புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் (EO) நிர்வாக செயல் அலுவலக அறைகளில் விலை மாதுக்களுடன் உல்லாசமா!?? இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா!?
கோவில் நிர்வாக செயல் அலுவலக( EO)அறைகளில் விலை மாதுக்களுடன் மசாஜ் மற்றும் உல்லாசமா!?? இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் விசாரணை படத்தின் நடவடிக்கை எடுப்பாரா!?
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ.பிரகதம்பாள் ஆலயம் அப்பகுதியில் மிகப் பிரசித்திப் பெற்ற ஆலயமாகும்.
இந்த ஆலயத்திற்கு பொறுப்பேற்கும் உயர் அதிகாரிகளுக்கு முதலில் சிறப்பான விரு விருந்து அளிப்பார்களாம்.
அந்த விருந்து என்ன என்று விசாரித்த போது அதிர்ச்சி தரும் திடுக்கிடும் தகவலை அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் உள்ள 200க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு EO என்று அழைக்கப்படும் நிர்வாக செயல் அலுவலர்கள் தான் முக்கிய அதிகாரியாக இருந்து வருகிறார்கள்.
இந்த அதிகாரிகளை தங்கள் கைக்குள் போட்டுக் கொள்வதுதான் கோவில்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பணியாளர்களின் தலையாயப் பணியாக இருக்கிறதாம்.
பாண்டிச்சேரி நேபால் கர்நாடகா ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து புதுக்கோட்டையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்து வந்து மசாஜ் என்ற பெயரில் அவர்களை விபச்சாரத்திற்கு பயன்படுத்துவது வழக்கம் என்ற தகவல் வந்துள்ளது.
அந்த பெண்களை
கோவிலுக்கு அழைத்து வந்து வெளி மாநில பெண் பக்தர்கள் போன்று நிர்வாக செயல் அலுவலர் அலுவலகங்களில் உள்ள அறைகளுக்கு அழைத்துச் செல்வார்களாம்.
அதன் பின்னர் கோவிலில் உள்ள நிர்வாக அலுவலக அறைகளை துப்பரவு செய்யும் துப்புரவு பணியாளர்களை அழைத்து டீ காபி டிபன் சாப்பிட்டு வருமாறு கையில் நூறு ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பி விடுவார்களாம் . அதன் பின்னர் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை இயங்காமல் நூதன முறையில் செயல் இழக்க செய்து விடுவார்களாம்.
அதன் பின்னர் அறைகளில் தங்க வைக்கப்பட்ட விலை மாதுகளிடம் கோவில் நிர்வாக உயர் அதிகாரிகள் உல்லாசமாக இருப்பார்களாம் . அந்த நேரத்தில்
இந்த ஆலயத்தில் எந்த தவறும் நடக்காதது போன்று நிர்வாக செயலாளர் அலுவலகம் செயல்படுமாம்.
என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஏனென்றால் இது போன்ற தவறுகள் நடப்பதாக புகார் எழும் நிலையில் அந்த நேரத்தில் எந்த ஒரு தவறும் நடக்கவில்லை என்று சிசிடிவி காட்சிப் பதிவுகளை காண்பித்து அந்த அதிகாரிகள் தப்பித்து விடுவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
கோவில் நிர்வாக செயல் அலுவலக அறைகளில் சட்டவிரோதமாக பெண்களிடம் அதிகாரிகள் உல்லாசமாக இருப்பதை
.கோவிலில் பணி செய்யும் ஊழியர்கள் தெரிந்து கொண்டு தாங்களும் தவறு செய்வதற்கு அஞ்சாமல்
துணிந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏனென்றால் தவறு செய்தவர்களை நிர்வாக செயல் அலுவலர் எச்சரித்தால் அறைகளில் நடக்கும் மன்மத லீலைகளை வெளியே சொல்லி விடுவார்கள் என்று பயந்து கொண்டு நிர்வாக செயல் அலுவலகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறதாகவும் தகவலை தெரிவிக்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல்
இந்த ஆலயத்திற்கு காணிக்கையான விலை உயர்ந்த பட்டுப்புடவை ,வெள்ளி விளக்கு , அன்ன தானத்திற்காக வழங்கும் அரிசி மளிகை பொருட்கள் ,நாள் ஒன்றுக்கு குறைந்தது 50 கிலோ வெள்ளம் போன்றவைகளை பக்தர்கள் நேத்திக்கடனாக வழங்குகிறார்கள் என்றும்
ஆனால் கோவில் நிர்வாகம் அதைப் பெற்றுக் கொண்டதற்கான எந்த ஒரு ரசீதை வழங்கப்படாமல் கோவில் செயல் அலுவலகம் முறைகேடு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கும் அனைத்தையும் வெளி சந்தையில் கோவில் நிர்வாகம் விற்பதாகவும் அதில் வரும் பணத்தை வைத்து கோவில் செயல் அலுவலக அதிகாரிகள் உல்லாசமாக இருந்து வருவதாகவும் சில ஆன்மீகவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க குடவரை ஆலயம் என்பதால் வெளிநாட்டில் இருந்தும் வெளிமாநிலத்தில் இருந்தும் வருகின்ற ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் சிறப்பு உபசரிப்பு என்ற பெயரில் கூடுதல் தொகையை பெற்றுக் கொண்டு கல்லா கட்டி வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஆலயத்தில் பரம்பரை பரம்பரையாக தின கூலி வேலை பார்க்கும் பணியாளர்கள் வயிற்றுப் பசிக்காக கொடுக்கும் சம்பளம் வாங்கிக் கொண்டு ஆன்மீகத் தொண்டாக தற்காலிகமாக பணி செய்து வருவதாகவும் இவர்கள் உயர் அதிகாரிகள் செய்யும் தவறை கேள்வி கேட்டால் அடுத்த நிமிடமே கேள்வி கேட்பவர்களின் தற்காலிக வேலை அவ்வளவுதான் என்று தற்காலிகமாக வேலை பார்த்த முன்னாள் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால்தான் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் எது நடந்தாலும் தெரிந்து கொண்டு தெரியாததைப் போல்
கண்டும் காணாமல் தங்கள் வேலை உண்டு என்று இருந்து விடுவார்களாம் அன்றாடத் தினக்கூலி ஊழியர்கள்.
அதுமட்டுமில்லாமல் விசேஷ நாட்களில் ஆலயத்தில் சுவாமியை தூக்கி செல்வதற்க்கு தினக் கூலிக்கு ஆட்களை அழைத்து வருவதாகவும்
அப்படி தின கூலிக்கு அழைத்து வரும் நபர்கள் மது அருந்திவிட்டு சுவாமி பல்லாக்கை தூக்கி செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காணிக்கையாக வழங்கப்பட்ட மிக விலை உயர்ந்த பொருட்கள் ஆபரணங்கள் ஆலயத்தில் இருப்பதால் அவைகளின் மதிப்பு எவ்வளவு இருக்கிறது என்ற உண்மை தன்மையை வெளிப்படையாக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
எது எப்படியோ பிரசித்தி பெற்ற புதுக்கோட்டை பிரகதாம்பாள் ஆலயத்தை மறுபடியும் சீரமைத்து இந்த ஆலயத்தில் உள்ள செயல் பாடுகளின் குறைபாடுகளை சரி செய்து ஆலயங்களில் செய்யக்கூடாத செயல்களில் ஈடுபட்டு வரும் உயர் அதிகாரிகளை களையெடுக்க வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும் .
இது சம்பந்தமாக நிருபர் ஆலயத்தில் நிர்வாக செயல் அலுவலர் அவர்களிடம் நேரில் விசாரித்த போது ஆலயத்தில் எந்த ஒரு தவறும் நடக்கவில்லை என்றும் அப்படி தவறு நடப்பதாக தகவல் மற்றும் புகார் கொடுத்தால் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆலயத்தில் எத்தனை பசு மாடுகள் கன்று குட்டிகள் இருப்பதாக கேட்டதற்கு அவர் அருகில் உள்ள சூப்பர்வைசர்தான்பதில் சொல்லியிருக்கிறார். எத்தனை பசுமாடுகள் பராமரிப்பில் இருக்கிறது என்று கூட கோவில் நிர்வாக செயல் அலுவலருக்கு தெரியவில்லையே என்று கேட்டதற்கு பக்தர்கள் முறையாக எங்களை அணுகி பசு மாடுகளை வழங்குவதில்லை என்றும் அவர்களே பசுமாடுகள் இருக்கும் கொட்டத்தில் விட்டு விட்டு செல்கிறார்கள் என்று பதில் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பராமரிப்பில் உள்ள அனைத்து பசுமாடு மற்றும் கன்று குட்டிகளை வளர்ப்பதற்காக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கொடுக்கப் போவதாக நிருபரிடம் தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ கோவில் ஆலயத்தில் இருக்கும் பசு மாடுகள் மற்றும் நிர்வாகத்தை பற்றி கவலைப்படாமல் தனக்கு தேவையானதை பூர்த்தி செய்வதை மட்டுமே குறிக்கோளாக கோவில் நிர்வாக செயல் அழுவகம் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். கோவிலில் முறைகேடுகள் நடப்பதாக வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்து சமய அறநிலை துறையில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொள்வார்களா என்பதை
பொறுத்திருந்து பார்ப்போம்.
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கோவில் நிர்வாக அலுவலங்களில் உள்ள அறைகளில் பெண்களிடம் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகளை விரைவில் ரிப்போர்ட்டர் விஷன் வெளியிட இருக்கிறது.