நள்ளிரவில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடிய மதுரையில் பிரபல சர்வதேச பள்ளி மீது தேசத் துரோக வழக்கு!?
2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும்போது தேசியக் கொடியை ஏற்றலாம் என்றும்.ஆனால் குறிப்பாக பகல் நேரத்தில் மட்டுமே தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் அதன் மீது வேறு எந்த அடையாளங்களும் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா அதிகாரப்பூர்வமாக சுதந்திரம் பெற்ற ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை கொண்டாடப்படுகிறது. இந்தியர்கள் சுதந்திரம் பெறும் வரை சுதந்திரப் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்த ஆயிரக்கணக்கான வீரமிக்க தேசபக்தர்களின் தன்னலமற்ற தியாகங்களை போற்றும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.
அனைத்து தனியார் அலுவலகங்கள், கடைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும் பொது விடுமுறையாக இது அனுசரிக்கப்படுகிறது. .ஆகஸ்ட் 15 தேசிய விடுமுறை. இருப்பினும், விடுமுறைக்கு ஒரு நாள் முன்னதாகவோ அல்லது ஆகஸ்ட் 15 இல் சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு உணர்த்த கல்வி நிறுவனங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
ஆனால் பகல் நேரத்தில் மட்டுமே தேசிய கொடியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு
மதுரை அருகே பிரபலமான சர்வதேச பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் நிர்வாகத்தை சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்து, பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற மதுரையைச் சேர்ந்த சந்திரன் மற்றும் அவர்களது மகன்கள் நடத்தும் குயின் மீரா CBSE இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் தான் இந்திய நாட்டின் இராயன்மையை மீறும் வகையில் தேச துரோக செயலை செய்து இருக்கின்றனர்.ஆகஸ்ட்14ஆம் தேதி நடு இரவில்
பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து நள்ளிரவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாட்டம் என்ற பெயரில் முகம் சுளிக்கும் அளவிற்கு ஆடல் பாடல் போன்ற பல நிகழ்ச்சி நடத்தியதாக அதிர்ச்சி தகவல் அது மட்டுமில்லாமல் குழந்தைகள் என்றும் பாராமல் நள்ளிரவில் தூங்க விடாமா தவிக்க விட்டாங்க பாருங்க அது தான் கொடுமை, இதுக்கு மதுரை மாவட்ட நிர்வாகமும், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
நம் இந்திய நாட்டின் பண்பாடு கலாச்சாரம் விதிமுறைகளை மீறி இந்திய தேசத்தை அவமதிக்கும் வகையில் நள்ளிரவில் தேசியக்கொடியை ஏற்றி
நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதி வழங்கினார்கள் என்று தெரியவில்லை! சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி என்ற பெயரில் நடந்த இந்த கூத்தை ஒரு சிலர் பிரபல தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்தில் உள்ளவர்களை கண்ணை கட்டி, அந்த தொலைக்காட்சியில் பணி செய்யும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொடுப்பதை கொடுத்து யூடிப் சானலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ததுதான் மிகப்பெரிய வேதனையாகும். தமிழ்நாட்டில் கல்வி தந்தை காமராஜர் முதல் தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் வரை பல தலைவர்கள் மாணவர்களின் கல்வி நலனுக்காக கல்விக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் கல்வி முறையை சீரழிக்கும் வகையில் பள்ளிகளை வணிக மயமாக்கப்பட்டு இயங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே 14/08/2023 அன்று மதுரை குயின் மீரா சிபிஎஸ்சி இன்டர்நேஷனல் பள்ளியில் நள்ளிரவில் தேசிய கொடியை ஏற்றிய நிர்வாகத்தின் மீது
தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் பகல் நேரத்தில் மட்டுமே தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவை மீறியதும் இல்லாமல் இந்திய தேசத்தின் இறையாண்மையை சீரழிக்கும் வகையில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்திய மதுரை குயின் மீரா சிபிஎஸ்இ இன்டர்நேஷனல் பள்ளியின் அனுமதி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
இது சம்பந்தமாக பள்ளி நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலரிடம் சமூக ஆர்வலர்கள் கேட்டபோது
நள்ளிரவில் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதால் , குயின் மீரா சர்வதேசப் பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் நள்ளிரவில் இந்திய தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடியதாக அலட்சியமாக பதில் கூறியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.