காவல் செய்திகள்

பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள்! நேரில் விரைந்து சென்ற விருதுநகர் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

அருப்புக்கோட்டையில் கொலை செய்த கும்பலை கைது செய்ய சாலை வரிகளில் ஈடுபட்டவர்கள் அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் திருச்சுழி அருகே ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் (33). சரக்கு வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.

காளிக்குமார் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனத்தை பின் தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த  ஐந்து பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் கடுகாயம் அடைந்த  ஓட்டுநர் காளி குமாரை  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதமாக உயிரிழந்தார். உயிரிழந்த உடலை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடல் பிரோத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சுழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட உறவினர்கள்

கொலை செய்த கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது போராட்டம் கலவரமாக மாறியது ! கலவரத்தை தடுத்து நிறுத்த முயன்ற அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி தலை முடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் தாக்குதல் நடத்திய ஆறு பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Articles

Back to top button