பூட்டிய வீடுகளை சொகுசு கார்களில் வந்து நோட்டமிட்டு நூதன முறையில் திருடிவந்த ஹைடெக் பகல் திருடனை சுற்றி வளைத்து கைது செய்த பழனி தனிப்படை காவல்துறை!
பூட்டிய வீடுகளை சொகுசு கார்களில் வந்து நோட்டமிட்டு நூதன முறையில் திருடிவந்த ஹைடெக் பகல் திருடனை சுற்றி வளைத்து கைது செய்த பழனி தனிப்படை காவல்துறை!
திண்டுக்கல் மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளை சொகுசு கார்களில் வந்து நோட்டமிட்டு பகலில் நூதன முறையில் திருடி தப்பிச்சென்று காவல்துறையிடம் சிக்காமல் தப்பி வந்த ஹை டெக் திருடனை பிடிக்க
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பிரதீப்
உத்தரவின் பெயரில்,
பழனி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஜெயன் மேற்பார்வையில்,
பழனி தாலுகா காவல் ஆய்வாளர்
தென்னரசன் தலைமையில்,
பழனி தாலுகா உதவி ஆய்வாளர்
தியாகராஜன் ,
கார்த்திகேயன்
சேக் முபாரக் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு
தப்பி வந்த
முக்கிய திருடனை பிடிக்க தீவிரமாக தேடி வந்த நிலையில் பகலில் பூட்டி இருந்த வீடுகளில் திருடி சென்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காரில் வந்து பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து திருடி சென்றது
சிவகங்கை சேர்ந்த
அதிபதி ராஜா-
23/24
த /பெ அய்யனார்
தெற்கு தமராக்கி, என காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
உடனே தனிப்படை காவல்துறையினர் தலைமறைவாக இருந்த காரில் வலம் வந்து திருடி வந்த பகல் கொள்ளையனை பழனி தாலுகா தனிப்படை காவல்துறையினர் கைது செய்து
பழனி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்ற எண் (112/24, U/s 454,380 IPC) விசாரணை மேற்கொண்டதில் ஊட்டி இருந்த வீட்டை உடைத்து திருடிய பொருட்களை அவனிடமிருந்து கைப்பற்றி மன்றத்தில் ஆச்சரியப்படுத்தி, திண்டுக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.
பூட்டி இருக்கும் வீடுகளில் பகலில் காரில் வந்து திருடிய திருடனை பிடிக்க கடந்த ஒரு மாதமாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறைக்கு சவாலாக இருந்த திருடனை பிடிக்க பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில் தான் கண்டுபிடிக்க முடிந்தது எனவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
விரைவில் திருடனை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.