பல கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் மற்றும் தண்ணீரை வைகை ஆற்றில் திருடி பாலம் கட்டும் ஒப்பந்ததாரர்! நடவடிக்கை எடுக்க தயங்கும் மதுரை மாவட்ட ஆட்சியர்!?
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகை ஆற்றின் குறுக்கே 19.65..கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றது.
இந்த மேம்பாலம் கட்டும் பணிக்கு அதிகாரிகள் துணையோடு
ஒப்பந்த விதிகளை மீறி வைகையாற்றில் பல கோடி ரூபாய் பெருமானம் உள்ள ஆற்று மணல் மற்றும் தண்ணீரை ஒப்பந்ததாரர் திருடி முறைகேடாக பாலம் கட்டும் பணியை செய்து வருவதாக வைகை ஆறு பாதுகாப்பு குழு மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடக்கும் இடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாரா?.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் இருந்து வைகை ஆற்றுக்கு வடக்கு பக்கமுள்ள இரும் பாடி கருப்பட்டி கரட்டுப் பட்டி நாச்சி குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல சுமார். 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மையப் பகுதியான சோழவந்தான் சென்று சுற்றி செல்லும் நிலை தொடர்ந்ததால் வாகன ஓட்டிகளுக்கு கால விரயமும் எரி பொருள் வீணாகும் நிலை நீடித்து வந்தது.இதனால் இப்பகுதிகளை இணைக்க வைகை ஆற்று குறுக்கே மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையெடுத்து இரும்பாடி .மன்னாடிமங்கலம் வைகை ஆற்றில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 19.கோடியே 65.லெட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது .
நெடுஞ்சாலை மற்றும் கட்டுமான பிரிவு அதிகாரிகள் மேற்பார்வையில் முதல் கட்டப் பணியாக தூண் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இந்த பணிக்கு வைகை ஆற்றில் இருந்து மணல் மற்றும் தண்ணீரை
எடுத்து பாலம் கட்டும் பணிக்கு பயன்படுத்து கூடாது என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மணல் பயன்படுத்துவதற்கு மாற்றாக எம் சாண்ட் கொண்டுதான் மேம்பாலம் கட்ட வேண்டும் . லாரி மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து பாலம் கட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் .என்ற விதிமுறைகள் இருக்கும்போது இந்த விதிகளை காற்றில் பறக்க விட்ட பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை கட்டுமான அதிகாரிகள் துணையோடு பாலம் கட்ட ஒப்பந்தம் எடுத்துள்ள S.A.L.& நிறுவனம் நியமித்த ஒப்பந்ததாரர் விதிகள் மீறி வைகை ஆற்றின் உள்ளே பல கோடி ரூபாய் மதிப்புள்ள அதாவது ஆயிரக்கணக்கான யூனிட் மணல் இரவில் டிப்பர் லாரி மூலம் திருடி எடுத்துச் சென்று பாலம் கட்டுமான பணிக்கு ஆற்று அருகே அமைக்க பட்டு உள்ள கலவை ஆலைக்கு கொண்டு சென்று இந்த மணல் உடன் சிமெண்ட் ஜல்லி இவற்றை கலவை செய்து பாலம் கட்டும் பணி நடைபெறுவதாகவும் மேலும் விதிகளை மீறி சட்ட விரோதமாக வைகை ஆற்றின் உள்ளே கிணறு அமைத்து தினமும் தற்காலிக கிணற்றிலிருந்து பாலம் கட்டும் பணிகளுக்கு மோட்டர் பம்புகள் மூலம் பல லட்சம் லிட்டர் தண்ணீரை திருட்டுத்தனமாக எடுத்து பயன் படுத்தி வருகின்றனர்.இதனால் ஆற்றில் ஆங்காங்கே பெறும் பள்ளங்கள் இருக்கும் அவல நிலை காணமுடிகிறது.
ஒப்பந்த விதிகளை காற்றி பறக்க விட்டு பாலம் கட்டும் பணியில் முறைகேடாக ஆற்றில் திருட்டுத்தனமாக சட்டவிரோதமாக மணல் மற்றும் தண்ணீர் எடுப்பதால் ஒப்பந்த தாரருக்கு பல கோடி ரூபாய் இதர லாபம் கிடைக்க வழிவகை செய்து கொடுக்கும் நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அதில் பெரும் தொகையை தங்களுக்கு வழங்குமாறும் வாய்மொழி ஒப்பந்தம் போட்டு கூட்டு மோசடி செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
பொதுப்பணித்துறை கட்டுமான பணிக்கு வைகை ஆற்றில் மணல் தண்ணீர் திருடி வருவதை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே இயற்கை வளங்களை திருடி அரசு ஒப்பந்தம் எடுத்த பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரரை ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் அதேபோல் இதுவரை கட்டுமான பணிக்கு பல கோடி மதிப்புள்ள மணல் தண்ணீர் வைகை ஆற்றில் எடுத்ததற்கு
மாவட்ட ஆட்சியர் ஆபராதத்தை வசூல் செய்து அரசு கஜானவில் சேர்க்க வேண்டும். விதிகள் மீறி முறைகேடாக நடந்து கொள்ளும் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தின் கட்டட உரிமை அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வைகையாறு பாதுகாப்பு குழ மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளர்.
மேம்பாலம் கட்டும் பணிகளுக்காக இயற்கை வளங்களை கொள்ளையடித்து மணல் மற்றும் தண்ணீரால் வைகையாற்று
பகுதியில் அந்மைதுள்ள கிராம ஊராட்சி கிணறுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாய சூழல் நிலவுகின்றது .மேலும் அரசு திட்ட பணிகள் நடக்கு மாநகராட்சி நகராட்சி .பேரூராட்சி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வேலை துவங்கும் நாள் வேலை முடியும் நாள் எந்த திட்டத்தின் கீழ் நடக்கிறது .வேலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மற்றும் துறை சார்ந்த விபரங்கள் அடங்கிய பதாகை வைக்கவேண்டும் என கட்டாய உத்தரவு போட்டு உள்ளது உச்ச நீதிமன்றம். அந்த உத்தரவுகளை மதிக்காமல் அதிகாரிகளும் ஒப்பந்த தாரரும் கைகோர்த்துக் கொண்டு மேம்பாலம் கட்டும் பணிகளை ஆமை வேகத்தில் செய்து வரும் இவர்கள் கட்டும் பாலத்தின் உறுதி தன்மையும் கேள்வி குறியாக இருக்கிறது என இப் பகுதி மக்களிடையே சந்தகேம் எழந்துள்ளது. பாலத்தின் அமைக்கப் பயன்படுத்தப்படும் பொருளை வைத்தும் பாலங்களை வகைப்படுத்தலாம். 18 ஆம் நூற்றாண்டின் முடிவு வரை பாலங்கள் மரம், கற்கள் போன்றவற்றை வைத்து உருவாக்கப்பட்டது. புதிய வகைப் பாலங்கள் சிமிண்ட் கலவை மற்றும் , துருப்பிடிக்காத உருக்கு கம்பி அல்லது சேர்க்கைகள் போன்ற வற்றல் கட்டப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் ஆற்றின் குறுக்கே ஆமை வேகத்தில் கட்டப்படும் பாலத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Viagra * Cialis * Levitra
All the products you are looking an eye to are currently close by in support of 1+1.
4 more tablets of identical of the following services: Viagra * Cialis * Levitra
https://pxman.net