மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் முளைக்கும் பெட்டிக்கடைகள்;
அகற்றச் சொல்லி மதுரை மாநகராட்சி எச்சரிக்கை!
மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் முளைக்கும் பெட்டிக்கடைகள்;
அகற்றச் சொல்லி மதுரை மாநகராட்சி அதிரடி நோட்டீஸ்!
மதுரை மாநகரில் தற்போது அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதால் மதுரை மாநகரில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது சம்பந்தமாக பலமுறை மதுரை மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்ததன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய ஆய்வு மேற்கொண்டார்.
மதுரையில் 100 வார்டுகளிலும் ஆட்சியர் மாநகராட்சி மாற்று திறனாளிகள் விதவைகள் ஆதரவற்றோர் சாலையோரங்களில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி வழங்கப்படுகின்றன. அந்தக் கடைகள் 8 அடி நீளம் 6 அடி அகலம் அதிகபட்சம் 8 அடி அகலம் 8 அடி நீளம் அளவில் வைக்க அனுமதி வழங்கப்படும்.
தற்போது சாலை ஓரங்களில் இருக்கும் கடைகள் அனைத்தையும் ஆய்வு செய்தபோது நூற்றுக்கும் மேலான கடைகள் அனுமதி இல்லாமலும் காலாவதியான அனுமதி அடிப்படையிலும் ஏறாலமான பெட்டிக்கடைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
ஒரு சில இடங்களில் பெட்டி கடை வைத்திருப்பவர்கள் பெயரளவுக்கு பெட்டி கடையில் வைத்துவிட்டு அதன் முன்பும் பின்பும் சுற்றியுள்ள இடங்களையும் ஆக்கிரமித்து ஹோட்டல் வியாபார நிறுவனங்கள் நடத்துவதையும் இந்த ஆய்வில் தெரியவந்தது.
மற்றும் பெட்டிக்கடைகள் பலர் போலி சான்றிதழ்களை தயார்செய்து பெட்டிக்கடை நடத்தி வருவதையும் பல கடைகள் அனுமதியை புதுப்பிக்காமல் பெட்டிக்கடையில் தொடர்ந்து நடப்பதாக குற்றச்சாட்டு வந்துள்ளது.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஒரு வாரம் கெடு விடுத்துள்ளார்.
இதுதவிர மாநகராட்சி பராமரிப்பு பகுதிகளில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுமானங்கள் பெட்டிக்கடைகள் போக்குவரத்து இடையூறாக உள்ளன அதனால் இக்கதைகளை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் இல்லாவிட்டால் மாநகராட்சி மூலம் அகற்றப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.