சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் பெண் காவலரை துன்புறுத்துவதால் தற்கொலை செய்யப்போவதாக செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதிஅனுப்பியுள்ள பெண் காவலர்!?
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கவிதா மாவட்ட கண்காணிப்பாளருக்கு தன்னை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மனதளவில் துன்புறுத்துவதாகவும் அதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை அதனால் உயிர் விட முடிவெடுத்துள்ளேன் என்று உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.
கடிதத்தில் எழுதி உள்ளது…. கல்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ் எஸ் ஐ ரமேஷ் மற்றும் சேகர் இரண்டு பேரும் என்னை காவல் நிலையத்தில் மனதளவில் துன்புறுத்தி வருகிறார்கள் மற்றும் என் விருப்பம் இல்லாமல் மகாபலிபுரம் AWPS அயல் பணிக்கு அனுப்புகிறார்கள் என்றும் அவர்களுடைய பேச்சைக் கேட்காமல் என்னை
இது சம்பந்தமாக மகாபலிபுரம் டிஎஸ்பி அவர்களை நேரில் சந்தித்து என்னுடைய கோரிக்கையை கூறியபோது அவர் செவி சாய்த்து கேட்காமல் என்னை மிரட்டும் தொனியில் பேசி அனுப்பினார் என்று கூறியுள்ளார் .3/5/ 2001 அன்று சனிக்கிழமை விடுமுறை கேட்டு சென்ற பின் எண்ணை சிறப்பு உதவி ஆய்வாளர் ஆப்சென்ட் போட்டு பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டையும் பெண் காவலர் கவிதா கூறியுள்ளார். இரண்டு மாதம் முன்பு தான் எனது தந்தை இறந்து தற்போது என்னுடைய தாய்க்கு காலில் பாம்பு கடித்து அதனால் அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் என்ன வேண்டும் என்றே வீட்டிற்கு செல்ல விடாமல் துன்புறுத்தி வருகிறார்கள்.
காவல் நிலையத்திற்கும் என் வீட்டிற்கும் 50 கிலோமீட்டர் உள்ள நிலையில் காவல் நிலையத்தில் உள்ள உயர் அதிகாரிகள் என்னை மனதளவில் புண்படுத்தி வருகிறார்கள் என்றும் நான் காவல் பணி தொடர்ந்து செய்ய விருப்பமில்லை என்றும் இந்த உலகத்தை விட்டு பிரிகிறேன் என்றும் வரும் காலத்தில் காவல் நிலையங்களில் உயரதிகாரிகள் காவலர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று உருக்கமான கடிதத்தை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்களுக்கு எழுதியுள்ளது சக காவலர்களிடம் அதிர்ச்சியைஅளித்துள்ளது.
எது எப்படியோ தொடர்ந்து இதுபோன்ற பெண் காவலர்கள் மற்றும் ஆண் காவலர்கள் தாங்கள் வேலை செய்யும் காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகளால் மன உளைச்சலினால் உயிர் விடுவது தொடர்ந்து நடைபெற்று வருவதை உயரதிகாரிகள் காவலர்களின் குறைதீர்ப்பு என்ற ஒரு நிகழ்ச்சியில் காவலர்களின் குறைகளை காதுகொடுத்து கேட்கவேண்டும் என்றும். காவலர்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி ஒரு சடங்காக மட்டுமே இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஆகவே தமிழக முதல்வர் பெண் காவலர்களின் தாய் என்று பல காவலர்கள் கூறி வருகின்ற நிலையில் உடனடியாக இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் காவல்துறை டிஜிபி அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
முன்னாள் காவலர் என்ற முறையில் ஒரு காவலரின் வலி இன்னொரு காவலரான எனக்கு தான் தெரியும் என்ற முறையில் இந்த பதிவு
திமுக ஆட்சிக்கு வந்தால் காவலர்கள் நிம்மதியாக பணியாற்றலாம், காவலர்களின் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை காவலர்கள் மத்தியில் இருந்தது. ஆட்சிக்கு வந்தப்பின்
அதே போலவே பல சலுகைகள் வழங்கப்பட்டது.
குறிப்பாக பேறுகால விடுப்பு 12 மாதங்கள், பெண் காவலர்கள் VVIP கள் வரும் பொழுது சாலையோர பணிகளில் நிற்க வேண்டாம் எனவும், வார விடுமுறைகள் கட்டாயமாக வழங்க வேண்டுமெனவும், ஆணை பிறப்பிக்கப் பட்டது. காவலர்களின் குடும்பங்கள் இந்த ஆணையை வரவேற்று மகிழ்ந்தனர்.
ஆனால் இவை நடை முறைப் படுத்தப்படுகிறதா என்றால் இல்லை.
வார விடு முறைகள் வழங்கப்படாமல் முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கறார்கள் என்பதற்கு திருச்சி பெண் காவலர் சுமதியின் வீடியோவே சாட்சி.
ஒரு காவலரை அழிக்க உயர் அதிகாரிகள் காட்டும் அவசரம், அவர்களுக்கு நல்லது செய்வதில் ஒரு போதும் காட்டுவதில்லை என்பது தான் உண்மை. இதை நானே அனுபவித்திருக்கிறேன்.
காவல் துறை முதலமைச்சரின் இலாக்கா என்றாலும் சின்ன சின்ன விசியங்களை எல்லாம் முதலமைச்சரே பார்க்க வேண்டுமென்றால் காவல் அதிகாரிகள் எதற்கு?
சுமதி தம்பதியர் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்கள். ஒருவேளை அசம்பாவிதம் நடந்தால் ஒரு இரங்களோடு முடிந்துவிடும்.
அதனால் கெட்டப் பெயர் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிக்கு இல்லை. முதலமைச்சரைத்தான் பிற்போக்கு வாதிகள் பேசுவார்கள்
ஆகவே பத்திரிக்கை ஊடகங்கள் அந்த தம்பதியர்களின் குறைகளை அவர்களின் வேதனைகளை வெளி கொண்டு வர வேண்டும்.
காவல் துறை அதிகாரிகள் காவல் துறையில இருந்துகிட்டு வீடியோ பதிவிட்டது குற்றம், உங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தான் சொல்ல வேண்டுமே தவிர, வீடியோ பதிவு செய்வது தவறு என, அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து அவர்களை தற்கொலை செய்ய தயவு செய்து தூண்டிவிடாதீர்கள்.
காவல் அதிகாரிகள் காவலர்களின் குறைகளை காது கொடுத்து கேளுங்கள். குறை தீர்க்கும் நாள் என்று காவலர்களை அதிகாரிகள் வரச் சொல்கிறார்களே தவிர எந்த குறையும் தீர்ந்தபாடில்லை
காவலர்கள் இறந்த பிறகு வருத்தம் தெரிவிப்பதை விட காவலர்களின் விருப்பம் கேளுங்கள்.
சுமதி போன்ற பெண் காவலர்களுக்கு முன்னாள் காவலர் என்ற முறையில் நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. போராட வேண்டுமே தவிர சோர்ந்து போகக் கூடாது. தன்னம்பிக்கையோடு இருங்கள் தைரியமாக இருங்கள் உங்களுக்கான நீதி கிடைக்கும்.
நன்றி.
கவி செல்வ ராணி திருச்சி.