காவல் செய்திகள்

வடலூர் வள்ளலார் ஜோதி கூட்ட நெரிசலில் பல பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் செயின்களை பறித்து கைவரிசை காட்டிய மர்ம கும்பலை பிடிக்க வலை வீசி தேடி வரும்கடலூர் மாவட்ட காவல்துறையினர்!

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அது போல் இந்த ஆண்டு 154வது ஜோதி தரிசன விழா பிப்ரவரி 11-ந்தேதி காலை 6:00 மணிக்கு வள்ளலாரின் சத்திய ஞான சபையில்

ஜோதி காண்பிக்கப்பட்டது. இதனைக்கான தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான வள்ளலார் அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் என

ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வந்திருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.ஜோதி தரிசனம் பெருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருந்தது. இதையொட்டி, பல்வேறு அமைப்பினரால் அன்னதானம் வழங்கப்பட்டது..தைப்பூச ஜோதி தரிசன பெரு விழாவை முன்னிட்டு

அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் தலைமையில்

1500 க்கும் மேற்பட்ட போலீசார் ஹோம் கார்ட்ஸ் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி குழு அமைக்கப்பட்டு நெய்வேலி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையில்

வடலூர் காவல் ஆய்வாளர் உதயகுமார், நெய்வேலி நகர காவல் உதவி ஆய்வாளர் அழகிரி,வடலூர் உதவி ஆய்வாளர் ராஜாங்கம், வடலூர் பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் அறிவழகன், வடலூர் தனிப்பிரிவு தலைமை காவலர் அன்பரசன்,முத்தாண்டிக்குப்பம் தலைமை காவலர் பலராமன் ஆகியோர்கள் குழு தைப்பூசம் விழா நடைபெறும் சத்திய ஞானசபை பகுதிகள், மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் பகுதிகள் மற்றும் வடலூர் நகரப் பகுதி முழுவதும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, நடக்கும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு பணியில் மேற்கொள்ளப்பட்டிருந்தனர்.ஆனால் கட்டுக்கடங்காத கூட்டத்தை பயன்படுத்தி ஜோதி பார்க்க வந்த பல பெண்களிடம் பணம் மற்றும்

கழுத்தில் இருந்த சுமார் 50 பவுனுக்கு மேல் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க செயின் நகைகளை மர்ம நபர்கள் திருடி கைவரிசை காட்டியுள்ளனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் கழுத்தில் இருந்த நகைகளை திருடிச்சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.நகையை பறி கொடுத்தவர்கள் வடலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் கடலூர் காவல்துறையினர் கூட்டம் நெரிசலில் நகை பணம் பறித்துச்சென்ற மர்ம நபர்களை வடலூர் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். எது எப்படியோ எத்தனை கண்காணிப்பு கேமராக்கள் எத்தனை ஆயிரம் காவல் துறையினர் இருந்தாலும் திருடற கூட்டம் திருடிக் கொண்டே தான் இருக்கின்றது.பல லட்சம் பேர் கூடும் இடங்களில் பெண்கள் தங்க நகைகளை அணிந்து சொல்வதை தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்லுமாறு காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் பல பெண்கள் கோயில் திருவிழாக்களுக்கு செல்லும் போது தங்க நகைகளை கழுத்தில் போட்டுச் செல்வதால் காவல்துறையினரின் கண்களில் படாமல் நூதன முறையில் திருடி செல்லும் திருட்டு கும்பல்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.ஆகவே இன்னும் வருங்காலங்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு தங்க நகைகளை அணிந்து செல்லாமல் இருந்தால் மட்டுமே திருட்டு கும்பல்களிடமிருந்து நகைகளை காப்பாற்றி தப்பிக்க முடியும் என்பதுதான் நிதர்சனம். பொறுத்திருந்து பார்ப்போம் நகைகளை பறிகொடுத்த பெண்களுக்கு மீண்டும் மீட்டுக் கொடுப்பார்களா வடலூர் காவல் துறையினர் !

Related Articles

Back to top button