பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அரிய வகையான பழமை வாய்ந்த மரங்களை சட்ட விரோதமாக அதிகாரிகள் வெட்டி விற்றதாக அதிர்ச்சி ஆடியோ!
பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கழனி வாசல் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.
இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
பேராவூரணி சேது பாவசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கழனி வாசல் கிராமத்தில் அமைந்துள்ள இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அருள்மிகு ஸ்ரீ பால சுப்பிரமணியசுவாமி திரு கோயிலுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் உள்ள 100 ஆண்டுக்கள் பழமை வாய்ந்த மிக அரிய வகையான கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை
கோவில் அலுவலகத்தில் உள்ள ரவிச்சந்திரன் மற்றும் செயல் அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள் உடந்தையுடன் உரிய அனுமதி பெறாமல் தன்னிச்சையாக சட்ட விரோதமாக பல லட்சம் மதிப்புள்ள மரங்களை மரங்களை வெட்டி விற்பனை செய்து செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்து சமய அற நிலையத்துறைக்கு சொந்தமான தரிசு நிலங்களில் இருந்த நூறாண்டு காலம் பழமை வாய்ந்த வாய்ந்த அரிய மரங்களைமரங்களை வெட்டி விற்பதற்கு அனுமதி வழங்கியது யார்? மரங்களை வெட்டி கடத்திய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் மீது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் .