மக்கள் குறைதீர்க்கும் நாளில் முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட தேனி மாவட்ட ஆட்சியாளர் !
மக்கள் குறைதீர்க்கும் நாளில் தலைமைச் செயலாளர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட தேனி மாவட்ட ஆட்சியாளர் !
கூட்டங்கள் நடத்துவதால் மட்டுமே மக்களின் குறைகள் தீர்ந்து விடாது. என்று சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் புதிய மாவட்ட ஆட்சியாளர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு ஆட்சியாளர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டியவைகளைப் பற்றி பட்டியலிட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படுகிற குறை தீர்க்கும் நாளில் பெறப்படுகிற மனுக்களின்மீது உரிய நடவடிக்கை எடுத்து அவற்றிற்கும் தீர்வு காண்பது மிகவும் முக்கியம். அத்தீர்வு பிரச்சினைக்கான முடிவாக இல்லாமல் விடிவாக இருக்க வேண்டும். உங்களிடம் அளிக்கப்படுகிற மனுக்கள் அவைகளின் கவலைகளையும் ஏழைகளின் துயரங்களையும் எளியவர்களின் கண்ணீரையும் தாங்கி வருகின்றன என்பதை உணர்ந்து அவற்றை ஈர இதயத்தோடு பரிசீலித்து ஒவ்வொரு மனுவையும் நம்முடைய உறவினர் அளித்த மனுவாய் கருதி பரிசீலித்து அவற்றில் அவர்களுக்கு சாதகமாக முடிவெடுக்க முடிந்தால் செய்து தருவதும், இயலாதபோது எவ்வாறு அணுகலாம் என்பதை பகிர்ந்தும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் குறை தீர்க்கும் நாட்கள் நெஞ்சத்தை நிறைவாக்கும் நாட்களாக வளர்ச்சியடையும்.
திங்கட் கிழமை மதியத்திற்கு மேல் நடத்தப்பட வேண்டிய கூட்டங்களைப் பட்டியலிட்டு ஒரே நாளில் நடத்தி முடிக்க வேண்டும். சிலர் வாரம் முழுவதும் கூட்டங்களைப் பரவலாக்கி அடிக்கடி அலுவலர்களை வரவழைத்து அவர்கள் களப் பணி செய்யாமல் ஆட்சியர் அலுவலகத்திலேயே தவமிருக்கும்படி செய்து அவர்கள் நேரத்தை வீணடிப்பதுண்டு. அதைத் தவிர்த்து, திங்களோடு கூட்டங்களை முடித்துக்கொண்டு, ‘அவர்கள் அலுலவக பணிகளையாற்ற விடுவிப்பது அவசியம்.
அதற்குப் பிறகு, அவர்களை ஆய்வுப் பணியிலோ முகாமின் போதோ களப்பணிகளிலோ சந்திப்பதே சாலச் சிறந்தது. வாரத்தின் மற்ற நாட்களை தணிக்கை செய்யவும், கள ஆய்வு செய்யவும் பயன்படுத்த வேண்டும். அலுவலக கோப்பில் அகப்படாத செய்திகள் களப் பணியின்போது கண்களில் வைக்கபடும். மக்களைச் சந்தித்தாலே அவர்கள் துயரங்கள் பாதி தீர்ந்ததாக உணர ஆரம்பித்துவிடுவார்கள். களத்தில் சகதியிலும், சேற்றிலும் தங்களைக் காண வருகிற அலுவலர்களையே மக்கள் மனதில் வைத்துப் போற்றுகிறார்கள்.
மாவட்ட அளவிலேயே பெறப்படுகிற மனுக்களில் அதிக கவனம் செலுத்தி குறைகளை களைந்தால், தேவையில்லாமல் மக்கள் மனுக்களை எடுத்துக் கொண்டு மாநில தலைநகருக்கு படை எடுக்கும் சூழல் ஏற்படாது.
என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
. ஆனால் தலைமைச் செயலாளராக இறையன்பு அனுப்பிய சுற்றறிக்கையை காற்றில் பறக்க விட்டு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியாளர் காலதாமதமாக வந்ததால் மாவட்ட ஆட்சியாளர் வரும் வரை நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்த அவல நிலை!
தேனி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியாளராக பொறுப்பேற்று சில தினங்களே ஆன நிலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொள்கிறார். ஆனால் மக்கள் குறை தீர்க்கும் கூட்ட முதல் நாளில் மாவட்ட ஆட்சியர் தாமதமாக வந்தது விமர்சனத்திற்கு உள்ளாகிவிட்டது.
அது மட்டும் இல்லாமல் வெயிலில் ஆண்கள் பெண்கள் முதியவர்கள் என நூற்றுக்கணக்கான பேர் தங்களது கோரிக்கை மனுக்களை கையில் வைத்துக்கொண்டு நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார்கள் .
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கின் வெளிப்புற வாசலில், இருபுறமும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக காத்திருந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர். இந்த அவலநிலை தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை!!
இனிமேலாவது வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை அன்று மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில், நீண்ட வரிசையில் காத்திருக்கும் முதியவர்களுக்கு முதலுதவி செய்வதற்கு ஒரு மருத்துவக் குழுவை நியமித்து அலுவலக வளாகத்தில் 108ஆம்புலன்ஸ் நிறுத்தி வைத்து கூட்ட நெரிசலில் நிகழும்
அசம்பாவிதங்களை தவிர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது
சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதற்கு முன்பு தேனி மாவட்ட , நிழல் ஆட்சியராக, செயல்பட்டு வந்த, தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் தண்டபாணி, மீண்டும் அதே நிலையில் தற்போது தொடர்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியாளர் ஆர்.வி.ஷஜீவனா, ஊனமுற்றோர்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்துவந்த நிலையில், காலதாமதமாக, வழக்கத்திற்கு மாறாக, திட்ட இயக்குநர் தண்டபாணி தலைமையில், (13-02- 2023) நடைபெற்ற மக்கள் தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, நீண்ட நேரத்திற்கு பிறகு மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில் கலந்து கொண்டு மனுக்களை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனியில் நிழல் ஆட்சியராக தொடர்ந்து நீடிக்க நினைக்கும் திட்ட இயக்குநர் தண்டபாணி, வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆட்சியாளர் தான் இருக்க வேண்டும். ஒரு உரையில் இரண்டு கத்தி இருந்தால் எப்படியோ அதே போன்று நிழல் ஆட்சியாளராக இருக்க வேண்டும் என்று நினைப்பது அந்த மாவட்டத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதுதான் நிதர்சனம். ஆகவே தேனி மாவட்டத்தில் ஒரு ஆட்சியாளர் என்ற நிலை மாற வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த பொதுமக்கள் மற்றும்
,சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.
எது எப்படியோ சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டுகளை ஏற்க மனமில்லை என்றாலும் தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில்
ஏதோ குறைகளைக் கண்டுபிடிப்பதற்காக நடத்துகின்ற கூட்டம் அல்ல; இதனுடைய நோக்கமும் அதுவல்ல. மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கருதிதான் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப் பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
அது மட்டும் இல்லாமல் பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய்த்துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, விளிம்பு நிலை மக்களுடைய நலன், நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைகளைச் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அதனுடைய பயன் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும்.
ஏதோ குறைகளைக் கண்டுபிடிப்பதற்காக நடத்துகின்ற கூட்டம் அல்ல; இதனுடைய நோக்கமும் அதுவல்ல. மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கருதிதான் மக்கள் குறைதீர்க்கும் நாள் அமைய அது மட்டும் இல்லாமல் பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும்.ஒவ்வொரு திட்டமும் என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் சிதையாமலும், அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றிக் காட்டும் வகையிலும் உங்களது செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கைக்கு மதிப்பு கொடுத்து
புதிய மாவட்ட ஆட்சியாளர் செயல்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.