மாவட்டச் செய்திகள்

தேங்கி நிற்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு…!சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்ட கால்வாய் !நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வட மதுரையின் ஒட்டுமொத்த கழிவுகளும் சேரும் இடமாக உள்ளது மந்தை குளம் இது சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது .

குளத்து கரையின் மீது கடந்த ஆண்டு சுமார் 7.5 கோடி மதிப்பீட்டில் நடைபாதை மேடை அமைத்து

தினசரி சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்
இந்த குளத்திற்கு வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் தொடங்கி அனைத்து தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர் மந்தை குளத்தில் சென்று சேருகிறது கடந்த சில நாட்கள் பெய்த மழைக்கு குளம் முழுவதும் நிரம்பி காணப்படுகிறது மந்தை குளத்தின் கழிவு நீர் மறுக்கால் பாயும் நிலையில் உள்ளதால் 60 அடி அகலம் உள்ள மறுகால் பாயும் வாய்க்கால் முழுவதும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு கால்வாய் முழுவதும் மலை போல் கழிவு குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. கால்வாயில் கொட்டப்பட்டு வரும் கழிவு குப்பைகள் பல மாதங்களாக அப்படியே தேங்கி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதால் கழிவுநீர், மழைநீர் அந்த கால்வாயில் செல்ல முடியாமல் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் மழைநீர், கழிவுநீர் கால்வாய் அடைப்பால் வெள்ள பாதிப்படைந்து ஊருக்குள் புகுந்து தெருக்களில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது .அதுமட்டுமில்லாமல் தொற்று நோய் ஏற்ப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது . இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் கூறும்போது வேடசந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் தினந்தோறும் தூய்மை பணியாளர்களைக் கொண்டு சேகரிக்கும் குப்பை, திருமண மண்டபங்களில் சேரும் குப்பைகள் மற்றும் கடைகளில் உள்ள குப்பைகள் வணிக வளாகங்கள் உணவகங்கள் தனியார் விடுதிகள் ஆகியவற்றில் இருந்து கழிவு குப்பைகளை கொண்டு வந்து இந்த கால்வாயில் கொட்டுவதாகவும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் நிறைந்து தண்ணீர் வெளியேற முடியாமல் கால்வாயில் கழிவு நீர் தேங்கி உள்ளது.இதனால் பொதுமக்களுக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சுற்றியுள்ள நீர் நிலைகள் மாசடைவதாகவும் இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை என்றும் கால்வாய் முழுவதும் கழிவு குப்பைகள் நிறைந்து நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு கால்வாய் எங்கே இருக்கின்றது என்று தேடும் அளவிற்கு இருப்பதாகவும் ஆகவே உடனடியாக கால்வாயில் உள்ள கழிவுக்கு குப்பைகளை அகற்றி கால்வாயை சீரமைத்து மழைநீர் மற்றும் கழிவு நீர் ஊருக்குள் செல்லாமல் கால்வாயில் செல்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எது எப்படியோ சுகாதாரமற்ற நிலையில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவு குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் அது மட்டும் இல்லாமல் கால்வாயில் கழிவு குப்பைகளை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் தற்போது கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் நலன் கருதி குப்பை கழிவுகளை கொட்ட மாற்று இடம் ஏற்படுத்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வடமதுரை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Articles

Back to top button