மாவட்டச் செய்திகள்

பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.



2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., தகவல்.
——
தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனி நபர்கள் அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.
கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள்ஃகல்வி நிறுவனங்கள்ஃகுடியிருப்போர் நல சங்கங்கள்ஃதனிநபர்கள்ஃஉள்ளாட்சி அமைப்புகள்ஃதொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி
2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
4. பசுமை தயாரிப்புகள் ஃபசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்
5. நிலைத்தகு வளர்ச்சி
6. திடக்கழிவு மேலாண்மை
7. நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு
8. காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை
9. காற்று மாசு குறைத்தல்
10. பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை
11. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு
12. கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள்ஃ நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், விருதுநகர் அவர்களை அணுகலாம்.
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2022 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் கடைசி நாள் ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button