நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு 10 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்மாயை பத்திரப்பதிவு செய்து கொடுத்த தேனி மாவட்ட தேவாரம் சார்பு பத்திரப்பதிவு அலுவலர்!!?நடவடிக்கை எடுப்பார்களா!? பத்திரப்பதிவுத்துறை ஐஜி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி !?
நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு கண்மாயை பத்திரப்பதிவு செய்து கொடுத்த தேனி மாவட்ட தேவாரம் பத்திரப்பதிவு அலுவலர்! பத்து லட்சம் லஞ்சம் பெற்றதாக அதிர்ச்சி தகவல்! நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவுத்துறை ஐஜி
2020 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் தேவாரம் அருகே தே.சிந்தலைச்சேரி ஊராட்சியில் உடைகுளம் கண்மாய் 60 வருட காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை தற்போது ஊராட்சி மன்றத்தின் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது..
ஆக்கிரமிப்போ, பதிவு செய்யவோ கூடாது நீர்நிலைகளில் அனுமதி வழங்கும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை என தமிழக அரசுக்கு ஐகோர்ட் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
2019 ஜனவரி மாதமே தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் பட்டியல் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 47,707 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 4862 அரசு கட்டிடங்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ளது
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தின்படி அகற்றப்பட்டு வருகிறது. அனைத்து நீர்நிலைகளையும் அந்த சட்டத்தின்கீழ் கொண்டு வரும் வகையில் புதிய சட்ட முன்வடிவு வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. வருவாய் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் 313 தாலுகாக்கள் உள்ளன. தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகள் குறித்த விவரங்கள் முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம் தேவாரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சர்வே எண்கள் 345, 346, 347 ஆகிய எண்களின் கீழ் வரும் பட்டாக்களை ரத்து செய்ய, கடந்த 2019 ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த உத்தரவை எல்லாம் காற்றில் பறக்க விட்டு தன்னுடைய சுயநலத்திற்காக தேவாரப் பத்திரப்பதிவு அலுவலர்
கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தேவாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், 10 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு பத்மநாபன் பெயரில் பதிவு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதாக
தேனி மாவட்டம், தேவாரம் சார்-பதிவாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேடான பத்திரப்பதிவிற்கு உடந்தையாக இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி இளங்கோவன், பத்மநாபன் ஆகியோரை, பத்திர மோசடி செய்ததாக, சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் இடம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்:
தேனி மாவட்டம், தேவாரம் கிராமத்திற்குட்பட்ட டி.சிந்தலைச்சேரி உள்ளிட்ட ஐந்து கிராம மக்களுக்குச் சொந்தமான, உடைகுளம் கண்மாயை போலியாக பத்திரப்பதிவு செய்ததாகவும், அதை தன்னுடைய கூட்டாளிகளுக்கு விற்பனையும் செய்து கொண்டிருப்பதாகவும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இளங்கோவன் என்பவர்.
ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சர்வே எண்கள் 345, 346, 347 ஆகிய எண்களின் கீழ் வரும் பட்டாக்களை ரத்து செய்ய, கடந்த 2019 ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில்,
உயர்நீதிமன்றம் பிறப்பித்த ரத்து நடவடிக்கை தொடர்பாக, தேனி மாவட்ட ஆர்.டி.ஓ., விசாரணையில் இப்போதும் இருந்து கொண்டிருக்கும் ஒரு கண்மாயை பயன்பாட்டு நிலமாக கடந்த இரண்டு வருடங்களாக மாற்றியதோடு,
கடந்த ஜனவரி 22 ஆம் தேதி, தேவாரத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்பவருக்கு .
ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சர்வே எண்கள் 345, 346, 347 ஆகிய கண்மாயை பத்திரப்பதிவு செய்து கொடுத்திருப்பதாகவும்,
சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்ட, ஒரு பட்டா எண்ணில், பத்திரப்பதிவு செய்ய முடியுமா…? தேனி டி.ஆர்.ஓ., விசாரணையில் இருந்து கொண்டிருக்கும் ஒரு நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடியுமா…?
இதற்கு எந்த அடிப்படையில், தேவாரம் சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்தார்…..?. இத்தனை சந்தேகங்கள் கேள்விகள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல்
கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தேவாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்மநாபன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை பதிவை, ரத்து செய்து உத்தரவிடுவதோடு, அதற்கு உறுதுணையாக இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி இளங்கோவன், எழுதி வாங்கிய தேவாரம் பத்மநாபன்,பத்திரத்தை பதிவதற்கு உறுதுணையாக இருந்த தேவாரம் சார்-பதிவாளர் ஆகிய மூவரையும் பத்திர மோசடி சட்டத்தில் முறையான, விரைவான, நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கையினை, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் மற்றும் சங்க நிர்வாகிகள், தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா அலுவலகத்தில் கோரிக்கை மனு அழுத்துள்ளனர்.
எது எப்படியோ பத்திரப்பதிவு அலுவலகங்களில் தொடர்ந்து முறைகேடான பத்திரப்பதிவுகள் நடந்து கொண்டிருப்பது தான் நிதர்சனம் .நீதிமன்றங்கள் எத்தனை உத்தரவுகளை பிறப்பித்தாலும் அதை எல்லாம் காட்டில் பறக்கவிட்டு தங்களுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொண்டு நீர் நிலைகளை பத்திரப்பதிவு செய்து கொடுத்து வரும் ஒரு சில பத்திர பதிவு சார்பு அலுவலர்களை பணியில் இருந்து உடனடியாக நீக்கி அவர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஓரளவு இது போன்ற முறைகேடான பத்திரப்பதிவுகள் நடப்பதை தடுக்க முடியும் என்று ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.