வட மாநில கட்டிடத் தொழிலாளர்களுக்குள் பயங்கர தாக்குதலால் படுகாயம்!அச்சத்தில் ராக் மவுண்ட் சிட்டி குடியிருப்பு வாசிகள்! அசம்பாவிதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுப்பாரா ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அடுத்த ராக் மௌன்ட் சிட்டியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வில்லா வீடுகள் அமைந்துள்ளது .

.இங்கு 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு மேலும் சில புதிய வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. .கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்காக சுமார் 30க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 02.02.2025 அன்று தொழிலாளர்களுக்குள் ஏற்பட்ட தாக்குதலில் கடைசியில்

ரத்தக் காயங்களுடன் முடிந்தது.

இதைப் பார்த்த குடியிருப்பு வாசிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களை ராக் மௌன்ட் குடியிருப்பு வளாகத்தில் தங்க வைக்கலாம் இருக்கவும், இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும் தக்க பாதுகாப்பு அளிக்குமாறும் ராக்மௌன்ட் சிட்டி வெல்ஃபேர் அசோசியேசன் சார்பாக

வெள்ளோடு காவல் நிலத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..