ஆன்மீகத் தளம்

பழனி கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களிடம் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டதாக பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமி மீது குற்றச்சாட்டு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வாய்ந்தது.

இந்த திருவிழாவையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பழனி முருகன் கோவிலுக்கு பல்லாயிரகணக்கான பக்தர்கள் தீர்த்தக் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் 10,11,12 ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தங்கு தடை இன்றி தரிசனம் செய்ய கட்டண தரிசனம் ரத்து செய்து இந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது. குறிப்பிடத்தக்கது.
பழனி பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் 11 ஆம் தேதி நடைபெற்றது. ஏப்.14-ம் கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. திருவிழாவையொட்டி,

ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து

பக்தர்கள் தீர்த்தக் காவடியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.


கேரளாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்ததால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும்
நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர்.

3 நாட்களில் மொத்தம் 4 லட்சத்து 7 ஆயிரத்து 663 பேர் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பக்தர்களின் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கையாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
குறிப்பாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட தரிசன வழிகளில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறப்பு கட்டண வரிசைகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்டதால்

விவிஐபி, விஐபி, முக்கியஸ்தர்கள் என்ற பாகு பாடில்லாமல் அனைத்து பக்தர்களும் சமமாக இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.ஆனால் கட்டண தரிசன வரிசையில் கோவில் நிர்வாக ஊழியர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் உறவினர்கள் மட்டும் சென்று கோவில் கருவறை அருகே உட்கார்ந்து 10 நிமிடம் சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர்.
ஆனால் நான்கு நாட்களாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் குறிப்பாக பெண் காவலர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு உள்ளே சென்றபோது பெண் காவலர் சட்டையை பிடித்து தள்ளி உங்களைக் கோவில் காவலுக்கு வரச் சொல்லி கேட்டோமா நீங்கள் வரவில்லை என்றால் எங்கள் கோயில் ஊழியர்களை வைத்து பார்க்க மாட்டோமா என

பழனி கோவில் பெண் உதவி ஆணையர் லட்சுமி மிகவும் மோசமாக அநாகரிகமாக சர்வாதிகாரியாக நடந்து கொண்டதாக பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் மத்தியில் பரவலாக குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
குறிப்பாக

இழுவை ரயில் மூலமாக மலைக் கோவிலுக்கு பாதுகாப்புக்கு சென்ற காவலர்களிடம் அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே விட வேண்டும் என கோவில் ஊழியர்களுக்கு கோவில் நிர்வாக பெண் உதவி ஆணையர் வற்புறுத்தியதால் மலைக் கோவிலுக்கு செல்லும் காவலர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோவில் ஊழியர்கள் அடாவடியாக நடந்து கொண்டதாகவும் காவலர்கள் பழனி துணை காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே பழனி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று ஊழியர்களிடம் சீருடைகள் வரும் காவலர்களிடம் ஏன் அடையாள அட்டையை கேட்கிறீர்கள் எனக் கேட்டதற்கு உதவி ஆணையர் லட்சுமி தான் அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே காவலர்களை இழுவை ரயிலில் மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என சொன்னதால் தான் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டோம் என கோவில் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
சீருடையில் வரும் காவலர்களிடம் அடையாள அட்டையை கேட்கக்கூடாது என கோவில் ஊழியர்களிடம் துணை காவல் கண்காணிப்பாளர் தனஜெயன் கூறியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மலைக் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் உதவி ஆணையர் லட்சுமி தரக்குறைவாக பேசி வருவதாகவும் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது சம்பந்தமாக ஒரு சில காவலர்களிடம் விசாரித்த போது நான்கு நாட்களாக கோவிலில் பாதுகாப்பு பணியில் இருக்கிறோம். சாமி தரிசனம் செய்ய சென்றதற்கு கோவில் உதவி ஆணையர் தரக்குறைவாக பேசியதாகவும் காவல்துறையினர் சாமி தரிசனம் செய்வதற்காகவே கோவிலுக்கு வந்துள்ளீர்கள் என்று பெண் காவலர்களை பார்த்து பெண் உதவி ஆணையர் லட்சுமி மிரட்டும் தோணியில் பேசியதாகவும்
அது மட்டுமில்லாமல் மூன்று நாட்களுக்கு சிறப்பு கட்டணம் வரிசையில் இலவசமாக சாமானிய ஏழை எளிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றதை தாங்கிக் கொள்ள முடியாத உதவி ஆணையர் லட்சுமி பக்தர்களிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் குறிப்பாக மலைக் கோவிலுக்குச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மீதும் கடுமை காட்டி வந்ததாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளனர் .
இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக் கொண்டு மலைக் கோவில் மேலே பக்தர்கள் விஐபி தரிசனம் செல்லும் பாதையில் வைத்துள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தால் பெண் உதவி ஆணையர் லட்சுமி பெண் காவல்துறையினரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன் பின்பு கோவில் பெண் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எது எப்படியோ சட்ட ஒழுங்கு நிலை நாட்ட வேண்டிய காவல்துறையினர் எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் நடக்காமல் முன்னெச்சரிக்கையாக தங்களுடைய கடமைகளை செய்து வரும் காவல்துறையினரிடம் பழனி கோவில் பெண் உதவி ஆணையர் லட்சுமி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வன்மத்தை காட்டி சர்வாதிகாரியாக  செயல்பட்டு இருந்தால் அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனம்!
பொறுத்திருந்து பார்ப்போம் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் நடவடிக்கையை!

Related Articles

Back to top button