முன்கூட்டியே திட்டம் தீட்டி அரங்கேறிய கொலை! தகவல் தெரிந்தும் தடுக்க தவறினாரா சேலம் அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர்!!நடந்தது என்ன!?
சேலத்தில் பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்த் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளன. இவருடைய சொந்த ஊர், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காட்டூர் ஆகும். அந்த ஊரில் ரவுடித்தனம் செய்து வந்த ஆனந்தன், தன் பெயருக்கு முன்னால் ஊரின் பெயரை அடைமொழியாக சேர்த்துக் கொண்டார்.
வீராணம் காவல்நிலையத்தில் ‘ஹிஸ்டரி ஷீட்’ எனப்படும் ரவுடிகள் பட்டியலில் இவருடைய பெயரும் இருந்தது. பேருந்து நடத்துநர் கொலை உள்ளிட்ட இரண்டு கொலை வழக்குகளும் இவர் மீது விசாரணையில் இருந்து வருகிறது. காட்டூர் ஆனந்தனுக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அரசியல் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தார். (பிப். 5, 2023) இரவு 10.30 மணியளவில் காட்டூர் ஆனந்தனும், அவருடைய கூட்டாளி பிரபாகரன் (24) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் காட்டூர் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தனர் அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆனந்தனை வழிமறித்தது. வீச்சரிவாள், பட்டாக்கத்தி சகிதமாக காரில் இருந்து இறங்கிய கும்பலைப் பார்த்ததும் பதறிய ஆனந்தன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த அவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி
கொலை செய்யப்பட்டர். காரிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைப் பிடிக்க வாழப்பாடி டிஎஸ்பி ஹரி சங்கரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சேலம் அயோத்தியாபட்டணம் அடுத்த, வலசையூர் அருகே உள்ள வெள்ளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற பீரோ பட்டறை சரவணன். வயது 46. சரவணனுக்கு வனிதா (40) என்ற மனைவி உள்ளார். வெள்ளாள குண்டம் பகுதியில்
பீரோ பட்டறை வைத்து நடத்தி வருகிறார். சரவணன் மீது காரிப்பட்டி காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் அப்பகுதியில் உள்ள ரௌடி கும்பலுடனும் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2024 நவம்பர் மாதம் 8-ம் தேதி வழக்கம்போல் கணவனும், மனைவியும் வெள்ளாள குண்டத்தில் உள்ள பட்டறையில் தங்கிவிட்டு காலை தங்களின் சரக்கு ஆட்டோவில் வெள்ளியம்பட்டி வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் மீண்டும் அவர்கள் வீட்டில் இருந்து வெள்ளாள குண்டம் பீரோப் பட்டறைக்கு, செல்ல அரூர் மெயின் ரோடு, பனங்காடு பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, இவர்களின் வாகனத்திற்கு பின்னால் சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் சரக்கு ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் காரில் இருந்து இறங்கிய அந்த கும்பல், ஆட்டோவில் இருந்த பட்டறை சரவணனை சாலையில் இழுத்து போட்டு, முகத்தை சிதைத்து, சரமாரியாக வெட்டியதில், படுகாயமடைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். கொலை செய்த கும்பல் காரில் தப்பிச் சென்று விட்டனர். இந்தக் கொலை எதற்கு நடந்தது என கொலையாளிகளை தனிப்படை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நவம்பர் – 10-ம் தேதி திருச்செங்கோடு
அருகே பதுங்கி இருந்த சரவணன் கொலை செய்த கொலையாளிகளான கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்தனின் மைத்துனரான வக்கீல் கணேசன், ஆனந்தனின் மனைவி சத்யா, ஜீவன்ராஜ், சாரதி, சூர்யா, பன்னீர்செல்வம், ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்ட போது பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்த் 2023 பிப்ரவரி 5ஆம் தேதி பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனை கொலை செய்ய உடந்தையாக இருந்த பீரோ பட்டறை சரவணன் கொலை செய்ய கார்த்திக் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் திட்டம் தீட்டி பழிக்குப் பழி கொலை செய்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கொலை செய்யப்பட்ட ரவுடி ஆனந்தனின் மற்றொரு மைத்துனர் கார்த்தி, வெள்ளியம்பட்டியை சேர்ந்த கொலை செய்யப்பட்ட ரவுடி காட்டூர் ஆனந்தனின் உறவினர் கந்தசாமி, அழகாபுரம் பூபாலன்,மேட்டுப்பட்டி தாதனுார் மதியழகன் மற்றும் பல்வேறு வகைகளில் கொலைக்கு உதவிய, குள்ளம் பட்டி அருண்குமார், அருண், கொண்டப நாயக்கன்பட்டி கீர்த்திவாசன், மேட்டுப்பட்டி தாதனுார் லோகநாதன், வெள்ளியம்பட்டி தங்கதுரை, வலசையூர் மோகன் ஆகியோரும் பீரோ பட்டறை சரவணன் கொலையில், முக்கிய குற்றவாளிகள் 10 பேர், போலீசில் சரணடைந்தனர்.
கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனை கொலை செய்ய பணம் உள்ளிட்ட வகைகளில், சரவணன் உதவியதாக கார்த்தி தலைமையிலான கும்பல் சரவணன் கொலை செய்ததாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சரணடைந்த பலர் மீதும் காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திட்டம் தீட்டி அரங்கேறிய கொலை நடக்கப் போவது சேலம் அம்மாபேட்டை காவல் உதவி ஆணையருக்கு முன்கூட்டியே தகவல் தெரியும் என்றும் அந்தக் கொலை நடப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் தவறவிட்டதாக திடீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது! கொலை நடந்ததன் பின்னணி பற்றி அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறிய அதிர்ச்சி தகவல் என்னவென்றால்
சேலம் காரிப்பட்டி காவல் காவல் காவல் நிலைய எல்லைக்குள் கடந்த 2023 பிப்ரவரி ஆறாம் தேதி பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் கொலை செய்யப்பட்டு 20 மாதங்கள் ஆன நிலையில். 2024 டிசம்பர் 8 ஆம் தேதி பீரோ பட்டறை என்ற ரவுடி சரவணன் கொலை செய்யப்பட்டதும் பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் 2023 பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டதும் காரிப்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் கொலை செய்யப்பட்டு
சுமார் 20 மாதங்கள் ஆன நிலையில் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாத காரணத்திற்காக காரிப்பட்டி ஆய்வாளர் நவாஸ் மீது மெமோ கொடுக்கப்பட்டு அவசரகதியில் நவாஸை கருப்பூர் காவல் நிலையத்திற்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதின் காரணம் உள்நோக்கம் மற்றும் மர்மம் இருப்பதாக அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டது. காரிப்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் நவாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் ஏதாவது மர்மம் இருக்கிறதா என சேலம் காவல்துறையில் நேர்மையாக பணியில் இருப்பவர்கள் கூறும்போது போது
பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனை கொலை காட்டூர் ஆனந்தனின் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான அத்தனூர் பாண்டியனை பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனின் மச்சான்கள் கணேசன், கார்த்தி ஆகிய இருவரும் கொலை செய்ய திட்டம் போட்ட குதாகவும் அந்த நேரத்தில் அத்தனூர் பாண்டியன் சிக்காமல் தப்பி விட்டதாகவும்
இந்த தகவலை காவல்துறை சிறப்பு புலனாய்வு தனிப்படை பிரிவு காவலர் ரங்கராஜ், அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர் செல்வத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர் செல்வம் அதைக் கண்டும் காணாமலும் இருந்து விட்டதாகவும் ஆனால் பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலையின் முதல் குற்றவாளியான அத்தனூர் பாண்டியன் சிக்காததால், காட்டூர் ஆனந்தனின் கொலைக்கு உடந்தையாக இருந்த பீரோ பட்டறை சரவணனை நவம்பர் 8-ம் தேதி பழிக்குப் பழி கொலை செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் வீராணம் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் சங்கீதா சேலம் அம்மாபேட்டை உதவி காவல் ஆணையருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்றும் சேலம் அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் நிலப் பிரச்சனை போன்ற புகார்களின் மீது நேரடியாக தலையிட்டு சமரசம் செய்து வைப்பதாக அழைத்து கட்டப்பஞ்சாயத்து போல் விசாரணை நடப்பதை விரும்பாத காரிபட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் நவாஸ் காவல் உதவி ஆணையரை உத்தரவுக்கு செவிசாய்க்காமல் இருந்துள்ளதாகவும் ஆகையால் தான் அவருக்கு மெமோ கொடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்றும் அதன் பின்னர் வீராணம் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் சங்கீதா காரிப்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியிட மாற்ற முயற்ச்சி செய்யப்பட்டதாகவும் ஆனால் மன்வண்ணன் காரிப்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை என காவல் நிலைய வட்டாரத்தில் நேர்மையான காவல்துறையினர் மத்தியில் கூறிய தகவல்கள் ஆகும்.
அதுமட்டுமில்லாமல் சேலம் அம்மாபேட்டை பகுதியில் கஞ்சா மதுபோதையில் இரவு நேரங்களில் அடிக்கடி கொலை கொள்ளை வழிப்பறியில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டுபிடித்து இரும்பு கரம் கொண்டு அடக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் பார்க்க வேண்டிய காவல் துறையின் முக்கிய பொறுப்பில் உள்ள காவல் உதவி ஆணையர் அதையெல்லாம் செய்யாமல் மாறாக அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர் எல்லைக்குட்பட்ட ஏரியாக்களில் வரகம்பாடி, வீராணம், காரிப்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக இரவு இரவு நேரங்களில் பார் மற்றும் கிளப் நடப்பதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்காமல் மாறாக அனுமதி இன்றி சட்ட விரோதமாக கிளப் பார் நடத்தும் உரிமையாளர்களிடம் மாதம் பல லட்சம் ரூபாய் கல்லா கட்டுவதாகவும். அதுமட்டுமில்லாமல் தான் ஒரு வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் இரண்டு வருடத்திற்கு முன் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பாசத்தில் ரவுடி காட்டூர் ஆனந்தனின் மச்சான் வக்கில் கணேசன், மற்றொரு மச்சான் கார்த்தி ஆகியோர் செய்து வந்த கட்டப்பஞ்சாயத்துகளுக்கு ஆதரவாக அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர் செல்வம் மறைமுகமாக உடந்தையாக செயல்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக பல லட்சங்கள் சன்மானமாக வழங்கப்பட்டதாகவும் அது மட்டும் இல்லாமல் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனின் மச்சான் கார்த்தியின் பக்கத்து வீடான கந்தசாமிக்கு சொந்தமான 1 ஏக்கர் 50 செண்ட் நிலப் பிரச்சனையில் கார்த்தி மற்றும் கந்தசாமி இருவரிடமும் நட்பாக பழகி பிரச்சனை இல்லாமல் சமரசம் செய்து வைப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியதற்காக இரண்டு பேரும் அம்மாபேட்டை காவல் உதவி ஆணையருக்கு சன்மானமாக பல லட்சங்கள் கொடுத்ததாகவும் அதிர்ச்சி தகவலை
அப்பகுதி சமூக ஆர்வலர்கள். எது எப்படியோ சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய சேலம் அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா என கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனின் மச்சான்கள் வக்கில் கணேசன், கார்த்தி ஆகியோர் அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர் செல்வத்துடன் பேசிய போன் விவரங்களை (Call History) ஆகியவற்றை சேலம் மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டால் ம பீரோ பட்டறை சரவணன் கொலை நடக்க போகிறது என முன்கூட்டியே காவல் உதவி ஆணையர் செல்வம் அவர்களுக்கு தெரியும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் நேர்மையான காவல்துறையினர் வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என தெரிய வரும்!? எது எப்படியோ பழிக்குப் பழி என தொடர்ந்து கொலைகள் அரங்கேறி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. முன் விரோத கொலைகள் பழிக்குப் பழி கொலைகள் நடப்பதை முன்கூட்டியே தடுக்க வேண்டிய காவல்துறையினர் ஒரு சில நேரங்களில் அலட்சியமாக கண்டும் காணாமல் இருக்கும் பட்சத்தில் இது போன்ற முன்விரோத கொலைகள் நடப்பதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் இருக்க ரவுடிகள் இல்லா சேலம் நகரமாக மாற்ற சேலம் மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.