மதுரை டவுன்ஹால் ரோட்டில் சோதனை என்ற பெயரில் தீவிர வசூல் வேட்டை நடத்தி வரும் மதுரை நகர் போக்குவரத்துக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாநகர காவல் ஆணையர்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா எப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வரும் மே 6ல் பட்டாபிஷேகம், 7ல் திக் விஜயம், 8ல் திருக்கல்யாணம், 9ல் திருத்தோரோட்டம்
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 12ம் தேதி நடைபெற உள்ளது.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் பல துறை அதிகாரிகளின் கூட்டங்கள் மற்றும் கள ஆய்வுகளுக்குப் பிறகு, போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மாசி வீதிகளில் தினமும் நடக்கும் ஊர்வலங்களை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இருந்தாலும் சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழாவின் போது, சுவாமி வீதி உலா, கள்ளழகர் புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகளுக்காக மக்கள் கூடும்போது, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது..
சித்திரைத் திருவிழாவின் போது, பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது நெரிசலை கட்டுப்படுத்தவும்
பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, வாகனங்களை சரியான இடங்களில் நிறுத்தி, பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தசவும் மேலும், சித்திரைத் திருவிழாவின் போது, நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து தடை எரிக்கப்பட்டுள்ளது, எனவே, பயணத்திற்கு முன்பாக போக்குவரத்து பற்றிய தகவல்களை தெரிந்து தெரிந்து கொள்வதற்கு வசதியாக போக்குவரத்து காவலர்கள் முன்னறிவிப்பு பலகைகளை ஆங்காங்கே வைக்காமல் மதுரை நகர போக்குவரத்து காவல்துறையினர் அலட்சியப் போக்கை கடைபிடிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

குறிப்பாக மதுரை டவுன்ஹால் ரோட்டில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் போக்குவரத்து நெருச்சலில் சிக்கித் தவித்து ஆனால் போக்குவரத்து நெரிசல்களை சரி செய்ய வேண்டிய மதுரை மாநகர போக்குவரத்து காவலர்கள்


டவுன்ஹால் ரோட்டில் சோதனை என்ற பெயரில் இருசக்கர வாகனங்களில் வருபவர்களிடம் வசூல் வேட்டையில் தீவிரம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக
பெரியார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஜங்ஷனை இணைக்கும் சாலை:
டவுன்ஹால் ரோடு தெற்கு மற்றும் வடக்கு மதுரையை இணைக்கும் முக்கியப் பாதையாகும், மேலும் இங்கு பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் தனிப்பட்ட வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. பண்டிகை காலங்கள் மற்றும் பெரிய சமூக நிகழ்வுகளின் போது, டவுன்ஹால் ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.
வெளியூர்களிலிருந்து பொருட்களை வாங்க மதுரை டவுன்ஹால் ரோட்டிற்கு தான் வருவது குறிப்பிடத்தக்கது .குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு மற்றும் வேலை நாட்களில் மற்றும் மாலை நேரங்களில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது,
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மதுரை மாநகர போக்குவரத்து காவலர்கள் மாலை நேரத்தில் டவுன்ஹால் ரோட்டில் கூட்டமாக நின்று கொண்டு வரும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களை போக்குவரத்து காவலர்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தி வசூல் வேட்டை செய்து தேவையில்லாமல் போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்தி வருவதாகவும்
இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும்
தேவையில்லாமல் போக்குவரத்து காவலர்கள் இருசக்கர வாகனங்களில் வருபவர்களை சுமார் ஒரு மணி நேரம் கூட நிறுத்தி வைத்து பணம் கொடுத்தாள் மட்டுமே அனுப்பி விடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் சித்திரை திருவிழா முடியும் வரை போக்குவரத்து நெரிசலை மட்டுமே சீர் செய்ய
மதுரை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படியோ
காவல்துறையில் ஒரு போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் வாகன சோதனை செய்து தினந்தோறும் 50 முதல் 100 வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஒரு சில போக்குவரத்துக் காவலர்கள் தினந்தோறும் சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளிடம் 200 முதல் 500 ரூபாய் வரை கட்டாய வசூல் வேட்டையை சட்ட விரோதமாக செய்து வருவதால் தான் பொதுமக்களுக்கு காவல்துறையினர் மீது உள்ள நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.சாமானிய ஏழை எளிய மக்களுக்கான திருவிழாவா தற்போது தலைகீழாக மாறி
போக்குவரத்து காவலர்களுக்கு மட்டுமே திருவிழா கொண்டாட்டமாக இருப்பதாகவும்
சாமானிய ஏழை எளிய மக்களுக்கான திருவிழாவாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. வசூல் வேட்டையில் இறங்கி உள்ள போக்குவரத்துக் காவலர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் மதுரை மாநகர காவல் ஆணையர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!




