மாவட்டச் செய்திகள்

வாகனங்கள் i கழிவு குப்பைகளை சாலையில் கொட்டி தீ வைத்து எரிக்கும் உடுமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் அவல நிலை!

காற்று மாசில்  சிக்கி அவதிப்படும் பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!

திருப்பூர் மாவட்டத்தில்
திருப்பூர் ஒன்றியம்
அவினாசி ஒன்றியம்
பல்லடம் ஒன்றியம்
உடுமலைப்பேட்டை ஒன்றியம்
தாராபுரம் ஒன்றியம்
காங்கேயம் ஒன்றியம்
மடத்துக்குளம் ஒன்றியம்
குடிமங்கலம் ஒன்றியம்
ஊத்துக்குளி ஒன்றியம்
குண்டடம் ஒன்றியம்
வெள்ளக்கோயில் ஒன்றியம்
மூலனூர் ஒன்றியம்
பொங்கலூர் ஒன்றியம்  13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும் உடுமலை ஊராட்சி ஒன்றியம்.

உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் சின்னவீரம்பட்டி,
குறிஞ்சேரி,
போடிபட்டி,
கணக்கம்பாளையம்,
கண்ணமநாயக்கனூர்,
பள்ளபாளையம்,
குரல்குட்டை,
ஆலாம்பாளையம்,
ஜல்லிபட்டி,
குறிச்சிக்கோட்டே,
குருவப்பநாயக்கனூர்,
தும்பலபட்டி,
ஆண்டியகவுண்டனூர்,
சின்னகுமாரபாளையம்,
மானுப்பட்டி,
எலையமுத்தூர்,
கல்லாபுரம் என 38 உராட்சி கிராமங்கள் உள்ளது.உடுமலைப் பேட்டை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உடுமலைப்பேட்டை நகரத்தில் இயங்குகிறது.
உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட

பள்ளபாளையம் ஊராட்சி மன்றம் உள்ளது. இந்த ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியில் இருக்கும் தூய்மை பணியாளர்கள் வீடுகள் மற்றும் சிறு தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில்  கழிவு குப்பைகளை  சேகரித்து அந்த குப்பைகளை பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு விளைவிக்காத ஒதுக்குப்புறமாக இருக்கும் திட மேலாண்மை திடக்கழிவு கூடத்தில்  கொட்டி அதை பராமரிக்க வேண்டும்.
ஆனால் பள்ளபாளையம் ஊராட்சி மன்றம் அலுவலகத்தில் பணியில் இருக்கும்
தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் கழிவு குப்பைகளை இட மேலாண்மை திடக்கழிவு கூடாரத்தின் கொட்டாமல் பொதுமக்கள் வாகனங்களில் அதிகமாக செல்லம் முக்கிய சாலையான

உடுமலை மூணாறு செல்லும் திருமூர்த்தி மலை பிரிவுக்கு அருகே  சாலை ஓரமாக உள்ள பள்ளத்தில் குப்பைகளை கொட்டி குப்பை கொட்டும் கிடங்காக பயன்படுத்தி வருவதும் மட்டுமல்லாமல் அந்த குப்பைகளை தீ வைத்து எரித்து வருவதாகவும் தீ வைத்து எரித்து வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகைமண்டலங்களால் சூழ்ந்து  காற்று மாசால்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொது மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாகவும் இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்படி கொட்டப்பட்டு இருக்கும் குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதாகவும் கொசுக்கள் உற்பத்தி நிலையமாக மாறி  சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொசு தொல்லையால் டெங்கு போன்ற அபாயமான தொற்று நோய்கள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர். இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியில் இருக்கும் ஒரு சிலரிடம் விசாரிக்கும் போது
பள்ளபாளையம் ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் கடைகள் மற்றும் சிறு தொழிற்சாலைகளில் சேகரிக்கும் கழிவு குப்பைகளை எடுத்துச் செல்ல வாகனங்கள் மற்றும்  பாதுகாப்பான உபகரணங்கள் இல்லை என்றும் பலமுறை ஊராட்சி மன்றத் தலைவர் உடுமலை ஊராட்சி ஒன்றிய   வட்டார  வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் வாகனம் மற்றும் உபகரணங்கள் வழங்க முன்வரவில்லை  என்றும்  இதனால் ஊராட்சி மன்றத்திற்கான  திட்ட மேலாண்மை கிடங்கு இருந்தும் அங்கு கொண்டு போய் கழிவு குப்பைகளை கொட்ட முடியவில்லை எனவும் ஊராட்சி மன்ற தலைவர்  வேதனையுடன் தகவலை தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் கொடுத்தும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
எது எப்படியோ சுகாதாரமற்ற நிலையில் கொட்டப்படும் கழிவு குப்பைகளை தீ வைத்து எரித்து வருவதால் அப்பகுதி முகம் முழுவதும் புகைமண்டலமாக இதனால் மூச்சுத் திணறல் மற்றும் தொற்றுநோய் பரவுவதை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  விழிப்புணர்வுகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தொடர்ந்து நடத்தி வருவதும் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டு உடனடியாக பொதுமக்கள் நலன் கருதி சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்து சாலைகளில் கழிவு குப்பைகளை கொட்டும் அவல நிலையை ஏற்படுத்திய உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி  மீது நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆறு மாதம் முன்பு ஊராட்சி மன்ற நிரந்தரச் செயலர் நியமனம் செய்யாததால் தற்காலிக செயலர் சர்மிளா வராததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர் பூட்டி

ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் பத்திரிகையாளரிடம் கூறியபோது  நான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதற்காகவே பள்ளபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நிரந்தர செயலரை நியமனம் செய்யாமல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியம் காலம் தாழ்த்தி வருவதாகவும் ஆனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் அனைவருக்கும் இது சம்பந்தமாக விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பதாக குற்றச்சாட்டை வைத்தால்பொறுத்திருந்து பார்ப்போம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை!

Related Articles

42 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button