வசமாக சிக்கிய இருசக்கர வாகன திருடன்! கைது செய்து சிறையில் அடைத்த திருச்செங்கோடு காவல் ஆய்வாளர்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. தொடர் திருட்டில் ஈடுபட்ட வசமாக சிக்கிய நபர் !திருச்செங்கோடு நகர் காவல்நிலை எல்லைக்குட்பட்ட

சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அதிகமாக வாகன திருட்டுகள் நடைபெற்று வருவதாக காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தது.திருச்செங்கோடு நகர மற்றும் தாலுகா போலீசார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.மேலும் பைக் திருட்டு வழக்குகளில் ஏற்கனவே சிக்கியவர்களையும் போலீசார் கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் திருச்செங்கோடு நகர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு வந்த நபரை விசாரித்த பொழுது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தது போலீசாருக்கு சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்தது. உடனடியாக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணையில் அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது.திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தவரின் பெயர் ரமேஷ் தேவனாங்குறிச்சி கந்தசாமி நகரை சேர்ந்தவர் என தெரிய வந்தது.இருசக்கர வாகனங்களை திருடி, அதனை விற்பனை செய்து அதன் மூலம் மது அருந்தி வந்ததாகவும் உல்லாசமாக செலவு செய்து வந்ததாகவும் விசாரணை தெரிவித்துள்ளார்.திருடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் காவல்துறையினர் பறிமுதல் செய்த காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருச்செங்கோடு நகர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய திருச்செங்கோடு நகர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் சிறையில் அடைத்தார்.