கடன் வசூல் என்ற பெயரில் பெண்களிடம ஆபாசமாக பேசும் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் !தற்கொலை செய்து கொள்ளும் அப்பாவி பெண் கூலித் தொழிலாளிகள்!நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் நாமக்கல் மாவட்ட காவல் துறை!?
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ,குமாரபாளையம் மற்றும்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ,குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மைக்ரோ பைனான்ஸ் , கிராம வெளிச்சம், அஜ்ஜீவன்
எனப்படும் தனியார் நிதி நிறுவனங்கள் பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுகளுக்கு எந்தவித பிணையமும் இல்லாமல் கடன் தருகிறோம் என்று
கல்லுாரி படிப்பை முடித்த இளைஞர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை கிராமங்கள் தோறும் குறைந்த வட்டிக்கு வழங்கி வருகின்றனர்.
மகளிர் குழு என 10 பெண்களை ஒருங்கிணைத்து முதலில் தலா 20,000 ரூபாய் கடனாக வழங்கப்படுகிறது…அந்த தொகை 52 வாரத்திற்க்கு அசலும் வட்டியும் சேர்த்து வாரம் ரூ625 கட்ட வைக்கிறார்கள்… (52×625=32,500) (அசல் 20,000+12,500வட்டி)
எனப்படும் தனியார் நிதி நிறுவனங்கள் பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுகளுக்கு எந்தவித பிணையமும் இல்லாமல் கடன் தருகிறோம் என்று
கல்லுாரி படிப்பை முடித்த இளைஞர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை கிராமங்கள் தோறும் குறைந்த வட்டிக்கு வழங்கி வருகின்றனர்.
ஏழை எளிய கூலித் தொழிலாளி செய்யும் பெண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விச் செலவு, மருத்துவச் செலவு மற்றும் அவசர தேவைகளுக்காக வாங்கிய கடனை உரிய முறையில் முடிந்த அளவு செலுத்தி வருகின்றனர்.
சில நேரங்களில் கடனுதவி பெற்றுள்ள பெண் கூலித் தொழிலாளிகள் கடன் தொகையை திரும்ப செலுத்துவதில் காலதாமதம் ஏற்படும் நிலையில்
உடனடியாக வீட்டிற்கு நான்கு இளைஞர்கள் வந்து பணத்தை எப்ப கட்ட போகிறீர்கள் என சட்டவிரோதமாக இரவு நேரங்களில் கடன் பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று கடன் தொகையை கேட்பதாகவும் கடன் தொகை செலுத்துவதற்கு தற்போது தங்களால் முடியவில்லை. சிறிது நாள் கால அவகாசம் கொடுங்கள் என்று பெண்கள் கேட்கும்போது
பிடிவாதமாக வசூல் மேலாளர் என்று சொல்பவர் தன்னுடன் நான்கு ஊழியர்களை உடன் வைத்துக்கொண்டு பெண்களிடம் ஆபாச வார்த்தையில் பேசி வருவது மட்டுமில்லாமல் பணம் வாங்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்றும் கொலை மிரட்டல் விடுவது போல அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதால் ஏழை எளிய பெண் கூலித் தொழிலாளிகள் மனரீதியாக பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுவதாகவும். வசூல் என்ற பெயரில் இரவு நேரத்தில் குடி போதையில் வந்து பெண்களிடம் ஆபாச வார்த்தைகள் பேசி மைக்ரோ பைனான்ஸ் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் அட்டகாசம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தொடர்ந்து காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் இவ்வாறு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. நிலையில் 10/09/2024 கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மைக்ரோ பைனான்ஸ் தனியார் கடன் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக நூற்றுக்கணக்கான பெண்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மைக்ரோ பைனான்ஸ் நுண்நிதி நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கு தனி அதிகாரிகளை மாவட்டம் தோறும் நியமிக்க வேண்டும். கட்டாய வசூல் செய்து பெண்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்குத் தள்ளும் நுண்நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முழுவதும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர்கள் கடனைத் திருப்பி கேட்டு அநாகரிகமாக நடந்து கொண்டதால் 11/09/2024 அன்று கார்த்திகா என்ற பெண் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாகவும் தற்கொலைக்கு தூண்டிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனயர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு குமாரபாளையம் காவல் நிலையத்தில் அவர்களது உறவினர்கள் புகார் கொடுத்ததன் பெயரில் (குற்ற எண் 165/2024 ) இந்திய தண்டனைச் சட்டம் 174/3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகவே நாமக்கல் மாவட்டத்தில் தற்கொலையே தீர்வு என பெண் கூலி தொழிலாளிகள் எடுக்கும் தவறான முடிவுகளை தடுத்து நிறுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.