மது போதையில் வழக்கறிஞரின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடிய சமூக விரோதிகள்!
அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர்!
நடவடிக்கை எடுப்பாரா !?திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டி, கவுண்டன்பட்டி தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் சங்கர். இவர் தன்னுடைய வீட்டின் அருகே 10/04/25 அன்று

( KL 04 AC 5040) நிறுத்தி விட்டு வெளியூர் சென்று விட்டு அன்று இரவு 9:30 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது


காரின் முன் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தி இருந்ததை பார்த்த வழக்கறிஞர் அந்தப் பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி யில் பதிவானதில் யார் வந்தார்கள் என பார்த்தபோது அந்த வழியாக போதையில் வந்த நான்கு பேர் காரின் முன் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி செல்வது பதிவாகி இருந்ததாகவும் அது சம்பந்தமாக அந்த நான்கு பேர் யார் என்று பார்த்தபோது இளவரசன், அம்மன் , தெய்வேந்திரன், பொண்ணு கருப்பு ஆகிய நான்கு பேர்தான் கார் கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்ததுள்ளது.

11/04/2025 அன்று காலையில் வழக்கறிஞர் சங்கர் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு சென்று வீட்டின் அருகே நிறுத்தி இருந்த கார் கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்திய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் புகாரை பெற்றுக் கொண்ட அம்மைநாயக்கனூர் காவல் ஆய்வாளர் குருவத்தாய் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யாமல் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் ஆக்கி வருவதாகவும் இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர் புகார் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது!
இது சம்பந்தமாக புகார் கொடுத்த வழக்கறிஞரிடம் தொலைபேசியில் கேட்டபோது முன்விரோதம் காரணமாக இந்த நான்கு பேரும் இதற்கு முன்பும் ஒரு நாள் வீட்டின் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதாகவும் அதேபோல் தற்போதும் வெளியூர் சென்றிருந்தபோது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் என்றும் இவர்கள் மீது ஏற்கனவே புகார் கொடுத்தும் இதுவரை அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் எந்த வழக்கு பதிவும் செய்யவில்லை என்றும் தற்போது கார் கண்ணாடியை உடைத்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தும் அம்மைநாயக்கனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் எந்தவித வழக்கு பதிவு செய்யாமல் நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
எது எப்படியோ உன் விரோதம் காரணமாக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் போதை ஆசாமிகளின் சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
முன்விரோதம் காரணமாக ஒரு வழக்கறிஞர் மீது தொடர் தாக்குதல் நடத்துவதாக கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாமானிய ஏழை எளிய பொது மக்கள் காவல் நிலையத்தில் கொடுக்கும் புகார் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையை!




