மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியில் திருமங்கலத்தை சேர்ந்த ரவுடி சக்திவேல் வெட்டிப் படுகொலை ! பழிக்கு பழி கொலை குற்றங்களில் நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐஜி!
மதுரை சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியில் திருமங்கலம் செங்குளம் சேர்ந்த ரவுடி சக்திவேல்
மர்ம நபர்களால் சராமாரியாக வெட்டிப் படுகொலை. திருமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் சக்திவேல் வயது 37 .இவர் மீது நாலு கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் பல மாவட்டங்களில் பல காவல் நிலையங்களில் உள்ளது குறிப்பிடத் தக்கது! முக்கியமாக கடந்த ஆண்டு திண்டுக்கல்லில் ஸ்டீபன் கொலையில் முக்கிய குற்றவாளி ஆவார்.
திண்டுக்கல் அனுமந்தராயன் கோட்டையில் சென்ற வருடம் ஸ்டீபன் என்பவரின் தலையை வெட்டி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சக்திவேல் இன்று மதியம் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழிக்கு பழி கொலை குற்றங்களில் நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தென்மண்டல ஐஜி திரு. அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.
தென்மண்டல ஐஜி-ஆக பதவியேற்றுள்ள அஸ்ரா கார்க், ஓபன் மைக் மூலமாக தென்மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், தென்மாவட்டங்களில் சாதிய ரீதியான கொலைகள் நடப்பதற்கு முன்பாக, சிறப்பு குழுவிடம் இருந்து தகவல் வந்தும் நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சாதி மற்றும் பழிக்கு பழி கொலைகள் நடக்கும் முன், தகவல் வந்து நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். தவறுகளை தடுக்காத அதிகாரிகள் முதலில் பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும், அதன்பின் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ள அவர், மூன்றாவதாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 2020 1 செப்டம்பர் 26ஆம் தேதி திண்டுக்கல் அனுமந்தராயன் கோட்டையில் ஸ்டீபன் என்பவரின் தலையை வெட்டி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சக்திவேல் கைது செய்யப்பட்டு 9 மாதத்திற்கு பின் 30/06/2022 மதியம் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை அருகே இளைஞர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனுமந்தராயன்கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்டீபன். 35 வயதான இவர், கடந்த 22 ம் தேதி இரவு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். .
தலையை அங்கே வைத்து விட்டு மட்டப்பாறை அருகே உடலை வீசி சென்றனர்.
திண்டுக்கல் சிந்தலகுண்டு அடுத்துள்ள சாமியார்பட்டி மன்மதன், மருதீஸ்வரன் தேனியை சேர்ந்த மணிகண்டராஜன், உத்தமபாளையத்தைச் சேர்ந்த ராம்குமார் அய்யங்கோட்டையைச் சேர்ந்த சங்கரபாண்டி மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்யப்பட்டார்கள்.
அவர்களில் மன்மதன் மட்டும் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக பாலத்தில் . இந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலி மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டதாக அண்மையில் கைது செய்யப்பட்ட தி.மு.க., பிரமுகர் இன்பராஜ் என்பவரை போலீசில் காட்டிக் கொடுத்ததற்காக ஸ்டீபன் கொல்லப்பட்டது தெரியவந்தது.
ஆரம்பத்தில் இன்பராஜின்
கூட்டாளியாக செயல்பட்டு வந்த ஸ்டீபன், போலி மது விற்பனையில் முறைகேடு செய்ததால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஸ்டீபனை வெளியேற்றிவிட்டு இன்பராஜ் தனது ஆதரவாளர்களான மன்மதன், சக்திவேல் உள்ளிட்டோரை வைத்து போலி மது தயாரிப்பை ரகசியமாக நடத்தி வந்துள்ளார்.
. . ஸ்டீபன் தான் போலீசுக்கு துப்பு கொடுத்தது என தகவல் கிடைத்ததால் அன்று மாலையே ஸ்டீபனை மது அருந்த அழைத்துச் சென்ற இன்பராஜின் ஆதரவாளர்களான மன்மதன் தலைமையிலான கும்பல் ஸ்டீபனை சரமாரியாக வெட்டி, தலையை மட்டும் துண்டித்து அனுமந்தராயன் கோட்டை பஸ் ஸ்டாப்பில் நடுரோட்டில் போட்டுவிட்டுச் சென்றதாக வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் கொல்லப்பட்டால், அவரைக் கொன்றவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். இது இப்படியே தொடர் கதையாக மாறுவதால் கொலைகளுக்குப் பஞ்சமே இல்லாத நிலை ஏற்படுகிறது.ள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது
கொலைகளைத் தடுக்கவும் குற்றச் செயல்களைக் குறைக்கவும் காவல்துறை இரும்புக் கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.