Uncategorized

மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் பலியால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்! சோழவந்தான் மின் வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் நடத்த விபரீதம்!

மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் பலியால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்! சோழவந்தான் மின் வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் நடத்த விபரீதம்!

 மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ராஜம்மாள் ஆகியோர் பேட்டை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எதிரே 6 பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர் . இதில் வரும் வருமானத்தை வைத்து தான் தங்கள் குடும்பத்தை நடத்தி வருவதாகவும் 07/09/2024  அன்ரு அதிகாலை பால் கறக்க செந்தில்குமார் பசுமாடுகள் கட்டியிருந்த இடத்திற்கு சென்று இருக்கிறார் . அங்கு இரண்டு மாடுகளும் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்துள்ளது. அதன் பின்பு மாடு எப்படி இறந்தது என விவசாயி திகைத்து நின்ற போது அருகில் மின் கம்பி அருந்து  கிடந்ததை கவனிக்காமல் அந்த பசு மாட்டை தட்டி எழுப்ப முயற்சித்து இருக்கிறார்.அப்பொழுது செந்தில்குமார் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி எறிய செந்தில்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் செந்தில் குமாரை மீட்டு சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர் 

இது குறித்து அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கூறும் பொழுது இந்த பகுதியில் உயர் மின்னழுத்த மின்சார மின் கம்பிகள் விவசாய நிலங்களுக்குள் செல்கின்றன.  மின்கம்பிகள் தரமாக இல்லாததால் அடிக்கடி சாதாரண காற்றுக்கு  மின்கம்பி அருந்து விழுந்து பல வாயில்லா ஜீவன்கள் உயிரிழக்கும் வாய சூழ்நிலை தொடர்ந்து  நடந்து வருகிறது. இது குறித்து மின் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் வரக்கூடிய பணியாளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது மாடு வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் எப்படி இவ்வளவு பணம் கொடுக்க முடியும் பணம் கொடுக்கவில்லை என்றால் பழுதடைந்துள்ள மின் வயர்களை சரி செய்ய அலுவலர்கள் வர மறுக்கிறார்கள் என்று கூறினர். மேலும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் தெரிவிக்கின்றனர்  இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை செய்து சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெருமான பசு மாடுகளை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாய குடும்பத்தைச் சார்ந்த செந்தில்குமார் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும்படி இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் தகவல் கிடைத்தவுடன் பசு மாடுகள் இறந்து கிடந்த இடத்திற்கு வந்த மின் துறை பணியாளர்கள் மின் வயரை சுருட்டி தோப்பில் போட்டு விட்டு சென்றதாகவும் மின்சாரம் தாக்கியதால் உயிரிழக்க வில்லை என அலட்சியமாக பதில் சொல்லி சென்று விட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இது குறித்து மாட்டின் உரிமையாளர் செந்தில்குமார் மனைவி ராஜம்மாள் கூறுகையில் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்திருந்தால் மின்சாரம் தாக்கி எனது கணவர்  உயிரிழந்து இருந்தால் எங்கள் குடும்பமே நடுவீதியில் தான் நிற்க வேண்டும். மின்வாரிய ஊழியர்கள் உரிய பதிலளிக்காமல் சென்று விட்டனர் அருந்து கிடந்த மின் கம்பிகளை சுருட்டி தோப்பிற்குள் போட்டு விட்டு சென்று விட்டனர். இதுவரை எந்த ஒரு அதிகாரியும் வந்து பார்க்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக இரண்டு மாடுகளை வாடும் எங்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்  என்றும் பராமரிப்பின்றி இருக்கும் மின் கம்பிகளை மாற்றி   சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ள எனது கணவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்

Related Articles

Back to top button