பயணிகள் ரயிலில் கழிப்பறை இல்லாததால் பொதுமக்கள் அவதி!ரயில்வே அமைச்சரிடம் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன்!
பயணிகள் ரயிலில் கழிப்பறை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி!
உடனே கழிப்பறை வசதியுள்ள விரைவு ரயில்களில் தினசரி பயணிகள் ரயில் பெட்டிகளை இணைக்க சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை!
நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு திருச்சி கரூர் பயணிகள் ரயில் சேலம் வரை நீடிப்பு!
ஒன்றிய அரசின் திட்டங்கள்மற்றும் கொள்கைகளின் மீதுள்ள அதிருப்தியை தெரிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மின்னஞ்சல்mpofficesalem@gmail.com
மற்றும் 73975 05028 வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தெரிவிக்க கேட்டுக் கொண்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து சேலம் மாவட்டம் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக நீண்ட நாளாக உள்ள ரயில்வே கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்திடுமாறும்
பிரயாக் ராஜ் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை விரைவில் இயக்க
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ரயில்வே கோட்டம் சேலம் தலைமை இடமாக இருப்பதால் திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு பகல் நேர ரயில் சேவை இல்லை. நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு தற்போது திருச்சி கரூர் பயணிகள் ரயில்(06881) நாமக்கல் வழியாக சேலம் வரை நீடிக்கப்பட்டது. கழிப்பறை வசதி இல்லாததால் கரூர் சேலத்தில் இருந்து வேறு எண்ணில் ரயில் இயக்கப்படுகிறது எனவே சேலம் திருச்சியுடைய பகல் நேர ரயில் சேவ இருந்தும் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர் அதற்கு காரணம் வேறு வேறு எண்களுடன் ரயில்கள் செல்வதால் தான் இந்த குழப்பம். அதுமட்டுமில்லாமல் சேலத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரயில் திருச்சியை சென்றடைய குறைந்தது 3 மணி நேரம் ஆகிறது. மூன்றரை மணி நேரம் பயணிக்கும் பயணிகளுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் ஆகவே தென்னக ரயில்வே
பொதுமக்கள் நலன் கருதி உடனே கழிப்பறை வசதி உள்ள பெட்டிகளை இணைக்குமாறு ரயில்வே அமைச்சரிடம் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னக ரயில்வே ஒரே ரயிலாக இயக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. ஒரே ரயிலாக இணைப்பதன் மூலம் சேலத்தில் இருந்து மயிலாடுதுறை பகல் நேர இணைப்பு வழங்கப்படுகிறது இந்த இணைப்பு ரயிலை விரைவு ரயிலில் இணைத்தால் பொதுமக்கள் கழிப்பறை வசதியுடன் பயணிப்பார்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சரை சந்தித்து ஓமலூர் அருகே உள்ள டோல்கேட்டை அகற்ற சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல்
1.சேலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள இருவழிச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்றுவதற்கு சமீபத்தில் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் ஆத்தூர் நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைவதால் ஏற்படும் தேவையற்ற விபத்துகளைத் தவிர்க்க, செல்லியம்பாளையம் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும்,
2.எனது தொகுதி மக்கள் நீண்ட நாட்களாக சேலம் மாவட்டம்,ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டியில் அமைந்துள்ள எம்.வி.ஆர் இன்ப்ரா டோல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான
டோல்கேட்டை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனது சேலம் தொகுதி மக்களின் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த பிரச்சனைகளை உடனடியாக பரிசீலிக்குமாறு அமைச்சர் அவர்களிடம் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தின் பொதுமக்கள் நலன் கருதி சென்னை எழும்பூர் சேலம் எழும்பூர் விரைவு ரயில் சேலம் சந்திப்பில் 15 மணி நேரத்திற்கு மேலாக நின்றிருக்கும் இதை நாமக்கல் வழியாக கரூர் வரை நீடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல்லில் இருந்து பெரம்பலூர் துறையூர் வழியாக அரியலூருக்கு மாவட்டங்களில் வளர்ச்சியை அதிகரிக்கும் இந்த ரயில் பாதையை அனுமதித்து இந்த திட்டத்தை விரைவில் முடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.