நியாய விலைக் கடை மோசடி! குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க உத்ததவு
நியாய விலைக்கடைகளில் பணியாளர்களைத் தவிர காணப்படும் இதர வெளி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் விற்பனையாளர் தவிர இதர வெளி நபர்கள் கடையில் இருப்பதாகவும், இதனால் குடும்ப பெண்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்லும்போது தொல்லைகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனைத் தவிர்க்கும் விதமாக கூட்டுறவுத்துறை அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதன்படி, நியாய விலைக்கடை பணியாளர்களை ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.
3 ஆண்டுக்கு மேலாக ஏதேனும் பணியாளர் ஒரே கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட வேண்டும்.
நியாய விலைக்கடைகளில் சம்மந்தப்பட்ட பணியாளர்களை தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது. அவ்வாறு வெளிநபர்கள் நியாய விலைக்கடைகளில் இருந்தால், இதுகுறித்து காவல் துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வெளிநபர்கள் கடையில் அனுமதித்து, அவர்களுக்கு துணைபோகும் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மீதும் மேற்குறிப்பிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த அறிவிப்புக்கு பின்னர்
நியாநவிலைக்கடைகளில் வெளி நபர்கள் காணப்படுவதாக புகார்கள் பெறப்பட்டால் இதற்கு சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடை விற்பனையாளரே பொறுப்பு என கருதி அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.