மது போதையில் அரைகுறை ஆடையுடன்
மசாஜ் செய்த நிலையில் காவல் துணை ஆணையரின் அதிர்ச்சி வீடியோ!
காவல்துறை துணை கமிஷனர் மதுபோதையில் மசாஜ் செய்த போது காவலர் ஒருவரை புல்லாங்குழலில் பாடல் பாட வைத்து ரசிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் காவல் துறை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மதுரை நகர் ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சோமசுந்தரம் இவர் உதவி கமிஷனராக இருந்த போது போலீசாரை தன் சொந்த பணிகளுக்கு பயன்படுத்தியது .
ஆயில் மசாஜ் செய்ய வைத்தது இதற்கு முன் டிக் டாக் கில் சீருடையுடன் சினிமா பாடலுக்கு வாய் அசைத்தது என தொடர் சர்ச்சையில் சிக்கியவர்.
தற்போது இவர் மது அருந்திவிட்டு போதையில் ஆயில் மசாஜ் செய்து அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருக்க ஒரு காவலரை பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்ற பாடலை புல்லாங்குழலில் வாசிக்க செய்து அதை ரசித்துக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
அருகில் மது அருந்திய காலி பாட்டில்கள் தண்ணீர் பாட்டில்கள் இருக்கின்றன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வந்தவுடன் காவலர் கூறுகையில் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்ட்ர்லி முறை ஒழிக்கப்படாத நிலையில் இது போன்ற காவல்துறை உயர் அதிகாரிகளின் சொந்த விஷயங்களுக்கு காவலர்களை காவல்துறை உயரதிகாரிகள் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உயரதிகாரிகள் என்பதால் அவர்கள் மீது புகார்கள் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். காவல்துறையில் கண்ணியத்துடன் செயல்பட வேண்டிய இவர்கள் இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வருவது வருத்தம் அளிக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!