மதுரை சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள நவீன இஜிசி மருத்துவ பரிசோதனை கருவியை நன்கொடையாக வழங்கிய சுற்றுலா மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் !
மதுரை சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு நவீன இஜிசி (ECG)மருத்துவ கருவியை நன்கொடையாக வழங்கிய சுற்றுலா மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் !
பாராட்டிய அமைச்சர் பி மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்.
மதுரை,சோழவந்தான் நகர் பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது, இங்கு உள்ளூர் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளாக நாள் தோறும் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவம் பார்த்து பயன் பெற்று வருகிறார்கள், இந்த அரசு மருத்துவமனையை மேலும் தரம் உயர்த்த சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகின்றது.
, இந்நிலையில் நோயிக்கான மருத்துவ பரிசோதனை மேற்க்கொள்ள நவீன ஈஜிசி மருத்துவ கருவி சோழவந்தான் அரசு மருத்துவமனையில் இல்லாததால் அருகே உள்ள தனியார் பரிசோதனை நிலையத்திற்கு செல்ல வேண்டும் அப்படி இல்லை என்றால் மதுரைக்கு சென்று தான் பரிசோதனை பார்க்க வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது.
இதனை அறிந்த சோழவந்தனைச் சேர்ந்த மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன், மற்றும் அவரது சகோதரர்கள் ராஜேஸ் கண்ணா, ராம்குமார்,ஆகிய மூன்று பேரும் இணைந்து,அரசு மருத்துவ மனைக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஈஜிசி கருவி வழங்க முன் வந்தனர் ,அதன்படி பேரூராட்சி தலைவர் கே ஜெயராமன் தலைமையில் ஈஜிசி கருவியை அரசு தலைமை மருத்துவர் தீபா விடம் வழங்கினார்கள்,
இதில் மருத்துவர் சுபா முத்துலட்சுமி,செவிலியர் கள் ரேணுகா, ஜெயகவுரி,மருந்தாளுனர் முத்துராஜ் உடன் இருந்தனர்,
நன்கொடையாக இசிஜி மருத்துவ கருவி வழங்கியதை அறிந்த அமைச்சர் பி மூர்த்தி,மற்றும் எம்எல்ஏ ,ஏ.வெங்கடேசன் அவர்கள் நன்கொடையாளர்களை பாராட்டினர்கள்,
இது போன்று தன்னார்வர்கள் அரசு மருத்துவமனைக்கு தேவைப்படும் உபகரணங்களை நன்கொடையாக வழங்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள் .
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் லதா கண்ணன்,கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்தியபிரகாஷ், குருசாமி, முத்துலட்சுமிசதீஸ்குமார்,செல்வராணி,ஈஸ்வரி ஸ்டாலின்,சமூக ஆர்வலர்கள் பெல்மணி,மில்லர் இளமாறன்,நாகேந்திரன் மணிராஜ் என பலர் கலந்து கொண்டனர்,
நன்கொடையாக ஈஜிசி கருவி வழங்கியுள்ளதை அறிந்த ஊர் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பாராட்டி சென்றனர்