மதுரை வாடிப்பட்டி அருகே பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் (வால்பாறை அதிமுக எம்எல்ஏ மனைவியின் சகோதரி) வீட்டில் மதிய உணவு அருந்திய பிஜேபி கட்சித் தலைவர் அண்ணாமலை!
மதுரை வாடிப்பட்டி 09/11/22
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணார்பட்டி கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிஜேபி கட்சி நிர்வாகி வீட்டில் மதிய உணவு அருந்திய பிஜேபி கட்சித் தலைவர் அண்ணாமலை!
நவ.11-ல் பிரதமர் திண்டுக்கல் வருகிறார். இம்மாவட்டத்துக்கு பிரதமர் வருவது இதுவே முதல்முறை.திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்திற்கு பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வரவிருக்கும் நிலையில் காந்திகிராமத்தில் நடைபெறும் விழா ஏற்பாடுகளை
பாஜக நிர்வாகிகள்கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபாலன், மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மாநிலத் தலைவர் அண்ணாமலை பார்வையிட்டனர்.
அதன் பின்பு மதுரை மாவட்டம் T. வாடிப்பட்டி அருகே பட்டியலின மக்கள் வசிக்கும் சாணார்பட்டி கிராமத்தில் பிஜேபி கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.
அதன் பின்பு பட்டியலினத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது வீட்டில் மதியம் உணவருந்திய தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கிராமத்தில் உள்ள பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் .
பிஜேபி தலைவர் அண்ணாமலையுடன் தற்போது பிஜேபி சேர்ந்துள்ள அதிமுக முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உடன் வந்திருந்தார் .
மதுரை வாடிப்பட்டி சாணார்பட்டியில் வசிக்கும்
பட்டியலினத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் அதிமுக கட்சி நிர்வாகியாக இருந்தவர். சில மாதங்களுக்கு முன்பு பிஜேபி கட்சியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது..
ஈஸ்வரனின் சகோதரர் கண்ணன் சானாம்பட்டி அதிமுக கிளை பிரதிநிதி ஆவார். இவர்கள் தற்போதைய மதுரை மாவட்ட பிஜேபி பட்டியல் இனம் மகளிர் அணி நிர்வாகி போதிலட்சுமியின் உறவினர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
போதிலட்சுமி வால்பாறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல்கந்தசாமி மனைவியின் சகோதரி என்பது குறிப்பிடத் தக்கது.