பூர்ண மது விளக்கு கோரி ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி கோரிக்கை!
பூர்ண மது விளக்கு கோரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி கோரிக்கை! ஒழுக்கமே சுதந்திரம் , மக்களைக் காப்போம் என பூரண மதுவிலக்கு கோரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி கோரிக்கை விடுத்து பரப்புரை மேற்கொண்டனர். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில்
கோவை அவினாசி சாலையில் உள்ள கோயம் புத்தூர் பிரஸ் கிளப்பில, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிர் அணியினர் செய்தியாளர்களை சந்திப்பு நடத்தினர், இதில் தாங்கள் உக்கடம் பகுதியில் அலுவலகம் வைத்து மாவட்டத்தில் பிற பகுதிகளில் வசிக்கும், இஸ்லாமிய மக்களிடம் நற்பண்புகள்,தொண்டுகளை பரப்பி சேவைகள் செய்து வருவதாகவும் , இந்த அமைப்பு இந்தியாவில் கடந்த 76 வருடங்களாக மக்களின் ஒற்றுமைக்காகவும், ஒழுக்க மேம்பாட்டிற்காகவும், சமூக உயர்வுக்காகவும் பாடுபட்டு வருவதாக தெரிவித்தார்கள். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளோடு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றனர். தற்போது நாட்டில் நிலவும் மது, போதை, ஆபாசம், தவறான உறவுகள் எனப் பெருகும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி , அகில இந்தியா முழுவதும் 2024 செப்டம்பர் மாதம் ‘ஒழுக்கமே சுதந்திரம்’ எனும் மையக்கருத்தில் பரப்புரையை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்கள்.
இப்பிரச்சார இயக்கத்தை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர மகளிர் அணி தலைவி. ஜஹீனா அஹமது , மகளிர் அணி செயலாளர் ஷர்மிளா அப்துல்லாஹ் , கோவை தெற்கு மண்டல மகளிர் அணி தலைவி சலீனா பாரி , மகளிர் அணிச் செயலாளர் பெனாசிர் சமது ,கோவை வடக்கு மண்டல மகளிர் அணி தலைவி. கமருன்னிஷா கலந்து கொண்டனர். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர மகளிர் அணி தலைவி ஜஹீனா அஹமது பேசுகையில் . மது, போதைக் கலாச்சாரம் இன்று பெருகிக் கொண்டிருக்கிறது. குடி நோயாளிகளின் நாடாக இந்தியா மாறி வருகிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி ஆண், பெண் வேறுபாடின்றி மது அருந்துகின்றனர். இதனால் தீமைகள் பெருகிவிட்டன. நோய்கள் அதிகரித்துவிட்டன. இதனால் விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு என அனைத்துத் தீமைகள் கொண்ட நாடாக இருந்து வருகிறது. எங்கும் மது இருக்கிறது. மதுவை ஒழிக்க வேண்டிய அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை நடத்துவது வேதனையளிக்கிறது.
போதை நாட்டையே நாசப்படுத்திவிடும் என்பதால் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். அதே போன்று ஆகஸ்ட் 11 ஆம் நாள் போதைக்கு எதிரான நாளாக அறிவித்து மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரிய முயற்சி அதே வேளையில் மதுவை தடை செய்யாமல் போதை இல்லா பாதை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு பூரண மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும். இன்றை நிலையில் பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவில் பெண் மகள்கள் தொடர்ந்து சீரழிக்கப்படுகிறார்கள் டெல்லியில் 2012 ஆம் ஆண்டு, ஓடும் பேருந்தில் 22 வயது மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதையடுத்து பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் இந்தியாவில் கடுமையாக்கப்பட்டன. ஆனாலும் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது . இந்தியாவில் தினமும் 90 பாலியல் வன்புணர்வுகள் நிகழ்வதாகவும், ஆண்டுதோறும் 32,000 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாவதாக ஒன்றிய அரசின் NCRB தெரிவிக்கிறது.
ஹத்ராஸ் பட்டியலினப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலை, உன்னாவில் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலை, கதுவாவில் 8 வயது ஆசிஃபா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலை, இப்போது கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புணர்வுப் படுகொலை என இக்கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருகின்றன. அதேநேரத்தில் குற்றவாளிகள் தப்பிவிடுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி காணல் நீராகவே இருக்கிறது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், சிந்தனை மாற்றமும், இறையச்சமுதாயமே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும். தன்பாலின உறவு, கள்ள உறவுகள், திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்தல் போன்ற இழி செயல்கள் நாட்டில் இன்று பெருகி வருகின்றன. இது வருங்காலத் தலைமுறையயே நாசப்படுத்திவிடும். இந்தக் கேடுகெட்ட செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்றார் . மது, போதை, ஆபாசம், ஒழுக்கக் கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி முன்னெடுத்திருக்கும் இந்தப் பரப்புரையை முன்னிட்டு கோவையில் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. * இதில் அனைத்து சமயத் தலைவர்கள் ஒன்றினையும் கருத்தரங்கங்களும் நடைபெற உள்ளது .குறிப்பாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள். நோட்டீஸ் விநியோகம் இல்லங்களில் மக்களை சந்திப்பது , அரங்கக் கூட்டங்கள், தனி நபர் கவுன்சிலிங் வழங்குதல்.
விழிப்புணர்வு கண்காட்சிகள்,மற்றும், பேரணி, மனிதச்சங்கிலி விழிப்புணர்வு , சமூக வலைதள பிரச்சாரம் செய்வது, அதே போன்று பள்ளி, கல்லூரிகளில் மாணவ,மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவும் ,ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்கள் , உறுதி மொழி ஏற்பு நிகழ்வுகள் , போன்ற பல்வேறு நிகழ்வுகளை, நடத்தி கோவையில் 15 லட்சம் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளோம் என்றார்கள் . இந்த நிகழ்ச்சி முஸ்லிம் பெண்கள் முன்னெடுக்கும் பரப்புரைதானே தவிர இது முஸ்லிம்களுக்கான, பெண்களுக்கான பரப்புரை அல்ல. ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இதில் அனைவரும் நல்ல நோக்கத்திற்காக ஒன்றிணைவோம். ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து ‘ஒழுக்கமே சுதந்திரம் பிரச்சார இயக்கத்தின் இலச்சினை (LOGO) வெளியிடப்பட்டது. மேலும் Dr. KVS ஹபீப் முஹம்மது எழுதிய ‘ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டது. முடிவில் கோவை சபீர் அஹமது, மீடியா செயலாளர், (ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,) விழிப்புணர்வு குறித்து விளக்க உரைகளை செய்தியாளர்களுக்கு வழங்கினார்