Uncategorizedமாவட்டச் செய்திகள்

திறந்து வைத்த ஒரே மாதத்தில் மாடுகள் கட்டும் கூடாரமாக மாறிவரும் சமுதாய கூட வளாகம்!பொதுமக்கள் அவதி! நடவடிக்கை எடுக்குமா வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!

மதுரை மாவட்ட ஆட்சியர் !மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 15 வது வார்டில் பொட்டுலுபட்டியில் அயோத்திதாஸ் திட்டத்தின் கீழ் .37 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட

சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு

அமைச்சர் மூர்த்தி 2024 டிசம்பர் 8 ஆம் தேதி திறந்து வைத்தார். சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். தற்போது

சமுதாயக்கூடம் முன்பு மாடுகளை கட்டி வருவதால் சமுதாயக்கூடம் வளாகம் முழுவதும்

சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. சாதாரண ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தில் நடக்கும் விழாக்களை சிரமம் இல்லாமல் நடத்திக் கொள்வதற்கு தமிழக அரசால் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை மாடுகளை கட்டி இடையூறு இடையூறு செய்து வருவதாகவும் இதனால் சமுதாயக்கூடத்தில் நிகழ்ச்சி நடக்கும் போது அங்கு வரும் குழந்தைகள் முதல் பெரியோர்களை மாடுகள் கட்டியிருப்பதால் அச்சத்தில் வந்து செல்வதாலும் அதே போல் அந்த வளாகம் முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் பேசி வருவதாகவும் ஆகையால் பொதுமக்களுக்காக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம் வளாகத்தில் மாடுகள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சமுதாயக் கூட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அச்சமின்றி பொதுமக்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர். ஆகையால் உடனடியாக பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மாடுகளைக் கட்டி ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்கள் மீது வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

Related Articles

Back to top button