மதுரை வாடிப்பட்டி திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் தொடரும் சர்ச்சை! மௌனம் காக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர்!
மதுரை மாவட்டம் டி வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தொடர்ந்து முறைகேடு நடப்பதாக வாடிப்பட்டி பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்! 26/06/23 அன்று மாலை 4 மணிக்கு திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சட்டவிரோதமாக மண் எடுத்து கடத்திக் கொண்டு போவதாக வாடிப்பட்டி பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களை அழைத்துச் சென்று திடக்கழிவு மேலாண்மை கிடங்கிய அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே சட்ட ஒழுங்கு பிரச்சனை நடந்துவிடாமல் சமயநல்லூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர் உடனே சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் சோழவந்தான் காவல் ஆய்வாளர் 20 க்கும் மேற்பட்ட காவலர்கள் வாடிப்பட்டி வட்டாட்சியர் பேரூராட்சி செயல் அலுவலர் அனைவரும் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு
இரவு 10 மணிக்கு மேல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளதாக அதிமுக கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு இதே குப்பை கிடங்கில் தீ வைத்து விட்டதாக புகார் கொடுத்ததன் பெயரில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார் ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று இதுவரை அவர் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர். தற்போது குப்பை கிடங்கில் மண் எடுத்து கடத்தி வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு தற்போது வரை மதுரை மாவட்ட ஆட்சியர் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் மதுரை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை.
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 16 ஆண்டுகளுக்குப் பிறகு விதிகள் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.இப்போது நகர்ப்புற மற்றும் தொழில்துறை பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படுகின்றன’:கழிவுகளை மீட்டெடுத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி மூலம் செல்வமாக மாற்றுவதற்கு கழிவுகளின் மூலப் பிரிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திடக்கழிவுகளை விஞ்ஞான ரீதியில் பிரித்தெடுத்தல், சேகரித்தல் மற்றும் சுத்திகரிப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அகற்றுதல் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதகமான தாக்கத்தை குறைக்கிறது. MSW இன் சேகரிப்பு, சேமிப்பு, பிரித்தெடுத்தல், போக்குவரத்து, செயலாக்கம் மற்றும் அகற்றல் ஆகியவற்றிற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உள்ளூர் அதிகாரிகள் பொறுப்பாகும்.முறையான கழிவு மேலாண்மை அமைப்பின் ஈடுபாடு குறைவாகவே உள்ளது, முதன்மையாக போதிய நிதியின்மை, குறைந்த துறைசார் வளர்ச்சி மற்றும் நிலையான கழிவு மேலாண்மை வணிகங்கள் பற்றிய அறிவு இல்லாமை ஆகியவை காரணமாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை, அதன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டதால் அல்லது இனி பயனற்றதாக இருப்பதால் கைவிடப்படும் திடப்பொருளை சேகரித்தல், சுத்திகரித்தல் மற்றும் அகற்றுதல். நகராட்சி திடக்கழிவுகளை முறையற்ற முறையில் அகற்றுவது சுகாதாரமற்ற நிலைமைகளை உருவாக்கலாம், மேலும் இந்த நிலைமைகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கும், கொறித்துண்ணிகள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களைக் கொண்டு பரவும் நோய்களுக்கும் வழிவகுக்கும் என்கின்றனர்.