தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி நகராட்சி குப்பை லாரிகளில் தேர்தல் வாக்கு என்னும் மையங்களுக்கு நகராட்சி ஊழியர்களை அழைத்துச் சென்ற அவல நிலை! தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்!?
தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி நகராட்சி குப்பை லாரிகளில் தேர்தல் பணிக்காக நகராட்சி ஊழியர்களை அழைத்துச் சென்ற அவல நிலை! தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம்!
நடைபெறும் 2024 மக்களவை தேர்தல் செலவு ரூ.5,000 கோடியை தாண்டக்கூடும் என தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குதல் போன்ற முக்கிய செலவுகள் இதில் அடங்கும். தேர்தல் செலவுகளை மத்திய அரசு ஏற்கிறது.
தேர்தல் தொடர்பான அனைத்து செலவுகளும் தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய சட்ட அமைச்சகத்துக்கும் வழங்கப்படும். ஒரு மாநிலத்திற்கு குறைந்தது 100 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு மாவட்டத்திற்கு சுமார் குறைந்தது 2.5 கோடி செலவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறிப்பாக
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024- தேனி மாவட்டத்தில்
தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியராகராக உள்ள சஜிவனா பாராளுமன்ற பொதுத்தேர்ததில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பல கோடி ரூபாய் செலவில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது தேர்தல் முடிந்து வாக்கு இயந்திரங்களை தேனி மாவட்டத்தில் உள்ள பல கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கைக்காக வார் ரூம்களில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அப்படி வாக்களித்த வாக்கு இயந்திரங்களை வைத்துள்ள
தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள
தேனி கம்மவார் கல்லூரியில் வாக்களித்த வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இருப்பதால் வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள (கல்லூரியின்) வாக்கு மையங்களில் பாதுகாப்பு அரண் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக
தேனி போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து
தூய்மை பணியாளர்களை குப்பை எடுத்து செல்ல பயன்படுத்தும் குப்பை லாரிகளில் நகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்களை ஆடு மாடுகளை ஏற்றி செல்வது போல்
போடிநாயக்கனூர் நகராட்சியில் இருந்து அழைத்துச் செல்லும் அவல நிலையை கண்டும் காணாமல் தேனி மாவட்ட ஆட்சியர் இருந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்தல் நடைமுறைக்கு வந்த முதலிலிருந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட தேர்தல் அலுவலராக இருக்கும் சஜீவனா சட்டவிரோதமாக நகராட்சி வாகனங்களில் பணியாளர்களை ஏற்றி சென்றதை
தேர்தல் செலவு கணக்கில் எந்த கணக்கில் எடுத்துக் கொள்வார் தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மதிக்காமல் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர் . வி சாஜிவனா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.