பொது மக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காத 24 துணை ஆட்சியர்கள் வேறு துறைக்கு அதிரடி மாற்றம்!

தமிழக முதல்வர் சில தினங்களுக்கு முன்பு கிண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .அதில் பொதுமக்கள் வழங்கிய பல மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்ற குற்றச்சாற்று எழுந்தது பொதுமக்களிடமும் நேரில் தங்களுடைய புகார் மனுக்களை பற்றி விசாரித்தார். அப்போது முதல்வரிடம் பல மாதங்களாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கிறோம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற புகாரை முதல்வரிடம் கூறியதன் அடிப்படையில் உடனே பொதுமக்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வருவாய்த்துறை என்பது நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது என்றும் பொது மக்களின் தேவைகள் மற்றும் அடிப்படையான் சாந்திகள் வழங்குதல் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட கணவரை இழந்த பெண்கள் அவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் வழங்க குடும்ப அட்டை வழங்குதல் மட்டும் சான்றிதழ் வழங்குதல் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் தான் நடக்கிறது என்று சுட்டிக்காட்டினார். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை அழைத்து அளிக்கக்கூடாது என்றும் எச்சரித்தார் முதல்வர். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியர்களின் வருகை பதிவேடு மற்றும் மற்ற பதிவேடுகளையும் பணியில் இருப்பவர்களின் விவரங்களையும் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். சுமார் இந்த ஆய்வு 20 நிமிடம் வரை நடந்தது. அதன் பின் 1/6/ 2022 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்பு
24 துணை ஆட்சியர்களை வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது !