பெண்கள் நிர்வாண மாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் !

மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இரண்டு குகி இன பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ளது.
மணிப்பூர் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்க பிரதமருக்கு ஏன் இவ்வளவு காலம் ஆனது என்று மக்கள் பலரும் கேட்கின்றனர்.

வீடியோ வெளியான பிறகு பேசிய அவர், இந்தச் சம்பவம் “இந்தியாவை அவமானத்தியது” என்றும் “இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பிக்க மாட்டார்கள், மணிப்பூர் மக்களுக்கு நடந்ததை மன்னிக்கவே முடியாது” என்றும் கூறினார்.
ஆனால், மணிப்பூர் குறித்து அவர் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க ஏன் இவ்வளவு காலம் ஆனது என்று மக்கள் பலரும் கேட்கின்றனர்.
இந்தக் கலவரத்தைத் தடுக்கும் முயற்சியில் இந்திய அரசு சமீபத்தில் 40,000 ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர், காவல்துறையினரை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இதுவரை, நேரடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருமாறு பழங்குடித் தலைவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
இதற்கிடையே, வன்முறை தொடர்ந்து பரவிக் கொண்டிருப்பது, மேலும் பல கிராம மக்களைத் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளுகிறது.

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையைக் கோரி தீப்பந்தங்களுடன் இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்கள். மெய்தேய், குகி, நாகா இன மக்கள் பழைய பிரச்னைகளை மறந்து மீண்டும் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற கனவும் இந்த வன்முறைத் தீயில் கருகிக் கொண்டிருக்கிறது.கடந்த ஒன்றரை மாதங்களில் சாதிச் சண்டையாக உருவெடுத்த இந்த வன்முறை இனக் கலவரமாக மாறிவிட்டது. இந்தியாவில் உள்ள ஒரு சிறிய மாநிலத்தின் வன்முறையை கிட்டத்தட்ட உள்நாட்டுப் போரின் நிலை என்று பலரும் வர்ணிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.
பெரும்பான்மையான மெய்தேய் மற்றும் சிறுபான்மை குகி சமூக மக்களுக்கு இடையே நிலம், செல்வாக்கு ஆகியவற்றுக்கான மோதல் கலவரமாக மாறி பூதாகரமாக வளர்ந்துள்ளது.
இந்தப் பகுதியில் பெண்களுக்கு எதிரான சமீபத்திய கொடூர பாலியல் துன்புறுத்தல் நாட்டையே உலுக்கியது. மே மாதத்தில் இரண்டு குகி இன பெண்கள், அவர்களது கிராமம் அழிக்கப்பட்ட பிறகு மெய்தேய் சமூக ஆண்களால் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தின் வீடியோ சமீபத்தில் வெளியானது.
இவ்வளவு கொடூரமான வன்முறை சம்பவங்கள் மணிப்பூரில் ஏன் நடக்கிறது? அங்கு என்னதான் பிரச்னை!?
மணிப்பூர் இப்போது இரண்டு துண்டுகளாகிவிட்டதைப் போல் காட்சியளிக்கிறது.


ஒரு பகுதி மெய்தேய் சமூக மக்களிடமும் மற்றொரு பகுதி குகி சமூகத்தினரிடமும் உள்ளது.
கண்ணுக்குத் தென்படும் காட்சிகள், இந்த வன்முறை வாரக்கணக்கில் நீடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மெய்தேய், குகி, நாகா இன மக்கள் பழைய பிரச்னைகளை மறந்து மீண்டும் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற கனவும் இந்த வன்முறைத் தீயில் கருகிக் கொண்டிருக்கிறது.


மலைகள் நிறைந்த வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், வங்கதேசத்திற்கு கிழக்கே அமைந்துள்ளது. அதன் மக்கள்தொகை 33 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மெய்தேய்
சமூகங்களான குகி, நாகா ஆகிய சமூகங்களைச் சேர்ந்த மக்கள் 43% வாழ்கின்றனர்.
மே மாத தொடக்கத்தில் ஆரம்பித்த கலவரத்தில் இதுவரை குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சுமார் 400 பேர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை அடக்க ராணுவம், துணை ராணுவப் படைகள், காவல்துறை ஆகியவை போராடி வருகின்றன. அங்கு நடந்துகொண்டிருக்கும் கலவரத்தால் 60,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
காவல்துறையின் ஆயுத குடோன்கள் சூறையாடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான தேவாலயங்கள், ஒரு டஜனுக்கும் அதிகமான கோவில்கள் அழிக்கப்பட்டன. கிராமங்கள் தீக்கிறையாக்கப்பட்டன. மணிப்பூர் மாநிலம் எப்போது அமைதி திரும்பும் என எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பிய வண்ணம் உள்ளனர். பதில் சொல்ல வேண்டிய மோடியின் ஒன்றிய அரசு திசை திருப்ப முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.