போலி நபர்கள் பெயரில் 100 நாள் வேலை திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல கோடி ஊழல் முறைகேடு! அரசின் விதிகளை காற்றில் பறக்க விட்டு கல்லாக்கட்டும் குடிமங்கலம் (BDO) வட்டார வளர்ச்சி அலுவலகம்!தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
திருப்பூர் குடிமங்கலம் (BDO) வட்டார வளர்ச்சி அலுவலர் உடந்தையுடன் கொண்டம்பட்டி ஊராட்சி மன்றத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பல லட்சம் மோசடி!தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
மாநிலத்திலுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் உள்ள “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி நடைபெறுகிறது.
ஒரு நாளுக்கு ரூ. 273 வழங்கப்படுகிறது. இதை ரூ. 300 ஆக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு, நூறு நாட்கள் வேலை வழங்கும் திட்டம் என்பதால், 100 நாள் வேலை என்று பரவலாக சொல்லப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கொண்டம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல லட்சம் முறை கேடு!
மாநிலத்திலுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் உள்ள “தமிழ்நாட்டில் உள்ள 333 ஊராட்சிகளிலும் தொழிலாளர்களின் ஊதியம் வங்கி கணக்கில் மின்னணு நிதி மாற்றம் மூலமாக அரசு கணக்கிலிருந்து நேரடியாக தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு ஊதியத் தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது 09.11.2016 முதல் 333 ஊராட்சிகளிலும் தொழிலாளர்களின் ஊதியம் வங்கி கணக்கில் பயனாளியின் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு தேசிய மின்னணு நிதி மாற்றம் மூலமாக ஊதியத் தொகை 294 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
நமது இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களே என்று சொன்ன மகாத்மாவின் பெயரில் செயல்படும் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகும்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள பல கிராமங்களில் பணிகள் முறையாக வழங்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது.உடுமலைப்பேட்டை வட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது .
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சுகந்தி முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) சாதிக் பாஷா குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளர் சிவகுருநாதன், ABDO ஆகியோர் உள்ளனர்.
இதில் கொண்டம்பட்டி ஊராட்சி உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி, துணைத் தலைவர் விஜயசாந்தி,ஊராட்சி செயலர் கல்பனா செந்தில் கணேஷ் மாலா பணிதல பொறுப்பாளர் ராமு ஆகியோர் உள்ளனர்.
கொண்டம்பட்டி ஊராட்சி வல்லக் குண்டாபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்
வேலைக்கு வராத 50க்கும் மேற்பட்ட நபர்கள் பெயரில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் கொடுத்துள்ளனர்.
இந்தப் புகார் சம்பந்தமாக விசாரணை நடத்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவ ராஜ்
திருப்பூர் மாவட்ட குறை தீர்ப்பாளர் அதிகாரி பிரேமலதா நியமிக்கப்பட்டார்.முதற்கட்டமாக கடந்த ஜூலை 3 ஆம் தேதி கொண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி செயலர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணித்தள பொறுப்பாளர் குடி மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். முதல் கட்டமாக வேலை செய்யாத 2 நபர்கள் வங்கிக் கணக்கில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 475 ரூபாய் பணம் செலுத்தப் பட்டிருந்தது இரண்டாம் கட்ட விசாரணை கடந்த ஜூன் 17ஆம் தேதி கொண்டம்பட்டி ஊராட்சியில் நடந்தது.
அப்போது 17 பயனாளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது கோப்புகளை ஆய்வு செய்த போது வேலைக்கு வராத பல பேர் பெயரில் உள்ள 100 நாள் வேலை அடையாள அட்டையை பயன்படுத்தி 2019 2020 முதல் தற்போது வரை 15 லட்சம் ரூபாய் வரை ஊழல் முறைகேடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்த ஊழல் முறைகேட்டில் பணித்தள பொறுப்பாளர் திட்டப் பணிகளை சட்ட விரோதமாக கையாண்டு உள்ளார். அதுமட்டுமில்லாமல் வருகை பதிவேடுகளில் 33 பேர் பெயர்களை பொய்யான வருகை பதிவு செய்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆவணங்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்காமல் அரசு விதிகளை மீறி செயல்பட்டுள்ளார்.
இந்த ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அது மட்டும் இல்லாமல் 33 பேர் நபர் அடையாள அட்டையை ரத்து செய்யவும் அதுமட்டுமில்லாமல் முறைகேடாக வங்கியில் செலுத்திய 15 லட்சம் ரூபாயை வங்கியில் இருந்து திரும்பப் பெற்று அரசு நிதிக்கு செலுத்துமாறு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு விசாரணை அதிகாரி பிரேமலதா உத்தரவிட்டுள்து குறிப்பிடத்தக்கது.
17/03/2023 அன்று தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னால் மாவட்ட ஆட்சியர் வினீத் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள 333 ஊராட்சிகளில் பெரும்பாலான ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொடர்ந்து முறைகேடு நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளிலும் தனி அதிகாரிகளை நியமித்து ஆய்வு மேற்கொண்டு தணிக்கை செய்தால் வேலைக்கு செல்லாதவர்களை பணி செய்ததாக அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்ட சுமார் 100 கோடி ரூபாய் வரை அரசுக்கு திரும்ப கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.