லஞ்சம் வாங்கிய ADSP & DSP மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு!

ஒரு லட்சம் லஞ்சம் வாங்கியதாக விருதுநகர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி , நாமக்கல் டி.எஸ்.பி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர்
வழக்கு பதிவு!

நாமக்கல் டிஎஸ்பி லட்சுமணன்
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சேலம் வாழப்பாடி பெரிய கவுண்டாபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் ‘விஜய் ப்ளூ மெட்டல்ஸ்’ என்ற பெயரில் கல்குவாரி நடத்தி குவாரியில் அனுமதி இல்லாத , 121 ஜெலட்டின், 139 டெட்டனேட்டர் பயன்படுத்தி வந்ததாகவும் அது சம்பந்தமாக கல்குவாரியில் காவல்துறையினர் சோதனைக்குச்சென்ற போது சட்டவிரோதமாக அனுமதி இன்றி டெட்டனேட்டர்
வைத்திருந்ததாக குவாரி உரிமையாளர் விஜயகுமார் மீது வாழப்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த சூரியமூர்த்தி சொன்னதாக காவல் ஆய்வாளராக லட்சுமணன் இருந்த 2020 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ப்ளூ மெட்டல் கல்குவாரி உரிமையாளரை விஜயகுமார் கைது செய்யாமல் இருக்க, அப்போது வாழப்பாடி டி.எஸ்.பி. டிஎஸ்பி ஆக இருந்த சூரியமூர்த்தி, 50,000 ரூபாய், காவல் ஆய்வாளர் லட்சுமணன் 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டு பெற்றதாக, விஜயகுமாரின் சகோதரர் ராஜ்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், டி.ஜி.பி., மற்றும் தமிழக அரசுக்கு புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. கிருஷ்ண ராஜுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநரிடம் சமர்ப்பித்தார்.

அறிக்கையை ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகத்தின் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி. சூரிய மூர்த்தி, டி.எஸ்.பி. லட்சுமண தாஸ் ஆகியோர் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐம்பதாயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி சூரிய மூர்த்தி
சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல்துறை காவல் உட் கோட்டத்தில் கடந்த 2017 முதல் 2020ம் ஆண்டு வரை டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்தவர் என்றும் தற்போது அவர், விருதுநகர் மாவட்ட காவல்துறையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல்
சேலம் மாவட்டம், காரிப் பட்டி காவல்நிலையத்தில் கடந்த 2020 முதல் 2021ம் ஆண்டு வரை லட்சுமண தாஸ் என்பவர் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். தற்போது இவர், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.