காவல் செய்திகள்

வாகனங்கள் செல்ல தடை!மதுரை பாண்டியன் ஹோட்டல் அழகர்கோவில் சாலை நவநீதகிருஷ்ணன் கோவில் வீதி சந்திப்பு முதல் அவுட் போஸ்ட் வரை வாகனங்கள் செல்ல தடை!
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை!

அழகர்கோவில் சாலை நவநீதகிருஷ்ணன் கோவில் வீதி சந்திப்பு முதல் அவுட் போஸ்ட் வரை வாகனங்கள் செல்ல தடை!
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை!

மதுரை – நத்தம் நான்கு வழிச் சாலையில் அமையும் பறக்கும் பாலத்துக்கு தூண்களின் மேல்பகுதியில் கான்கிரீட் சுவர்கள் பொருத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
  மதுரை – நத்தம் 35 கிமீ இருவழிச் சாலை ரூ.1000 கோடியில் நான்கு வழிச் சாலையாக மாற்றப்படுகிறது. மதுரை – செட்டிகுளம், செட்டிகுளம் – நத்தம் என இரு பிரிவுகளாக இச் சாலைப் பணியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
  மதுரை சொக்கிகுளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் வரை 7  கிமீ-க்கு பறக்கும் பாலம் அமைகிறது. பறக்கும் பாலம் மற்றும் கீழ்பகுதி என இரண்டு அடுக்கு சாலையாக இப் பகுதி அமைகிறது.  நாகனாகுளம் மற்றும் திருப்பாலை ஆகிய இடங்களில் பாலத்தில் இருந்து கீழே இறங்குவதற்கு படிகள் அமைக்கப்படுகின்றன. செட்டிகுளத்தில் இருந்து நத்தம் வரை 28 கிமீ-க்கு நான்கு வழிச் சாலை அமைக்கப்படுகிறது.
 இந்த பறக்கும் பாலத்துக்காக 200-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது நவீன தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் இப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
 தூண்களின் மேல்பகுதியில் வைக்கப்படும் பாலத்தைத் தாங்கும் கான்கிரீட் சிறகு சுவர்கள் பொருத்தப்பட்ட நிலையில் 
இந்த கான்கிரீட் சுவர்கள் ஊமச்சிகுளம் பகுதியில் தயாரிக்கப்பட்டு, லாரிகளில் கொண்டுவரப்பட்டு கான்கிரீட் மோல்டுகளாக இணைக்கபட்டது.செட்டிகுளத்தில் தொடங்கி தற்போது சொக்கிகுளம் பகுதியில் இப் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தூண்களாக கான்கிரீட் தளங்கள் மூலமாக இணைக்கப்படும்.


  தற்பொழுது கோகலே சாலை,  மாநகராட்சி பிரதான அலுவலகமான அண்ணா மாளிகை பிரதான நுழைவாயில் பகுதி,  அழகர்கோவில் சாலையில் மாநகராட்சி சூழல் பூங்கா நுழைவாயில் ஆகிய இடங்களில் இருந்து பறக்கும் பாலத்தில் ஏறி, இறங்கும் வகையில் சாலை அமைக்கப்படுகிறது. இப் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளதால்,  காவல் துறையினருடன் ஆலோசித்து இப் பகுதியில் பணிகள் தொடங்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 பறக்கும் பாலத்துடன் கூடிய   மதுரை – நத்தம் சாலை அமைக்கும் பணியில் 20 சதவீத பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. 2020 நவம்பரில் இப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது



மதுரை மாநகரில் பறக்கும் பாலம் கட்டுமானப் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது .பொதுமக்களின் வசதிக்காக கட்டுமானப் பாலங்களின் பக்கவாட்டு சாலைகளை விரைவாக முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது .

பறக்கும் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடையும் வரை அழகர்கோவில் சாலை நவநீதகிருஷ்ணன் கோவில் வீதி சந்திப்பு முதல் அவுட் போஸ்ட் வரை இருவழிப்பாதை சாலையாக வருகின்ற 20.02.2022 ந் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கீழ்க்கண்டவகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1 .  மதுரை தல்லாகுளம் கோகலே ரோடு வழியாக ஐயர்பங்களா/புது நத்தம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றங்கள் எதுவுமின்றி அதே வழித்தடத்தில் வழக்கம் போல் செல்ல வேண்டும். PTR சிலை சந்திப்பில் இருந்து பாண்டியன் ஹோட்டல் சந்திப்பிற்கு செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை.

2. பி.பி.குளம் சந்திப்பு, வடமலையான் மருத்துவமனை பகுதிகளிலிருந்து கோரிப்பாளையம் செல்லும் வாகனங்கள் PTR சிலை வழியாக பாண்டியன் ஹோட்டல் செல்ல அனுமதி இல்லை . இவ்வாகனங்கள் – SP பங்களா சந்திப்பு, தாமரைத் தொட்டி சந்திப்பு வழியாக செல்லவேண்டும்.

3. அழகர்கோவில் மற்றும் மேலூர் சாலை மார்க்கம் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் இனிமேல் விஷால் டி  மால் வழியாக செல்ல அனுமதி இல்லை.

4. அழகர்கோவில் சாலை பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோகலே சாலை வழியாக வந்து கோகலேரோடு நவநீதகிருஷ்ணன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தல்லாகுளம் பெருமாள் கோவில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, அழகர்கோவில் ரோடு – அம்பேத்கார் சிலை சந்திப்பு வழித்தடமாக பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வந்தடைந்து அங்கிருந்து நேராக அழகர் கோவில் சாலை பகுதிக்கு செல்லவேண்டும்.

5. மேலூர் சாலை பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோகலே சாலை வழியாக வந்து கோகலே ரோடு – நவநீதகிருஷ்ணன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தல்லாகுளம் பெருமாள் கோவில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, அழகர் கோவில் ரோடு – அம்பேத்கார் சிலை சந்திப்பு வழித்தடமாக பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வந்தடைந்து அங்கிருந்து வலதுபுறம் திரும்பி யூத் ஹாஸ்டல் வழியாக கக்கன் சிலை வந்தடைந்து மேலூர் சாலை பகுதிகளுக்கு செல்லவேண்டும்.

6. அதேபோல் அழகர்கோவில் சாலையிலிருந்து தாமரை தொட்டி சந்திப்பினை கடந்து தல்லாகுளம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வந்து அங்கிருந்து இடதுபுறமாக யூத் ஹாஸ்டல், கக்கன் சிலை சந்திப்பினில் வலதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை வழியாக அவுட்போஸ்ட் சந்திப்பு வழியாக தல்லாகுளம், தமுக்கம் மற்றும் கோரிப்பாளையம் செல்லவேண்டும்.

7 .  மேலூர் சாலையிலிருந்து அழகர்கோவில் சாலைக்கு தற்சமயம் கக்கன் சிலை, யூத் ஹாஸ்டல் வழியாக சென்று வரும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை வழியாக பெரியார் சிலை வந்தடைந்து வலது புறமாக திரும்பி பாரதியார் பூங்கா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வழியாக அழகர் கோவில் சாலை செல்ல வேண்டும்.

8. மேலூர் சாலையிலிருந்து நத்தம் சாலைக்கு தற்சமயம் கக்கன் சிலை, யூத் ஹாஸ்டல் வழியாக சென்று வரும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை வழியாக பெரியார் சிலை வந்தடைந்து வலதுபுறமாக திரும்பி பாரதியார் பூங்கா வழியாக PTR சிலை சந்திப்பு வழியாக நத்தம் சாலை செல்லலாம்.

9. நத்தம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் PTR சிலை சந்திப்பு செல்ல அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் SP பங்களா சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பாரதி உலா ரோடு, தாமரைத்தொட்டி சந்திப்பு வழியாக ரேஸ்கோர்ஸ் சாலை, கக்கன் சிலை சந்திப்பு வந்து கோரிப்பாளையம் மற்றும் மேலூர் சாலை செல்லலாம்.

மேற்கண்ட வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button