொன்னரசியின் அம்மா வாடிப்பட்டி பகுதியில் பள்ளி ஆசிரியராக இருக்கிறார்.
கார்த்தி பொன்னரசு ஆகிய இருவரின் கூட்டாளிகள் அனைவருமே கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் இந்தப் பெண்ணிற்கு தெரியவந்துள்ளது . அதன் பின்னர் இந்தப் பெண் கார்த்தி என்ற நபரிடம் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் இருந்து நட்பை துண்டிக்க முயற்சி செய்துள்ளார் அதன் பின்னர் அந்தப் பெண் சென்னை தனியார் ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சென்று விட்டார் இந்த நிலையில் கடந்த ஒரு வருடம் ஆக திருமணம் செய்யச் சொல்லி கஞ்சா போதையில் அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் இல்
தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். ஆனால் இதையெல்லாம் அவர்கள் உறவினர்களிடம் காட்டிக்கொள்ளாமல் ஜூன் மாதம் 10 ஆம் தேதி வாடிப்பட்டியில் நடக்கும் கோவில் திருவிழாவிற்காக அந்தப் பெண் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடன் சந்தோசமாக இருந்து
ஆனால் கார்த்தி மிரட்டி வந்ததை வீட்டில் சொல்ல முடியாத அந்தப் பெண் விடுமுறை முடிந்து சென்னைக்கு வேலைக்கு சென்ற பின்பு கடந்த 15 ஆம் தேதியிலிருந்து

போதைக்கு அடிமையாக இருந்த கார்த்தி என்ற நபர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்து மிரட்டி வந்துள்ளார் .இதனால்
மன உளைச்சலால் இருந்தப் பெண்

கார்த்தியின் நண்பரான பொன்னரசுக்கு அண்ணா கார்த்தியை எனக்குப் பிடிக்காததால் நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன் என்றும் திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை என்னை வற்புறுத்த வேண்டாம் என்னை விட்டு விடச் சொல்லுங்கள் என

18 ஆம் தேதி இன்ஸ்ட்டாவில் உதவி கேட்டு மெசேஜ் அனுப்பி உள்ளார். ஆனால் அதற்கு பொன்னரசு என்ற நண்பர் அதெல்லாம் சரியாகிவிடும் நீ உடனே சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு கிளம்பி வா பேசிக் கொள்ளலாம் என இந்த பெண்ணை பொன்னரசு மெசேஜ் செய்து அழைத்துள்ளான். அந்த மெசேஜை பார்த்த இந்த பெண் அவனும் உதவி செய்யவில்லை என தெரிந்து கொண்டு வேற வழி இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு முழுவது தூக்கம் இல்லாமல் இரவு முழுவதும் மன உளைச்சலில் இருந்ததால் நிறுவனத்தில் வேலை செய்ய முடியாமலும் இருந்துள்ளது.
இந்த பெண்ணுடன் வேலை பார்த்து தங்கி வந்துள்ள மற்றொரு பெண்ணுக்கும் இது அனைத்தும் தெரிந்தும் அந்தப் பெண்ணும் உறவினர்களுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்துள்ளார்

அதன் பின்னர் கார்த்தி என்ற நபர் கஞ்சா போதையில் 21 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் சூலூர் பகுதியில் காஞ்சனா தேவியின் சித்தப்பா மகன் ராகுல் பாலா தங்கியிருக்கும் சிங்காநல்லூர் பகுதியில் இருக்கும் நிவீட்டிற்கு பொன்னரசு சென்றுள்ளார் அதன் பின்ன அந்த வீட்டிற்கு காலை 10 மணி அளவில் கார்த்தியும் சென்றுள்ளான். கார்த்தி ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து காஞ்சனா தேவிக்கு Instagram மற்றும் whatsapp இல் மிரட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார்கள்.

அந்த மெசேஜை காஞ்சனா தேவி பார்த்துவிட்டு மன உளைச்சலில் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் இலக்கிய
ஶ்ரீனிவாஸ் ஆகிய இரண்டு பேருக்கும் 21 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு அணிக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் உடனே அந்த மெசேஜை பார்க்காமல் அன்று மதியம் ஒரு மணிக்கு மேல் தான் அந்த மெசேஜை பார்த்துள்ளனர்.
அதன் பின்பு இந்த பெண்ணிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசியை எடுக்கவில்லை சந்தேகம் அடைந்த அந்தப் பெண்கள் உடனே இந்த பெண்ணுடன் தங்கி இருந்த பெண்ணுக்கு தகவல் கொடுத்துள்ளனர் அந்தப் பெண்ணும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசி எடுக்கவில்லை .
உடனே அந்தப் பெண் புறப்பட்டு தான் தங்கியிருக்கும் இடத்திற்கு மதியம் 1:30 மணிக்கு வந்து பார்த்தபோது தங்கி இருந்த அறையின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்துள்ளார்.
ஆனால் தற்கொலை செய்து கொண்ட அந்தப் பெண் பயன்படுத்தி வந்த டேப் இல் கார்த்தி என்ற நபர் பொன்னரசன் என்ற நபர் இரண்டு பேரும் இன்ஸ்டால் மாறி மாறி திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி மிரட்டி அனுப்பிய மெசேஜ் அனைத்தும் வைத்து பார்த்து பார்க்கும்போது இந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு
கார்த்தி என்ற நபர் மற்றும் அவரது நண்பர் பொன்னரசு இரண்டு பேர் காரணம் என தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் சனிக்கிழமை அன்று ஒரு மணிக்கு கார்த்தி தேர்வு எழுத சென்றதாகவும் அந்த நேரத்தில் தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறார். மாலை 3:30 மணிக்கு மேல் கார்த்தியின் அக்கா மற்றும் அத்தை மகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கார்த்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டதற்கு அவரது செல் சுட்ச் ஆப் செய்திருந்ததால் அதன் பின்னர் கார்த்தியின் நண்பன் பொன்னரசுக்கு போன் செய்து காஞ்சனா தேவி தற்கொலை செய்து கொண்ட தகவலை தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த தகவலை பொன்னரசு ராகுல் பாலாவிடம் கூறாமல் மறைத்துள்ளான்.
3.30 மணிக்கு ராகுல் பாலாவுக்கு அவரது சித்தப்பா போன் செய்து காஞ்சனா தற்கொலை செய்து கொண்டது தெரிவித்துள்ளார். உடனே ராகுல் பாலா சிங்காநல்லூரில் இருந்து வாடிப்பட்டிக்கு கிளம்பி வந்துள்ளார். அப்போது கூட பொன்னரசு எதுவுமே தெரியாதது போல் இருந்துள்ளார்.
அதன் பின்னர் சனிக்கிழமை நான்கு மணிக்கு தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த கார்த்தி செல்போனை ஆன் செய்துள்ளான். அதன் பின்னர் தான் பொன்னரசுக்கு தொடர்பு காஞ்சனா தேவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை பற்றி பொன்னரசும் கார்த்தியும் மற்றும் கார்த்தியின் உறவினர்கள் அனைவரும் தொடர்ந்து பேசியுள்ளனர்.அதன் பின்னர் வாடிப்பட்டியில் இருக்கும் கார்த்தியின் அத்தை அம்சா கார்த்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு காஞ்சனா தேவி தற்கொலை செய்து கொண்டதை பற்றி காவல்துறையினர் கேட்டால் தைரியமாக நீ பேசு பயப்படாதே எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் பொன்னரசு கார்த்தி இரண்டு பேரும் கார்த்தியின் அத்தை வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆனால் திருமணம் ஆகாத 24 வயது பெண் தற்கொலை செய்து கொண்டதை தாங்க முடியாத காஞ்சனா தேவியின் ஒட்டுமொத்த உறவினர்களும் துர்க்கத்தில் மூழ்கியுள்ளனர் . என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ பள்ளி படிக்கும் காலத்தில்
நட்பாக பழகி வரும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி மிரட்டுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆகவே காவல்துறையினர்
தற்கொலைக்கான காரணத்தை மூடி மறைக்க முயற்சி செய்யாமல் உறவினர்கள் கொடுத்துள்ள ஆதாரத்தை வைத்து
தீவிர விசாரணை செய்து தற்கொலைக்கு காரணமான கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர் பொன்னரசு ஆகிய இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் மட்டுமே இது போன்ற தொடர் பெண்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம் காவல்துறை உயர் அதிகாரிகளின்
நடவடிக்கையை!