காவல் செய்திகள்

மாதம் பல லட்சம் ரூபாய் கப்பம் கட்டி  டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தும் மாஃபியா  கும்பல்! திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீது
நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?




திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில்,


திருப்பூர் மாவட்ட குடிமை பொருள்  வழங்கள் குற்ற புலனாய்வுத் துறை  கண்காணிக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக குற்றவாளிகளை கண்காணித்து வருகிறார்கள்.
தொடர்ந்து வாகன சோதனையும் நடக்கிறது.
ரேஷன்அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டாஸ் போன்ற நடவடிக்கை பாயும் என்று திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது ரேசன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது..

திருப்பூர் மாவட்டத்திலிருந்து
வெளி மாநிலங்களுக்கு குறிப்பாக கேரளா ஆந்திரா கர்நாடக மாநிலங்களுக்கு சட்ட விரோதமாக ரேஷன் அரிசி  கடத்தல் மாபியா கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை தாலுகாவில், 183 ரேஷன் கடைகளில், 1.10 லட்சம் ரேஷன் கார்டுகளும், மடத்துக்குளம் தாலுகாவில், 63 ரேஷன் கடைகளில், குறைந்தது 50 ஆயிரம் பேர் அரிசி அட்டைதாரர்களாக இருக்கிறார்கள். உடுமலை, மடத்துக்குளம் தாராபுரம் பகுதி ரேஷன் கடைகள் அமைந்திருக்கும் இடங்களில் 10 பேர் கொண்ட ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் சுற்றி வருவதாகவும் பிரதான ரேஷன் கடைகளில், தங்கள் ஆட்களை நியமித்து

ரேஷன் அரிசி கடத்தும் மாபியா  சுகுமார்


சுகுமார் மற்றும் கருப்பசாமி இருவரும் ரேஷன் அரிசி கடத்தும்  கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பாக
திருப்பூர் பகுதி சுற்றியுள்ள கோயில் வழி, வெள்ளி கல்  பாளையம் ,வீரபாண்டி, சுண்ட மேடு , டி கே டி மில் கேவிஆர் நகர் ,செல்லாநகர், இடுவம் பாளையம். ஆகிய பகுதிகளில்   ரேஷன் அரிசி வாங்கும் பொதுமக்களிடம் இரு சக்கர வாகனங்களில் வீடு வீடாக சென்று ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மொத்தமாக டன் கணக்கில் சேர்ந்தவுடன் ரேஷன் அரிசியை  

திருப்பூர் மாவட்டம் வளர்மதி அல்லிங்மில் என்கின்ற அரவை மில் களுக்கு ஆட்டோ மூலமாக இரவு நேரங்களில்  டன் கணக்கில் ரேஷன் அரிசியை சுகுமார்  கருப்புசாமி  ஆகிய இருவரும்  கொண்டு சென்று  அரிசியை பாலிஷ் போட்டு  கேரளா மாநிலங்களுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதன் மூலம் இந்த அரிசி கடத்தல் மாஃபியா கும்பலுக்கு  மாதம் பல லட்ச ரூபாய்  கிடைக்கும் பணத்தில்
திருப்பூர் மாவட்டம் குடிமை பொருள் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு மாதம் பல லட்ச ரூபாய் (கப்பம்) கட்டி  ரேஷன் அரிசி கடத்துவதாக சுகுமார் கூறுவது அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என
பொதுமக்கள்  அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தமிழ்நாடு கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்திலிருந்து தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று வருவதாகவும் மாத ஒரு முறை சோதனை என்ற பெயரில் ரேஷன் அரிசி கடத்தும் நபர்களை உணவு தடுப்பு பிரிவு காவல் துறையினர் பிடித்து ஒரு சிலர் மீது வழக்குப் பதிவு செய்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்து அவர்களை கைது நடவடிக்கை எடுத்தது போல் கண்துடைப்பு நாடகம் நடத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர்.

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி  கடத்தும் சுகுமார் மற்றும்  கருப்புசாமி  ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யாமல்   திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை  அஞ்சு வருவதாகவும் இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சுகுமார் சமூக ஆர்வலர்களை கொலை மிரட்டல் விடுவதாகவும் இதற்குப் பயந்து கொண்டு  நமக்கு ஏன் வீண் வம்பு என அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் சொல்லாமல் தவிர்த்து வருவதாகவும்  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும்  சுகுமார் மற்றும் கருப்பசாமி  ஆகிய இருவரும் 18 வயதுக்கு குறைவான இளைஞர்களை தங்களுடன் வைத்துக்கொண்டு அவர்களுக்கு  மது மற்றும் கஞ்சா வாங்கி கொடுத்து    சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தி வருவதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேபோல் தாராபுரத்தில் ஆசிக் பாய் கனகு
கனி ரேவதி சத்திய கலா சிக்கந்தர் பாய் கனகராஜ் ரவி ஆஸ் பாய் மகேந்திரன் சர்தார் பிரதாப் வினோத் அருண் ஆகியோர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சட்டவிரோதமாக திருப்பூர் மாவட்டத்தில் குறிப்பாக தாராபுரம் உடுமலைப்பேட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகள் மீது வழக்குப்பதிவு செய்து குண்டாஸ் கொண்ட கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டியும் அதே போல் ரேஷன் அரிசி கடத்தல் நபர்களுக்கு உடந்தையாக செயல்படும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர்கள் மீதும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் நேர்மையான காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை நியமித்து நிரந்தரமாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறுத்திருந்து பார்ப்போம்  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மட்டும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையை..

Related Articles

Back to top button