போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் தொடர்பாக ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க, துரிதமாகப் பணிகளை மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், மேம்பாலங்களின் பணிகளை விரைவுபடுத்திடவும் பொதுப்பணித்துறை அமைச்சர் இன்று (18.07.2021) ஆய்வு மேற்கொண்டார்கள்.
வேளச்சேரி மேம்பாலம்
ரூ.108.00 கோடி மதிப்பீட்டில், வேளச்சேரி புறவழிச்சாலையில் இருந்து தாம்பரம் முதல் அடுக்கில் 640.40 மீட்டர் நீளத்திற்கு இரு வழிப்பாதை மேம்பாலமும், தரமணி சாலையில் இருந்து வேளச்சேரி புறவழிச் சாலை செல்ல இரண்டாவது அடுக்கில் 1027.70 மீட்டர் நீளத்திற்குக் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த மேம்பாலப் பணிகளை 31.12.2021க்குள் முடிக்க மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஹசன் மௌலானா அவர்கள் உடன் இருந்தார்
.
மேடவாக்கம் மேம்பாலம்
ரூ.146.41 கோடி மதிப்பீட்டில் இரண்டு மேம்பாலப் பணிகள் 3 வழித்தடப் பாலமாக அமைக்கப்படுகிறது. இதில், வேளச்சேரி – தாம்பரம் தடத்தில் 1060 மீட்டர் நீளத்திற்குப் பணிகள் முடிக்கப்பட்டுப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. தற்போது தாம்பரம் வேளச்சேரி தடத்தில் நடைபெறும் பணிகள் 31.12.2021க்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் வகையில் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார்கள். சோழிங்கநல்லுhர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அரவிந்த் ரமேஷ் அவர்கள் உடன் இருந்தார்.
தாம்பரம் நடை மேம்பாலம்
ரூ.19.75 கோடி மதிப்பீட்டில் ஜி.எஸ்.டி சாலையின் குறுக்கே இரயில்வே நிலையத்தை இணைக்க 242 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்ட நடை மேம்பாலம் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 60 மீட்டர் நீளத்திற்கு இரயில்வே பகுதியினை இணைக்கும் பணியினை 31.10.2021க்குள் முடிக்க அறிவுரை வழங்கினார்கள். தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.ராஜா அவர்கள் உடன் இருந்தார்.
ரூ.19.75 கோடி மதிப்பீட்டில் ஜி.எஸ்.டி சாலையின் குறுக்கே இரயில்வே நிலையத்தை இணைக்க 242 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்ட நடை மேம்பாலம் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 60 மீட்டர் நீளத்திற்கு இரயில்வே பகுதியினை இணைக்கும் பணியினை 31.10.2021க்குள் முடிக்க அறிவுரை வழங்கினார்கள். தாம்பரம் சட்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்கள் உடன் இருந்தார்.
குரோம்பேட்டை இராதாநகர் இரயில் நிலையம் அருகில் சுரங்கப்பாதை
ரூ.28.99 கோடி மதிப்பீட்டில், 329 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதைப் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, பயன்பாடு சாதனங்கள் மாற்றி அமைக்கும் பணி முடிக்கப்பட்டுப் பணி துவங்கப்பட்டுள்ளது. இப்பணியினை 31.03.2022க்குள் முடிக்கும்படி மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.இ.கருணாநிதி அவர்கள் உடன் இருந்தார்.
கோயம்பேடு மேம்பாலம்
ரூ.93.50 கோடியில், 980 மீட்டர் நீளத்திற்கு மையத் தடுப்பானுடன் கூடிய 4 வழித்தட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. புறநகர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் இம்மேம்பாலப் பணியினை 31.8.2021க்குள் முடிக்க காலக்கெடு நிர்ணயித்து மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்கள். விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.எ.எம்.வி.பிரபாகர் ராஜா அவர்கள் உடன் இருந்தார்.
மேலும், இந்த ஆய்வில் நெடுஞ்சாலைத்துறையின் உயர் அலுவலர்கள் சந்திரசேகரன், தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு), கோதண்டராமன், தலைமைப் பொறியாளர், (பெருநகரம்) முருகேசன், தலைமைப் பொறியாளர்(திட்டங்கள்) மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.