பத்திரிகை அடையாள அட்டை மற்றும் போலி போலீஸ் அடையாள அட்டை பயன்படுத்தி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் பணத்தை பறித்துதப்பிச் சென்ற கள்ள நோட்டு மாற்றும் கும்பல்!

போலீஸ் மற்றும் பத்திரிக்கையாளர் என கூறி ஏமாற்றி பணத்தை பறித்த கள்ள நோட்டு கும்பல்!
போலீஸ் டுடே பத்திரிக்கை ஆசிரியர் நடத்தும் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின் அடையாள அட்டையை வைத்து பணம் பறித்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்.
போலிஸ் என்று கூறி ஏமாற்றி வழிப்பறி செய்து காரில் தப்பி சென்ற கள்ள நோட்டு பணம் மாற்றும் கும்பல் அரவக்குறிச்சி காவல்துறையுடம் சிக்கி உள்ளனர்.

அப்போது காருக்குள் காவல்துறையினர் சோதனை செய்யும்போது காவலர் காவல்துறையினர் உடை மற்றும் பேட்ச், ரோப் அனைத்தையும் வைத்திருந்ததை பார்க்க காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

06.01.2023 ஆம் தேதி இரவு 22.30 மணியளவில் கரூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்து HC 1703 திரு M. தர்மலிங்கம் அவர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் TN 33 AH 1999 என்ற எண் கொண்ட INNOVA கார் மதுரையில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அந்த வாகனத்தில் வருபவர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே போலீஸ் என கூறி பணத்தை பறித்துக் கொண்டு தப்பித்துள்ளனர் . உடனே சங்கரன் கோவில் சரக காவல் நிலைய காவலர்கள் அவர்களை பிடிக்க முற்பட்டபோது பணத்தை பறித்த கும்பலில் ஒரு சிலர் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளனர் மற்றவர்கள் இனோவா காரில் தப்பிவிட்டதாகவும் அந்த வாகனத்தை சோதனை செய்யும்படி தகவல் கொடுத்தன் அறிவுரையின்படி

அரவக்குறிச்சி காவல் நிலைய சரகம் ஆண்டிபட்டி கோட்டை சோதனை சாவடியில் பணியில் இருந்த Gr I. 330 திரு. ஜாபர் சாதிக், HG 1058 ராஜேஷ் ஆகிய இருவரும் மேற்படி எண் கொண்ட காரை 23.00 மணியளவில் நிறுத்திய போது வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். அதன் பின்பு கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்து HWP: 06க்கு தகவல் கொடுத்து தடா கோவில் பிரிவு அருகே HC 668. விஜயகுமார், AR PC 1962 தினேஷ்குமார், அரவக்குறிச்சி NORTH CRIME BEAT HC 1417, திரு. சதீஷ்குமார், HG 1678 மோகன் ஆகியோர் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் அனைவரும் போலீஸ் என போலி அடையாள அட்டையை பயன்படுத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின்பு
வாகனத்தில் வந்த ஓட்டுநர் உட்பட ஆறு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில்

அவர்கள் பெயர் மற்றும் முகவரி
1) பூபதி 43/23 (கொ.கவு) S/O. ராஜேந்திரன், NC காலனி, வெப்படை, லந்தகோட்டை அஞ்சல், திருச்செங்கோடு தாலுகா, நாமக்கல் மாவட்டம். 9688844344
*(PC 212 என போலியாக காவலர் அடையாள அட்டை வைத்துள்ளார்)*
2) ஞானசேகரன் 32/23 (SC/SK) S/O. குப்புசாமி, 87, பட்டேல் தெரு, ஈரோடு. 6380394668 Driver
3) சீனிவாசன் 22/23 (கொ.கவு) S/O. மகாலிங்கம், 4/30-1, சமய சங்கிலி, சமய சங்கிலி அக்ரகாரம், குமாரபாளையம் தாலுக்கா, நாமக்கல் மாவட்டம். 6381809844
4) சரவணன் (எ);ஐயப்பன் 35/23 (வன்னியர்) S/O. கந்தசாமி, 3/550, ஒட்ட மெத், அக்ரஹாரம் அஞ்சல், திருச்செங்கோடு தாலுகா, நாமக்கல் மாவட்டம். 9965009692 Auto Driver
5) செந்தில்குமார் 48/23 (கொ.கவு) S/O. ராஜு, நெசவாளர் காலனி, வேலாத்தாள் கோவில், KSR காலேஜ் அஞ்சல், திருச்செங்கோடு தாலுகா, நாமக்கல் மாவட்டம். 9597462390 காய்கறி வியாபாரம்.
6) முத்துமாரி 38/23 (தேவர்) W/O. செந்தில்குமார்,
——do—–
ஆகிய 06/01 நபர்கள் இருந்ததில் பூபதி என்பவர் போலீஸ் எனக் கூறி தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காவல் நிலைய சரகத்தில் கள்ள நோட்டு மற்றும் கும்பல் தாங்கள் போலீஸ் என ஏமாற்றி பணத்தை பறிக்க முற்படும்போது சங்கரன்கோவில் காவல்துறையினர் ஒரு பிரிவினரை பிடித்து விட்டதாகவும், மேற்படி நபர்கள் தப்பித்து வந்து அரவக்குறிச்சி போலீசாரிடம் மாட்டிக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.
மேற்படி நபர்களை அரவக்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில்
DCB காவல்துணை கண்காணிப்பாளர் திரு. தேவராஜன் அவர்கள், அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் திரு. நாகராஜன், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜெயராமன். அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உள்ளனர்.
மேற்படி நபர்களை அழைத்துச்செல்ல சங்கரன்கோவில் போலீசார் வந்து கொண்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.