முதல்வர் செல்லும் சாலைகளை மட்டும் சீரமைத்து மற்ற சாலைகளை சரி செய்யாமல் கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ள குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம்!
முதல்வர் செல்லும் சாலைகளை மட்டும் சீரமைத்து கண்துடைப்பு நாடகம் நடத்தி உள்ள குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம்!
கள ஆய்வில் முதல்வர்” என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் திட்டப்பணிகள் நடைபெறும் பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த மாதம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல் கட்ட பயணம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2-ம் கட்ட ஆய்வுப் பணியை மேற்கொண்டார்.
தற்போது 3-வது கட்டமாக தென் மாவட்டங்களுக்கு வருகை தருகிறார். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறார்.
5 ஆம் தேதி மதுரையில் தென் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் தென் மண்டல ஐஜி டிஜிபி சைலேந்திரபாபு உடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பின்பு இரண்டு ஏக்கர் பரப்பளவில் 18 கோடி செலவில் முடிக்கப்பட்ட கீழடி அகழாய்வு அருங்காட்சியத்தை திறந்து வைத்தார்.
6 அம் தேதி ஐந்து மாவட்ட ஆட்சியர்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
அதன் பின்பு மாலை 3 மணிக்கு சாலை மார்க்கமாக திருநெல்வேலி நாகர்கோவில் செல்கிறார். அங்கிருந்து தூத்துக்குடிக்கு கலா ஆய்வு மேற்கொள்கிறார்.
திருநெல்வேலி நாகர்கோவில் முதல்வர்
வருகையையொட்டி பல்வேறு சாலைகளை போர்க்கால அடிப்படையில்
மாநகராட்சி நிர்வாகம் போடப்பட்ட நிலையில்
முக்கிய சாலையான ஆயுதப்படை சாலையை சீர்செய்ய மறுப்பது ஏன் என சமூக ஆர்வர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதேபோல் நீதிமன்ற சாலையில்
பலகோடி ரூபாய் செலவு
செய்து சாலைகளை போட்டு, மின்விளக்குகளை அமைத்த மாநகராட்சி நிர்வாகம் பட்டுபோன வேம்பு மரத்தை அகற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர், எது எப்படியோ தமிழக முதல்வர் வருவையொட்டி சாலைகள் மற்றும் அனைத்து பணிகளையும் துரிதமாக செய்யும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் முதல்வர் செல்லும் பாதையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் அந்தப் பகுதியில் சேதமடைந்துள்ள மற்ற சாலைகளையும் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் இது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று தான் பொதுமக்களுக்கு சந்தேகம் வரும்.
கன்னியாகுமரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றுவதற்கு முழு முயற்சி மேற்கொள்வேன் என புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் இன்னும் சிறப்பாக செயல்படுத்த தனி கவனம் செலுத்தப்படும். அதேநேரத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். பொதுமக்களின் குறைகள் தீர்ப்பதற்கு அனைத்துத்துறை அலுவலர்களுடன் இணைந்து உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், வளர்ச்சிப் பணிகள், மக்கள் சேவைகள், குறைதீர்க்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தனி கவனம் செலுத்தி அவற்றிற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நகர்புற பகுதிகள் அதிகம். எனவே, நகர்புற நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம், சுற்றுலா, மீன்வளத் துறை உள்ளிட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் கன்னியாகுமரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றுவதற்கு முழு முயற்சி மேற்கொள்வேன்” என்று ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் முதல்வரையே ஏமாற்றுவது போல் ஆகிவிடும். ஆகவே இனிமேலாவது அதிகாரிகள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை கவனத்தில் கொண்டு அந்தப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர் கோரிக்கையாகும்.