தேனி மாவட்ட 22 பேரூராட்சிகளில் ஊழலோ ஊழல்!! நடவடிக்கை எடுக்க தயங்கும் தேனி மாவட்ட ஆட்சியர்!? சாட்டையை சுழற்றுவாரா ஊரக வளர்ச்சி இயக்குநர்!?
தேனி வடுகபட்டி பேரூராட்சியில் ஊழலோ ஊழல்!
எப்போது ஒரு நாடு ஊழலற்ற நாடாகமாறுகின்றதோ அப்பொழுதான் அந்த நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கை தரமும் வளர்ச்சி அடையும். நாட்டில் நடக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டியது ஒவ்வொருவருடைய அத்தியாய கடமைகளில் ஒன்றாகும். இந்தியா மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. ஊழல் காரணமாக அனைத்து நாடுகளின் ஜனநாயகம் பாதிப்படைகின்றது.சிறு ஊழல் கூட அரசினைப் பெரிதும் பாதிக்கின்றது. இத்தகைய ஊழலானது தீராத பிரச்சனையாக சமூகத்தில் இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஊழலை ஒழிப்பது என்பது அவசியமான ஒன்றாகும்.பண மோசடித் தடுப்புச் சட்டங்கள்”, “ஊழல் தடுப்பு சட்டம்-1988” போன்ற பல சட்டங்கள் இந்தியாவிலுள்ள போதிலும் ஊழல் மோசடிகள் லஞ்சம் போன்றவை சமூகத்தில் அதிகமாகவே காணப்படுகின்றன.ஒரு அதிகாரியின் அதிகாரத்தினால் மட்டும் ஊழல் நடைபெறுவதில்லை. சுயநலம் உள்ள மனிதர்கள் தம் தேவைகளுக்காகவும்⸴ விருப்பங்களுக்காகவும் லஞ்சம் கொடுக்கின்றனர்.
தேனி மாவட்டம்
வடுகபட்டி பேரூராட்சி (தேர்வுநிலை)
வருவாய் கிராமம் நில அளவை எண் 330 முதல் 362 வரையிலும் 369 முதல் 1018 வரையிலும் 1021, 1030 பகுதி பி 1034 முதல் 1159 வரையிலும் தாமரைக்குளம் வருவாய் கிராம பகுதி நில அளவை எண் 561 முதல் 673 முடிய பரப்பளவு 0.5125 ச.கி.மீ ஆக உள்ளது.
பேரூராட்சியால் பராமரிக்கப்படும் தெரு விளக்குகள் விபரம்
1. 40 வாட்ஸ் குழல் விளக்குகள் 100
2. CFL 36 வாட்ஸ் விளக்குகள் 250
3. சோடியம் ஆவி விளக்குகள் 24
4. பாதர ஆசி விளக்குகள் 5
5. iஉறமாஸ் விளக்குகள் 1
6. LED 85
மொத்தம் 465. பல வருடங்களாக தேனி மாவட்டம் வடுக்கபட்டி பேரூராட்சி நிர்வாகத்தில் பொருட்களை வாங்காமல் பல கோடி ரூபாய்க்கு பில் மட்டும் வைத்துள்ளனர். அப்படி வாங்கப்பட்ட பில்களில் ஜிஎஸ்டி நம்பர் மற்றும் ஜி எஸ் டி வரி இல்லாமல் வாங்கி ஊழல் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதுவும் குறிப்பாக ஒரே உரிமையாளர் மூன்று பெயர்களில் வைத்துள்ள நிறுவனங்களில் மட்டுமே ஒப்பந்தம் பெறப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் முக்கியமாக பேரூராட்சி தீர்மான எண் 142.நாள் 08/02/2021
ஆன்லைன் மூலம் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ள பேரூராட்சி அலுவலகத்திற்கு வீடியோ கேமரா ப்ரொஜெக்டர் ஸ்பீக்கர் கொள்முதல் செய்ய பெறப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களில் மகாலட்சுமி டிரேடர்ஸ் புதுக்கோட்டை( GST no.33EMS PS 6402N1NC.) என்ற நிறுவனம் குறைந்த விலையில் ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டு அது ஒப்புதல் வழங்கப்பட்டு கொள்முதல் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரூராட்சி உதவி இயக்குனர் குறிப்பானை எண் 890/221( 01/04/2021) கொள்முதல் செய்ய இருந்த பட்டியலுக்கு ஒப்புதல் பெறப்ப்பட்டுள்ளது. வீடியோ ப்ரொஜெக்டர் கேமரா ஸ்பீக்கர் கொள்முதல் செய்யப்பட்ட விலை 3,96,559 ரூபாய்.
1.ஆனால் ஒப்பந்த விதிகளின்படி பதிவு பெற்ற நிறுவனங்களிலிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்ட விவரம் செலவு கணக்குகளுடன் இணைக்கப்படவில்லை.
2. இரண்டு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொருட்கள் தரமானதா என்பதை தணிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
வெளிச்சந்தையில் என்ன விலை என்பதும் குறிப்பிடப்படவில்லை
தொகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை தணிக்கைக்கு காண்பிக்கப்படவில்லை
பொருட்களின் உத்தரவாதத்திற்கான ஆவணங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை.
அதுமட்டுமில்லாமல் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு சேவை வரி இரண்டு சதவீதம் 7932 ரூபாய் பிடித்தம் செய்திருக்க வேண்டும்.
ஒப்பந்தம் விதிகளின்படி வைப்புத்தொகை பிடித்தம் செய்யாமல் முழுத்தொகை கொடுக்கப்பட்டது ஏன்!?
இத்தனை நிபந்தனைகளை காற்றில் பறக்க விட்டு வடுகபட்டி பேரூராட்சி நிர்வாகம் 4 லட்ச ரூபாய் பொருள் வாங்கியதாக ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதே போல் தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சி மன்றங்கள் உள்ளது.
ஆண்டிபட்டி,போ.மீனாட்சிபுரம் பூதிப்புரம்,தேவதானப்பட்டி
கெங்குவார்பட்டி,அனுமந்தன்பட்டி,
ஹைவேவிஸ்,
காமயக்கவுண்டன்பட்டி,கோம்பை
குச்சனூர்,மார்க்கையன்கோட்டை
மேலச்சொக்கநாதபுரம்,ஓடைப்பட்டி
பழனிசெட்டிபட்டி,பண்ணைப்புரம்
புதுப்பட்டி,தாமரைக்குளம், தென்கரை,தேவாரம்
உத்தமபாளையம்,வடுகபட்டி,
வீரபாண்டி பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு வந்துள்ளதாக சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.இந்த ஊழல் அரசினால் கிடைக்கும் சலுகைகள்⸴ நன்கொடைகள் உரிய முறையில் ஏழை மக்களுக்கு சென்றடைவதை ஊழல் மோசடிகளினால் தடுக்கப்படுகின்றது. ஊழல் மூலம் தவறுகள் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன.இத்தகைய நிலை வளர்த்து கொண்டே சென்றால் தமிழ் நாட்டின் வளர்ச்சி மேலும் மேலும் பின்தங்கி கொண்டே செல்லும் என்பதுதான் நிதர்சனம்.தனிநபர்கள் முதல் அரசு வரை இணைந்து செயல்படுத்தினால் மட்டுமே ஒழிக்க முடியும்.
அதிமுக ஆட்சியில் எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் மொத்தம் 22 பேரூராட்சிகள் உள்ளது. இதில் ஆண்டிபட்டி ,பூதிப்புரம், வீரபாண்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட 11 பேரூராட்சிகளில் கடந்த 2019/20 ஆம் ஆண்டுகளில் தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக கூறி தேனியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தேனி மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்ற நிலையில் முன்னாள் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் 11 பேரூராட்சி செயல் அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. வடுகபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் ஊழல் முறைகேடு மீது நடவடிக்கை எடுக்க 26/06/2023 அன்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக காவல்துறையில் அனுமதி வாங்கியுள்ளார். டவுன் பேரூராட்சி இயக்குனரிடம் புகார் கொடுத்துள்ளதாக தகவல்.
வடுகபட்டி பேரூராட்சியில் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள மயானம் இருந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக புகார். விரிவாக அடுத்த பதிவில்..