மருத்துவம்

லஞ்சம் வாங்கியதை மறைக்க லஞ்சம் கொடுத்த முதியவரை மிரட்டி எழுதிய காகிதத்தில் கையெழுத்து வாங்கிய பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம்!? நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத்துறை!!?

பத்திரிகை செய்தி எதிரொலிக்குப்பின்பு குருசாமி முதியவரை அழைத்து பேசியது.
50 ரூபாய் கொடுத்தேன் என்று முதியவர் குருசாமி கூறிய போது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் (dressing) கை கால் தலைப் பகுதியில் அடிபட்ட மற்றும் காயங்களுக்கு சுத்தம் செய்து கட்டு போட சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் யாசகம் கேட்டு சாப்பிட்டு சாலை ஓரங்களில் வசிக்கும் 100 கணக்கானோர் வருகின்றனர். அப்படி வரும் இவர்களிடம் மருத்துவ மனையில் பணி செய்யும் கௌதம் மற்றும் பரமசிவம் இரண்டு பேரும் குருசாமி என்ற தியவரிடம் காலில் கட்டு போடுவதற்கு 100 ரூபாய் மேஜை மேல் வைக்க சொன்னதாகவும் அதற்கு அந்த முதியவர் ஐம்பது ரூபாய்தான் இருக்கிறது என்று மேஜைமேல் வைத்ததாகவும் கூறிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியாளர் சுகாதாரத்துறை அனைவரும் விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் உடனே மருத்துவமனை நிர்வாகம் அப்புறம் சிவம் கௌதம் இரண்டு பேரையும் அழைத்து அந்த முதியவரை அழைத்து வந்து என்ன நடந்தது என்று இங்கு சொன்னால் மட்டுமே உங்களை பணிகள் வைத்திருப்போம் இல்லை என்றால் பணியிலிருந்து நீக்கி விடுவோம் என்று உடனே பரமசிவம் கௌதம் இரண்டு பேரும் குருசாமி என்ற அந்த முதியவரை தேடி அழைத்து வந்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் இருப்பிட மருத்துவ அலுவலர் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது . இந்த விசாரணையின் போது முதியவரை கேள்வி கேட்டதில் அவர் பயந்து இவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டுகிறார் அவர் எதுவுமே பேசவில்லை இவர்கள் கேட்கும் கேள்விக்கு மட்டும் அவரை ஆமாம் சொல்ல வைத்துள்ளனர் அதுமட்டுமில்லாமல் இப்போது இவர்கள் இரண்டு பேரையும் ஏதும் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் நடவடிக்கை எடுத்தால் வீட்டிற்கு தான் போக வேண்டும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள் அதெல்லாம் வேண்டாம் என்று அவர் கூறுகிறார் அதன் பின்பு மருத்துவமனை நிர்வாகம் முதியவரிடம் அப்படி என்றால் எழுதிக்கொடுத்து சொல்லுங்கள் நாங்கள் மாவட்ட ஆட்சியாளருக்கு இதை அனுப்ப வேண்டும் என்று கூறுகிறார்கள் அதற்கு அந்த முதியவர் எனக்கு எழுத வராது என்று கூறுகிறார் உடனே நீங்கள் எழுதி தாருங்கள் நான் கையெழுத்து போடுகிறேன் என்று அந்த முதியவர் கூறுகிறார். உடனே இவர்கள் இரண்டு பக்கத்தில் எழுதி வைத்திருந்த காகிதத்தில்அந்த முதியவருடன் கையெழுத்துப் பெற்று அந்த வீடியோ பதிவையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாறாக அவர்கள் செய்த தவறை மறைக்க லஞ்சம் கொடுத்த முதியவரை அழைத்து லஞ்சம் கொடுக்கவில்லை என்று மிரட்டும் தோணியில் எழுதிய இரண்டு காகிதத்தில் கையெழுத்து வாங்கி ஒன்றுமே நடக்காதது போன்று ஒரு நாடகத்தை நடத்தி மக்களை ஏமாற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் லஞ்சம் முறைகேடு நடக்கவில்லை என்று ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்கி உள்ளார்கள் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எது எப்படியோ ஏழை எளிய மக்களுக்காக இருக்கும் அரசு மருத்துவமனையில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்க கூடாது என்பதுதான் அனைவரின் ஆசை. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் கனவை நினைவாக்க தற்போது திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button