நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கி தலைக் கவசம் பற்றியும் விழிப்புணர்வு !

நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம்
வழங்கி விழிப்புணர்வு !
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில்
தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு, தலைக்கவசம் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில்
திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 36 ஆவது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நமது கொடைரோடு டோல் பிளாசாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேற்கண்ட நிகழ்ச்சியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் துணைப் பொது மேலாளர் முருக பிரகாஷ், குழு தலைவர் சீனிவாசன், நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், வத்தலகுண்டு மோட்டார் வாகன அலுவலர் ஜாஸ்மின் மெர்சி கமலா மற்றும் கொடை ரோடு டோல் பிளாசா திட்ட மேலாளர் வசந்தராவ்,வருவாய் மேலாளர் மணிகண்டன் சுங்கச்சாவடி மேலாளர் ராஜேஷ் கண்ணன் பாலமுருகன் ராமநாதன் மற்றும் அனைத்து பணியாளர்களும் அனைவரும் கலந்து கொண்டனர்.
சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி அம்மையநாயக்கனூர் காவியன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்களுக்கும் சாலை பயனாளிகளுக்கும் பொது மக்களுக்கும் கைவீசிறிகள் வழங்கப்பட்டது
மாணவ மாணவியர் மற்றும் அரசு அலுவலர்கள் சுங்கச் சாவடி ஊழியர்கள்
உட்பட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பதாகைகளை கையில் ஏந்தி துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
பேரணி முடிந்தவுடன் தலைக் கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 50 பேருக்கு
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜாஸ்மின் மெர்சி கமலா மற்றும் நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இலவச தலைக் கவசம் வழங்கி
வாகன விபத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிவது மிக அவசியம் ஆகும். மேலும், விபத்து ஏற்படும் போது தலைக்கவசம் அணிந்திருந்தால் தலைப்பகுதியில் ஏற்படும் மோசமான பாதிப்புகள் தவிர்க்கப்படும்
தலைக் கவசம் பற்றியும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை
சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடக்கும் முன்பு வாசன் கண் மருத்துவமனை மற்றும் இந்திய தேசிய ஆணையம் டி எஸ் டோல் ரோடு இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.




தலைக் கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 50 பேருக்கு
