காவல் செய்திகள்

பார்களில் கள்ளச் சந்தையில் 24×7மது பாட்டில்கள் G pay வசதியுடன் அதிக விலைக்கு அமோக விற்பனை!திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு தனிப்பிரிவு காவல்துறைக்கு புகார் தெரிவிப்பதும் ரயில் வரும்போது தண்டவாளத்தில் நிற்பதும் ஒன்று!

தமிழக முழுவதும் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகளில் நாள்தோறும் 100கோடி ரூபாய் அளவிற்கு மதுபானம் விற்பனை நடைபெற்று வரும் நிலையில், அரசுக்கு அதிக வருவாய் வரும் துறைகளில் ‘டாஸ்மாக்’ முக்கியப் பங்கு வகிக்கிறது.

விலை ஏறினாலும் மதுபானங்கள் விற்பனை மட்டும் குறைவது இல்லை. மது போதைக்கு அடிமையாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் திறந்திருக்க வேண்டும். இதனை சாதகமாக பயன் படுத்தி கொண்டு
டாஸ்மாக் கடை இயங்காத காலை நேரத்தில், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மாவட்டத்தில் 159 டாஸ்மாக் கடைகள் இருந்த நிலையில் கடந்த ஆண்டு 15 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு தற்போது சுமார் 145 டாஸ்மார்க் கடைகள் இயங்கி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகளுடன் மதுபானக்கூடங்கள் இயங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை வேலை அரசு டாஸ்மாக் கடை அருகே உள்ள ப சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இதில் குறிப்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பழனி ஒட்டன்சத்திரம் கொடைக்கானல் நிலக்கோட்டை வேடசந்தூர் ஆகிய காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட தேனி, மதுரை ,
கரூர் ,திருப்பூர், திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் உள்ள
அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் வேடசந்தூர் காவல் உட் கோட்டத்திற்குட்பட்ட வேடசந்தூர் எரியோடு வடமதுரை குஜிலியம்பாறை கூம்பூர் ஆகிய காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் நிலக்கோட்டை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட விளாம்பட்டி விறுவீடு வத்தலகுண்டு நிலக்கோட்டை அம்மையநாயக்கனூர் பட்டிவீரன்பட்டி ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட. பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மார்க் மதுபானக்கூடங்கள் இயங்கி வருகிறது. இதில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பல டாஸ்மார்க் மதுபானக்கூடங்கள் செயல்பட்டு வருவதாகவும் அப்படி அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் மதுபானக்கூடங்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை இரவு 10 மணிக்கு மேல் 12 மணி வரை அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் பல டாஸ்மார்க் மதுபானக்கூடங்களில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் மது பாட்டில்கள் கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வரும் டாஸ்மார்க் மதுபான கூடங்களில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதை
கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மதுவிலக்கு காவல் துறை , வருவாய் துறையினர் எங்கு சென்றனர் என தெரியவில்லை என்றும்
மதுபானக் கூடங்களில் விற்பனை செய்யும் மது பாட்டில்கள் எங்கிருந்து எப்படி கிடைக்கிறது என அப்பகுதி மக்களிடம் கேட்டால் அரசு மதுபான கடை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மது பாட்டில்களை பதுக்கி வைத்து
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வதைவிட
குவாட்டர்க்கு ஐம்பது ரூபாய் வரை கூடுதலாக விற்பதாகவும் அப்படி கூடுதலாக விற்று வரும் தொகையை, மதுபானக்கூடங்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ஒரு பங்கு பிரித்து கொடுக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல் டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவது திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு தனிப்பிரிவு காவல் துறையினருக்கு நன்றாக தெரியும் என்றும் அதைவிட ஒரு முக்கிய செய்தி என்னவென்றால்
இதற்கு முன்பு நிலக்கோட்டை டிஎஸ்பியாக இருந்த முருகன் தான் தற்போது திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு டிஎஸ்பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் நிலக்கோட்டை டிஎஸ்பி ஆக இருந்தபோது நிலக்கோட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கிறது எத்தனை டாஸ்மார்க் கடைகள் இருக்கிறது அதுவும் எத்தனை பார் இருக்கிறது என்று நன்றாகவே தெரியும் அப்படி இருந்தும்
மதுபானக்கூடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் நன்றாகத் தெரியும் என்றும் ஆனால் சட்டவிரோத மது பாட்டில் விற்பனையை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை திண்டுக்கல் மாவட்டம் மதுவிலக்கு டிஎஸ்பி எடுக்கவில்லை என்றும் ஆனால் திண்டுக்கல் மாவட்டம் மதுவிலக்கு தனிப்பிரிவு காவல்துறையினருக்கு மாதம் ஒரு பெரிய தொகை சன்மானமாக கொடுக்கப்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்!
அதைவிட அதிர்ச்சி தகவல் என்னவென்றால் அரசு மதுபானக்கூடங்களில் அதிக விலைக்கு மது பாட்டில் வாங்கும்
மதுப்பிரியர்களுக்கு வசதியாக, தண்ணீர், தண்ணீர் கப், விதவிதமான சைடிஷ்கள் சேர்த்து கொடுத்து சாதாரண விலைக்கு விற்கப்படும் மது பாட்டிலை விட ரூ.70 முதல் 100 ரூபாய் வரையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும். அதிக விலைக்கு கொடுத்து மது பாட்டில் வாங்கும் வாடிக்கையாளருக்கு வசதியாக phone pay, Google pay பயன்படுத்தி வருவதாகவும் அதிர்ச்சித் தகவலை
சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சட்டம் என்பது அனைவருக்கும் சமம். அப்படி இருக்கும் நிலையில் ஒரே திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு நிலை உள்ளது.
ஊரக பகுதிகளில் அதுவும் குறிப்பாக கிராம பகுதிகளில் வீடுகள் மற்றும் பெட்டிக்கடைகள் மற்றும் டாஸ்மார்க் அருகே அரசு இருக்கும் உணவகங்கள் ஆகியவற்றில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை மதுவிலக்கு தனிப்பிரிவு காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதற்காக மாதந்தோறும் ஒரு கணிசமான தொகை சன்மானமாக
வழங்கப்படுகிறது என்றும் தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி தேவர் ஜெயந்தி ஆகிய தினங்களில் கள்ள சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்பவர்களிடம் அதிக சன்மானம் வழங்குமாறு
மதுவிலக்கு தனிப்பிரிவு காவல்துறையினர் உரிமையாக கேட்டு வாங்கி செல்கிறார்கள்
என்று பார் நடத்தும் உரிமையாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தாலும்
சோதனை என்ற பெயரில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்பவர்கள் மீது பெயர் அளவிற்கு வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த வழக்குப் பதிவு ஒரு கண்துடைப்பு நாடகம் நடத்தி வருவதாகவும் கள்ளச் சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்வதை நிரந்தரமாக நிறுத்துவதற்கான தீர்வு காண்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மதுவிலக்கு தனிப்பிரிவு காவல் துறையினர் தங்களது வசூல் வேட்டையை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ள சந்தையில் மது பாட்டில் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்பவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் மதுவிலக்கு தனிப்பிரிவு காவல் துறையினர் மீது பாரபட்சம் இன்றி அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனையை தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் இல்லையென்றால் திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பாக நிலக்கோட்டை வேடசந்தூர் காவல் உட்கோட்டத்தில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விற்பனை நடந்து கொண்டே தான் இருக்கும் என்றும்
திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு தனிப்பிரிவு காவல்துறையினரிடம் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை சம்பந்தமாக புகார் தெரிவிப்பதும் ரயில் வரும்போது தண்டவாளத்தில் நிற்பதும் ஒன்று என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் மன குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுதான் நிதர்சனமான உண்மை
என சமூக ஆர்வலர்கள் தங்களது கோரிக்கையை ஆதங்கத்துடன் வைத்துள்ளனர்.
ஆகையால்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபானக்கூடங்களில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் மாவ ஆட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை…

Related Articles

Back to top button